Siragadikka Aasai: மீனாவிற்கு வந்த பெரிய ஆர்டர்… முத்துவின் முயற்சி கைக்கொடுக்குமா? என்ன நடக்கும்?

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
சீதா மற்றும் இந்திரா இருவரும் அருணிற்கு நன்றி சொல்ல அவர் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அருண் அம்மா சீதாவின் அம்மாவை தனியாக அழைத்துச் சென்று வீட்டை சுற்றிக் காட்டிக்கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அருண் சீதாவை அழைத்துக் கொண்டு ரூமிற்கு போய் இப்பவே அம்மாகிட்ட சொல்லி கல்யாண விஷயத்தை பேசிட சொல்லவா எனக் கேட்கிறார். எங்களுக்கு எங்க அக்கா மாமா தான் ரொம்ப முக்கியம். அவங்களிடம் தான் உங்களை முதலில் அறிமுகப்படுத்துவேன் என்கிறார்.
எப்ப அவங்களை பார்க்க வைப்ப எனக் கேட்க சீக்கிரம் அழைத்து செல்கிறேன் என்கிறார் சீதா. பின்னர் சீதா மற்றும் இந்திரா கிளம்ப அருணின் அம்மா பூ பழத்துடன் அனுப்பி வைக்கிறார். வெளியில் வரும் இந்திரா நல்ல பையனா இருக்கான். உனக்கு மட்டும் ஹெல்ப் பண்ணிருக்கானா இல்ல என இழுக்கிறார்.
சீதா ஆட்டோ வருவதாக சமாளித்து கிளம்பி விடுகின்றனர். புதிதாக ஒரு மண்டபத்தில் ஆர்டர் என எல்லோரும் வர சொல்லி இருக்கின்றனர். அப்பொழுது அங்க வரும் சிந்தாமணி ஆர்டர் வந்தா எனக்கு தர வேண்டியதுதானே. இந்த நன்றி சிண்டெல்லாம் எதுக்கு கூப்பிட்டு இருக்கீங்க என்கிறார்.

இப்போ ஆர்டர் தர போறது ஒரு கார்ப்பரேட் கம்பெனிகாரவங்க. அவங்களுக்கு உங்க ரெண்டு பேரோட டிசைனும் புடிச்சிருக்கு. ஆனா உங்களில் யார் டெபாசிட் ஆக இரண்டு லட்சத்தை கட்டுறிங்களோ? அவங்களுக்கு தான் இந்த ஆர்டர் என கூறி விடுகின்றனர். இதைக் கேட்டு மீனா அதிர்ச்சி அடைந்தாலும் இன்னும் இரண்டு நாளில் தன்னால் முடிந்த அளவு தயார் செய்வதாக சொல்லிவிட்டு வந்து விடுகிறார்.
வீட்டிற்கு வரும் மீனா முத்துவிடம் இந்த விஷயத்தைக் கூற பணத்தை எப்படி தயார் செய்யலாம் என இருவரும் யோசிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அண்ணாமலையிடம் கேட்கலாம் என முடிவு செய்து குடும்பத்தினர் முன் இந்த விஷயத்தை சொல்லி கேட்கின்றனர்.
அப்பொழுது விஜயா மற்றும் மனோஜ் இருவரும் திமிராக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவன்கிட்டயும் காசு இல்ல. இப்போ உங்களிடம் பேச வந்து இருக்கானா புரியுதா 2 லட்சம் கேட்க வந்திருக்கான் என்கிறார் விஜயா. முத்து அவரை நக்கலாக பார்த்து கொண்டு இருக்கிறார்.