Siragadikka Aasai: அருணால் மீனாக்கு கிடைக்க போகும் ஆர்டர்... கடும் கோபத்தில் முத்து!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
சீதா அருணிடம் கால் செய்து வரக் கூறுகிறார். அவர் சீதா என்ன விஷயம் என கேட்க உங்களுக்கு தெரிந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி தர முடியுமா எனக் கேட்க நான் செய்யும் தொழிலில் இதெல்லாம் செய்ய முடியாது என கூறி விடுகிறார் அருண்.
சரி நான் அப்ப வெளியில் பார்த்துக் கொள்கிறேன் என சீதா கூறக் என்னிடமே காசு இருக்கு நான் தருகிறேன் என்கிறார். அதெல்லாம் வேண்டாம் நாமலே இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கோம் என சீதா கூறுகிறார். ஆனால் அருண் அவரை சமாதானம் செய்து பணத்தை எடுத்து கையில் கொடுத்து விடுகிறார்.
வீட்டில் மீனா கோபமாக இருக்க அப்போது வரும் முத்து காபியை ஊற்றி கொடுக்க கேட்கிறார். மற்றதெல்லாம் ஊற்றி குடிக்கிறீங்களா இதையும் அப்படியே குடிங்க என்கிறார். அப்போ அங்கு ஸ்ருதி மற்றும் ரவி வர என்ன விஷயம் என கேட்கின்றனர்.

மீனா நான் நடந்த விஷயங்களைக் கூட அண்ணி சொல்றது சரிதானடா அவர் வேலையை அவர் செய்கிறார் என கூறுகிறார். நீயும் அந்த கான்ஸ்டபிலுக்கு சப்போர்ட் பேசாத. அவன படி அளக்கிறான். தொடர்ந்து முத்து கோபத்துடன் பேசிக் கொண்டிருக்க மீனா கடுப்புடன் அங்கிருந்து சென்று விடுகிறார்.
இதை எடுத்து சீதா மீனாவை இடையில் பார்த்து ஒரு லட்சத்தை கொடுத்து உடனே டெபாசிட்டை கட்டும்படி சொல்லிவிடுகிறார். முதலில் மீனா தயங்க அவரை வற்புறுத்தி சீதா கொடுத்து விடுகிறார். உனக்கு யார் இந்த உதவியை செய்தார்கள் என கேட்க சீதாவும் சமாளித்து விடுகிறார்.
ரெஸ்டாரன்ட்டில் ஸ்ருதி வேலை செய்து கொண்டிருக்க அங்கு வரும் இருவர் அவரை நக்கல் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் சூப் கேட்க கடுப்பாகும் ஸ்ருதி அதில் மிளகாய் தூளை கொட்டி வந்து கொடுக்க அவர்கள் கத்தி விடுகின்றனர். அப்போ ரவி மற்றும் நீத்து அங்கு வருகின்றனர்.
ஸ்ருதி நடந்த விஷயங்களை கூற நீத்து இத நீங்க என்கிட்ட தான் சொல்லி இருக்கணும். நீங்களா இப்படி நடந்திருக்கக்கூடாது. இதனால் என்னுடைய ரெஸ்டாரன்ட் மரியாதை கெட்டுப் போகும் தானே என்கிறார். இதனால் ஸ்ருதி கடுப்பாகி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.
இரவு தூங்கும் நேரத்தில் மனோஜுக்கு காய்ச்சல் வந்து விடுகிறார். அவருக்கு மாத்திரை கொடுக்கும் ரோகிணி ஆறுதலாக பக்கத்தில் இருக்க மனோஜ் நீ போய் கீழ படு எனக் கூறிவிடுகிறார். இதனால் ரோகிணி அருகில் அமர்ந்து அழுது கொண்டு இருக்கிறார்.