Siragadikka Aasai: மனசாட்சி இல்லாம பேசாதீங்க விஜயா… ரோகிணி மூக்கை உடைத்த மீனா…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் தொகுப்புகள்.
மீனாவின் பணம் திட்டு போன விஷயத்தை முத்து மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். போலீஸில் கேஸ் கொடுத்தியா எனக் கேட்க அதெல்லாம் கொடுத்தாச்சுப்பா என்கிறார். உடனே மனோஜ் ஏற்கனவே என்னுடைய 30 லட்சமே போச்சு. அதையே கண்டுபிடிச்சு தரலை.
இந்த 2 லட்சத்தையா கண்டுபிடிச்சு கொடுத்திட்ட போறாங்க என்கிறார். முத்து நீ ஏமாந்து போனதும் இதுவும் ஒன்னு இல்லை என்கிறார். அண்ணாமலை சீதா பிரண்டிடம் கடன் வாங்கி கொடுத்த காசு. அதனால் விஜயாவிடம் அவர் நகையை கொடுக்கும்படி கேட்கிறார்.
ஆனால் விஜயா தன்னால் தர முடியாது எனக் கூறிவிடுகிறார். அண்ணாமலை தொடர்ந்து கேட்க விஜயா மீனாவை பேராசைக்கு வந்த வினை என்கிறார். இதில் கடுப்பாகும் மீனா எனக்கு எந்த பேராசையும் இல்லை. ஒரு ஆர்டர் வந்தது அதை எடுக்க தான் நினைத்தேன் என்கிறார்.

உடனே ரோகிணி இப்ப எதற்காக மீனா ஆண்ட்டியிடம் எதிர்த்து பேசுறீங்க எனக் கேட்க நான் எந்த தப்பும் பண்ணலை. யார் பணத்தையும் ஏமாற்றல. அடுத்தவங்க நிறைய வித்து அதுக்கு போலி நகை வாங்கி வைக்கல. பொய் சொல்லல என மூன்று வாயையும் அடைத்து விடுகிறார்.
மீனா அண்ணாமலையிடம் திரும்பி எனக்கு இவங்களோட பணம் வேணாம் மாமா என அவரிடமும் சொல்லி விடுகிறார். பின்னர் மீனாவைப் பார்க்க சீதா, சத்யா, அவர் அம்மா வர விஜயா அவர்களிடம் திமிராக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர்களை சாப்பிட்டு போக சொல்கிறார் முத்து.
இங்க சாப்பாடெல்லாம் இல்லை என விஜயா கூற நான் வாங்கி கொடுத்துக்கிறேன் என்கிறார் முத்து. முத்து கல்யாண மண்டபம் அட்ரஸ் வாங்கி கொண்டு போய் அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது அந்த ஆர்டரை யாரிடம் கொடுத்தார்கள் என கேட்க சிந்தாமணி என தெரிந்து விடுகிறது.
மீனாவை பார்க்க வரும் பார்வதி இடமும் விஜயா அவர் குறித்து திட்டிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் பார்வதி மீனா அப்படிப்பட்ட பெண் இல்லை என அவருக்காக சப்போர்ட் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்.