Siragadikka Aasai: மீனாவால் தப்பித்த ரவி… ரோகிணி வாங்கிய பல்ப்… கடுப்பில் விஜயா!

by Akhilan |
Siragadikka Aasai: மீனாவால் தப்பித்த ரவி… ரோகிணி வாங்கிய பல்ப்… கடுப்பில் விஜயா!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

சிந்தாமணி தான் பணத்தை எடுத்தாங்க என இவர்களுக்கு எப்படி தெரியும் என விஜயா கேட்கிறார். இந்த பணத்தை அவங்க வீட்டில் தான் எடுத்தோம் எனக் கூற மனோஜ் அப்போ திருடினீங்களா எனக் கேட்க அதுக்கு பேரு பறிமுதல் தான் திருட்டு இல்லை என்கிறார்.

எப்படி நீங்க எடுத்தீங்க என அண்ணாமலை கேட்க இன்கம்டேக்ஸ் அதிகாரி போல உள்ளே போய் இந்த மஞ்சப்பையை எடுத்து வந்துவிட்டதாக சொல்கிறார். மனோஜ் இதுவே பெரிய கிரிமினல் தான் எனக் கூற அவங்க வழியில போய் தான் செய்ய முடியும் என்கிறார்.

அண்ணாமலை விஜயாவை கண்டித்துவிட்டு மீனா நீ நியாயமா இருக்க ஒருநாள் நல்ல இடத்துக்கு வருவ என்கிறார். ரவி, ஸ்ருதியிடமும் நன்றி சொல்ல அவர்களும் எல்லா முத்துவால் தான் என்கிறார். பின்னர் முத்து மற்றும் மீனா ரொமான்ஸ் செய்கின்றனர்.

மறுநாள் காலை மீனா, சீதாவை சந்தித்து திரும்ப பணம் கிடைத்துவிட்டதாக சொல்லி கொடுக்கிறார். நடந்த விஷயத்தையும் முத்து பிளான் செய்து பணத்தை எடுத்த விவகாரத்தினை சொல்ல சீதா சூப்பர் ஐடியா இவங்களை இப்படிதான் பண்ணனும் என்கிறார்.

பணத்தை உன் பிரண்ட் கிட்ட கொடுத்துடு எனச் சொல்லி கிளம்புகிறார். சீதாவை பார்க்க அருண் திடீரென வருகிறார். சீதா நீங்க என்ன இங்க எனக் கேட்க நான்தான் உன்னை பார்க்க வந்ததாக கூறுகிறார். சீதா மீனா கொடுத்த பணத்தை எடுத்து அருணிடம் கொடுக்கிறார்.

அக்காகிட்ட இருந்து திருட்டு போன பணத்தை மாமா தேடி கண்டுபிடித்து விட்டதாக சொல்கிறார். அருணிடம் கொடுக்க அவரும் வாங்கிக்கொள்கிறார். எப்போ நேரில் பார்க்கலாம் எனக் கேட்க அதுக்கு நேரம் வரும் அப்போ சொல்கிறேன் என்கிறார்.

ரவி ரெஸ்டாரெண்ட்டில் நீத்துவுடன் உணவை ரிவியூ செய்ய ஆள் வருவதாக சொல்கிறார். அவர் வந்துட்டு போனால் நமக்கு நிறைய கஸ்டமர் வருவார்கள் எனக் கூறுகிறார். நீத்து ரெஸ்டாரெண்ட்டை சரியா பார்க்க ஸ்ருதிக்கும், ரவியை சாப்பாடு செய்யவும் சொல்லிவிட்டு செல்கிறார்.

அந்த நேரத்தில் மீனா வர ரவி மற்றும் ஸ்ருதிக்கு சாப்பாடை எடுத்து வருகிறார். என் பணம் கிடைக்க உதவியதற்காக வாழப்பூ வடையும், ஸ்வீட்டும் செய்து வந்து இருப்பதாக கொடுத்து செல்கிறார். அந்த நேரத்தில் சரியாக ரிவியூ செய்யும் ஆள் வந்து விடுகிறார்.

அவருக்கு ரவியை அறிமுகம் செய்து வைத்துவிட்டு சாப்பாட்டை எடுத்து வரச் சொல்லுகிறார். ஆனால் ரவி உடனே சாப்பாடு வராது. இன்னும் 15 நிமிடம் ஆகும் எனக் கூற அய்யோ லேட்டான பேட் ரிவியூ சொல்லுவாங்க எனக் கூற உடனே ஸ்ருதி மீனா கொண்டு வந்த ஸ்வீட் மற்றும் வடையை முதலில் ஸ்டாட்டராக கொடுக்கலாம் என ஐடியா கொடுக்கிறார்.

நீத்து இது சரியா இருக்குமா எனக் கேட்க ரவி பயப்படாதீங்க. எங்க அண்ணி என்னை விட நல்லாவே செய்வாங்க. அதுல எந்த பிரச்னையுமே இல்லை எனக் கூறி மீனா செய்ததை அவருக்கு கொடுக்க நீத்து பயந்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் ரிவியூ செய்தவர் வடை மற்றும் ஸ்வீட்டை ஆஹாஓஹோ என புகழ்கிறார்.

நீத்து தேங்க்ஸ் எனக் கூற ஸ்ருதி நீங்க மீனாவுக்கு தான் நன்றி சொல்லணும் எனச் சொல்லுகிறார். ரிவியூ செய்தவர் எல்லா சாப்பாடும் நன்றாக இருக்கு ஆனால் வாழைப்பூ வடை தான் அல்டிமேட் என்கிறார். நீத்து அவர்களை பாராட்டி ரவி மற்றும் ஸ்ருதிக்கு பரிசாக பணம் கொடுக்கிறார்.

வீட்டில் எல்லாரும் டீ குடிக்க ரோகிணி மட்டும் தனியாக உட்கார்ந்து இருக்கிறார். ரோகிணி மூக்கை உடைக்கும் படி விஜயா பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது வரும் ரவி மற்றும் ஸ்ருதி அங்கு நடந்த விஷயத்தை சொல்லி மீனாவுக்கு தேங்க்ஸ் சொல்லுகிறார்.

இதுக்கெல்லாம ரிவியூ வரும் எனக் கேட்க மனோஜ் அதான் இப்போ டிரெண்ட் என்கிறார். நீத்து கொடுத்த பரிசை மீனாவிடம் கொடுக்க அவர் மறுத்து விடுகிறார். ஆனால் நல்ல ரிவியூ வந்ததுக்கு பாதி ஷேராச்சும் எடுத்துக்கணும் எனச் சொல்லி பாதியை கொடுக்கிறார். இதை பார்க்கும் ரோகிணி அமைதியாக இருக்கிறார்.

Next Story