Siragadikka Aasai: மீனாவால் கிடைக்க போகும் மனோஜ் பணம்… ரோகிணிக்கு நல்லது உடனே நடந்துருமே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
பார்வதியை பார்க்க வரும் ரோகிணி தன்னிடம் விஜயா நடந்து கொள்ளும் முறை குறித்து கூறிக் கொண்டிருக்கிறார். தன்னை ஷோரூம் கூட ஆன்ட்டி செல்ல விடுவதில்லை அவர்களிடம் எனக்காக பேச வேண்டும் என பார்வதியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு பார்வதி விஜயாவிற்கு ஒருவரை பிடித்து விட்டால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிவிடுவாள். அதுவே அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் கீழே போட்டு மிதித்து விடுவாள் என சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென காலிங் பெல் அடிக்கிறது. பார்வதி விஜயா தான் வந்திருக்கலாம் எனக் கூற ரோகிணியை ரூமில் மறைந்து கொள்ள கூறுகிறார்.
அப்போது வீட்டிற்குள் வரும் விஜயா உடனே வசியம் வைக்கும் ஒருவரை பார்க்க வேண்டும் என கூறுகிறார். எதற்கு என பார்வதி கேட்க ரோகிணி மற்றும் மனோஜை பிரிக்க வேண்டும். மனோஜிற்கு வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன் எனக் கூற கேட்டுக் கொண்டிருக்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

ரூமில் சென்று பேசலாம் என விஜயா கூட அங்கு ஏசி ரிப்பேர் எனக்கூறி விஜயாவை வீட்டிற்கு அனுப்புகிறார் பார்வதி. உள்ளே வரும் ரோகிணி இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எனக்கும் அந்த வசியக்காரரை பார்க்கணும் எனக் கூற ஒரு ஏன் என்கிறார் பார்வதி.
இவங்க செய்யும் வசியம் பழிக்காமல் போகணும் தானே அதற்காகத்தான் எனக் கூறுகிறார். நான் ரெண்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு உன்னிடம் சொல்கிறேன் என ரோகிணியை அனுப்பி வைக்கிறார் பார்வதி. வித்யாவை பார்க்க வருகிறார் முருகன்.
அவருக்கு ஸ்வீட் வாங்கி வந்திருக்க செகண்ட் ஹேண்டில் ஒரு வீடு பார்த்திருப்பதாகவும் சொல்கிறார். எதற்காக நான் பார்க்கணும் என வித்யா கேட்க நீங்கதானே வாழப் போறீங்க அதற்காக தான் நீங்க வந்து பார்த்து ஓகே பண்ணுங்க என சொல்கிறார்.
உடனே வித்யா எனக்கு காதலுக்கு ஐடியா கொடுத்தவங்க இருக்கிறாங்க அவங்களை அழைச்சிட்டு வரேன் எனக் கூற அவரும் எனக்கும் ஐடியா கொடுத்த ஒருத்தர் இருக்காரு எனக் கூற நாளை அவர்களை அழைச்சிட்டு வரலாம் எனக் கூறி செல்கிறார்.
பூ கொடுக்க மீனா ஒரு கடைக்கு வர அங்கு கதிர் செல்வதை பார்த்து விடுகிறார். அவரை துரத்தி செல்ல பார்க்க அந்த நேரத்தில் கடைக்காரர் டெக்கரேஷன் ஆர்டர் ஒன்றைக் கொடுக்கிறார். இதனால் அவரை பாலோ செய்ய முடியாமல் மீனாவிற்கு போய்விடுகிறது. கதிர் முருகனிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவரை துரத்திக்கொண்டு ஒரு தெருவிற்கு வரும் மீனாவிற்கு வித்யா கால் செய்து அழைக்கிறார். என்னவென்று விசாரிக்க வீட்டிற்கு வர கூறுகிறார். வந்தவுடன் தன்னுடைய காதலர் ஒரு வீடு வாங்க இருப்பதாகவும் அதை சென்று பார்க்க வேண்டும் என கூற மீனா வருவதாக ஒப்புக்கொள்கிறார். அவர் சென்றுவிட அந்த நேரத்தில் ரோகிணி வருகிறார்.
எதற்காக மீனா இங்கு வந்துட்டு போறா எனக் கேட்க தான் வாங்க இருக்கும் பிளாட் நாளை அழைச்சிட்டு போகணும் அதான் என்கிறார் வித்யா. என்கிட்ட சொல்லலை என ரோகிணி கேட்க நீ எனக்கு பிரண்ட். அவங்க என் லவ் குரு என ரோகிணியை கடுப்பேற்றுகிறார்.