Siragadikka Aasai: மீனாவிற்கு வரும் திடீர் பிரச்னை… மாட்டப்போகும் முத்து? என்ன நடக்க போகுதோ?

siragadikka aaasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
கோயிலுக்கு வரும் மீனா, சீதா மற்றும் இந்திராவை சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறார். சீதா பொறுப்பா இருக்கா என மீனா ஆமா. உனக்கு கிடைச்ச மாதிரி நல்ல மாப்பிள்ளை அவளுக்கும் கிடைச்சிட்டா நல்லா இருக்கும் என்கிறார். சீதா சாமி கும்பிட கோயிலுக்கு செல்கிறார்.
அப்போ அவர் கால் தடுக்கிறது. இதை பெண் சாமியார் பார்க்கிறார். சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் மீனாவை அவர் அருகில் அழைக்கிறார். என்னாச்சும்மா எனக் கேட்க நான் பல நாளா குறி சொல்லிட்டு இருந்தேன்மா. இப்போ கோயிலுக்கு தான் போறேன். குறி சொல்றது இல்லை என்கிறார்.
ஆனால் உன்னை பார்த்தால் சொல்ல தோணுச்சு. நீ எதுவும் அதற்கு பரிகாரம் செய்வனு தான் சொல்றேன்மா. உன் கணவருக்கு நேரம் சரியில்லை. அவருக்கு பின்னாடி சதி வலையை பின்னிட்டு இருக்காங்க. அவரை கவனமா இருக்கணும் என்கிறார்.
இதில் பதறும் மீனா, என்ன செய்யணுமா எனக் கேட்க நீ நீயா இருமா. உன் உதவியை வாங்கினவங்க நீ நல்லா இருக்கணும் சொன்னா உன் கணவர் மேல வர ஆபத்து பனி போல விலகிரும் என்கிறார். மீனா கலங்கியபடியே செல்கிறார். வீட்டில் முத்து இருக்க மீனா வருகிறார்.

மறுபக்கம், வீட்டிற்கு வரும் மீனா முத்துவிடம் நடந்த விஷயங்களை கூறுகிறார். கோபம் படக்கூடாதாம். நீங்க வாயை அடக்குங்க என்க அதற்கு ஒரு ஐடியா இருக்கு என்கிறார். என்ன என மீனா கேட்க சரக்கு அடிச்சா கோபமே வராது என்கிறார். இதில் கடுப்பாகும் மீனா தலையணையை எடுத்து அடிக்கிறார்.
அப்போ அவர் அடிக்கும் போது விஜயா மீது தலையணை பட அவர் திட்ட தொடங்குகிறார். அண்ணாமலையிடம் இவ வேணும்னே என் மேல தலையணையை எடுத்து அடிச்சிட்டா என்கிறார். ஆனால் மீனா நான் வேணும்னே அடிக்கலை. நீங்க என்ன அடிச்சிக்கோங்க என்கிறார்.
அப்போ விஜயா அடிக்க போக மீனாவை முத்து இழுத்து விடுவதால் அது மனோஜ் மீது விழுந்து விடுகிறது. அவர் திட்ட அண்ணாமலை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார். ரோகிணி மற்றும் வித்யா இருவரும் இருக்க அப்போ முருகன் வருகிறார்.
அவரை ரோகிணிக்கு அறிமுகம் செய்து வைக்க வித்யா குறித்து ரோகிணி ஆஹாஓஹோ என பெருமையாக பேசுகிறார். இந்த மாதிரி ஒரு பெண் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் எனக் கூறுகிறார். அவர் சென்று விட ரோகிணியின் அம்மா வந்து கிரிஷ் விஷயம் தெரியுறதுக்கு முன்னாடி நீயே சொல்லு என்கிறார்.
ஆனால் ரோகிணி மொத்தமா என் வாழ்க்கையை அழிக்கணும் அதானே என்கிறார். முத்து, மீனாவிடம் சொல்லலாம். அவங்க உனக்கு உதவி செய்வாங்க எனக் கூற மனோஜை விட அவங்களை நம்பு என வித்யா கூற நீ மனோஜை பத்தி பேசாத. என் வாழ்க்கையை பத்தி எனக்கு தெரியும் என்கிறார்.