அருண் காதலில் சிக்கலில் சீதா… மனோஜை கவுக்க ப்ளான் போடுகிறாரா ரோகிணி… சிறகடிக்க ஆசை அப்டேட்!

siragadikka aasai
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
முத்து சவாரி ஒன்றை இறக்கிவிட்டு வர அப்போது முருகன் அங்கு இருக்கிறார். அவர் முத்துவுக்கு ஸ்வீட் கொடுக்க என்ன விசேஷம் என்ன சொல்ல ஒரு முக்கியமான நாள் என்கிறார் முருகன். பிறந்த நாளா என கேட்க எப்படி அண்ணா கரெக்டா சொன்னீங்க என்கிறார் முருகன்.
ஆண்களுக்கு திருமணம் ஆவதற்கு முன் ஸ்பெஷல் என்றாலே அது பிறந்தநாள் தான். அதுக்கப்புறம் தான் எல்லாம் மாறிடுது என்கிறார். லவ் எல்லாம் ஓகே ஆயிடுச்சா எனக் கேட்க ஆச்சு அண்ணா என்கிறார் முருகன். அந்த பொண்ணுக்காவது கல்யாணம் ஆயிடுச்சா கேட்டியா என முத்து கேட்க இல்ல விசாரிச்சிட்டேன் என்கிறார்.
இப்ப அந்த பொண்ணு கிட்ட லவ் சொல்ல தான் போய்கிட்டு இருக்கேன் என்கிறார். சரிப்பா அதுக்கு முன்னாடி இந்த கோயிலுக்கு போயிட்டு போவோம் என் மனைவி தான் இதை சொல்லுவா எனக் கூறி மீனாவிற்கு தெரிந்த கோவிலுக்கு முருகனை அழைத்து செல்கிறார் முத்து.
அம்மாவை பார்க்கும் மீனா வீட்டில் நடந்த விஷயங்களை கூறிக் கொண்டிருக்கிறார். ரோகிணி சொன்ன எல்லாமே போய் என கூற இந்திரா அதிர்ச்சி அடைகிறார். ஸ்ருதியாவது உண்மையான பணக்கார பொண்ணு தானா? இல்ல அவளும் ஏமாற்றுகிறாளா என கேட்க ஏம்மா இப்படி கேட்கிற என்கிறார் மீனா.

அவங்க ரொம்ப நல்ல பொண்ணு. உண்மையான பணக்கார பொண்ணு தான். எனக்கு டெக்கரேஷன் ஆர்டர் தேவைப்பட்டப்ப அவங்க தான் எல்லா உதவி செஞ்சாங்க. எனக்கு ரொம்ப ஆதரவா இருக்காங்க என்கிறார். உடனே இந்திரா ஆமாம் அந்த பொண்ணு நாங்க வரும்போதும் மரியாதையா பேசும் எனக் கூறுகிறார்.
சீதா எங்கு என மீனா கேட்க கோயிலுக்குள் இருப்பதாக கூறுகிறார் அவர் அம்மா. அவரை பார்த்து பேச மீனா கோயிலுக்கு செல்ல சீதாவை பார்க்க அருண் வந்து விடுகிறார். வீட்டில் கல்யாண விஷயம் பேசலாமா என அவர் கேட்க இப்போவே நாம் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறார் சீதா.
மீனா வந்து கொண்டு இருக்க ஐயர் மற்றும் தெரிந்தவர்களிடம் பேசிவிட்டு வருவதற்குள் அருண் சென்று விடுகிறார். வாசலில் முருகனை பார்க்கும் அருண் காதலை சொல்லியாச்சா ப்ரோ எனக் கேட்க அதற்காக தான் சாமி கும்பிட வந்தேன். அண்ணன் அழைத்து வந்ததாக கூறுகிறார்.
இதை பார்க்கும் முத்துவிடம் தெரிந்த போலீஸ் நல்லவரு. அவரு ஒரு பொண்ணை காதலிப்பதாகவும் சொல்கிறார். லவ் பண்ற பொண்ணு பாவம் எனக் கலாய்த்து விட்டு செல்கிறார் முத்து. மீனா வர இவர் தான் தன்னை பெண்ணை கேட்க வந்ததாக சீதாவிடம் சொல்கிறார்.
நீங்க தான் அந்த ரோமியோவா எனக் கேட்க தெரியாம நடந்துட்டு என்கிறார். மறுபக்கம் ஷோரூமில் மனோஜை பார்க்க வரும் பாலிசிக்காரர் ரோகிணி இன்ஷூரன்ஸை உங்களுக்கு மட்டும் எடுக்க சொன்னாங்க என்கிறார். அர்ச்சகர் ஒருவர் உங்களுக்கு மனைவி பூஜை செஞ்சாங்க என பிரசாதம் கொடுத்து செல்கிறார். இதில் மனோஜ் சந்தோஷத்தில் இருக்கிறார்.