Siragadikka Aasai: விஜயா கோபத்தை சரி பண்ண ரோகிணிக்கு ஐடியா கொடுக்கும் மீனா… நடக்குமா?

by Akhilan |
Siragadikka Aasai: விஜயா கோபத்தை சரி பண்ண ரோகிணிக்கு ஐடியா கொடுக்கும் மீனா… நடக்குமா?
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

மனோஜிற்கு திடீரென ஜுரம் வந்துவிட அவருக்கு மாத்திரை கொடுத்து அருகில் இருக்கிறார் ரோகிணி. ஆனால் அவரிடம் மனோஜ் முகம் கொடுக்காமல் போக கட்டிலுக்கு அடியில் அழுது கொண்டே உட்கார்ந்து இருக்கிறார். மனோஜிடம் அவர் சமாதானம் பேச அவர் கண்டுக்காமல் தூங்கி விடுகிறார்.

ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். ஸ்ருதி அவங்க பேசுனது சரியில்ல. என்ன கிண்டல் பண்ணாங்க அதனால தான் மிளகாய் பொடி போட்டேன் என்கிறார். ரவி நீ என்கிட்ட வந்து சொல்லி இருக்கணும் எனக் கூற உன்னோட ஆண்மையை நிரூபிக்க நான் ஆள் இல்லை என்கிறார்.

இந்த நேரத்தில் கால் செய்யும் நீத்து, போனை ஸ்பீக்கரில் ரவியை போட சொல்லி ஸ்ருதியிடம் அந்த நேரத்தில் நான் ஒரு ரெஸ்டாரன்ட் ஓனராக பேசினேன். அது தப்புதான்.ஒரு பெண்ணா பாத்தா நீங்க செஞ்சது சரிதான் என்கிறார்.

இதனால் ரவியும் ஸ்ருதியிடம் தலையணையை எடுத்து கொடுத்து அடி வாங்கி கொள்கிறார். பின்னர் அவரும் சாரி சொல்கிறார். இதனால் ஸ்ருதி கடுப்படிக்கிறார். ரெஸ்டாரெண்ட்டில் பெண் பாதுகாப்புக்கு பெல் வைக்க போவதாக சொல்லி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அண்ணாமலை முத்துவை காணாமல் இருக்க கேட்கிறார். மீனா மீது கோபமாக இருக்கும் முத்து தனியா நிற்கிறார். காலையில் காபி வைக்க கிச்சனுக்கு அவர் வர ரோகிணி கஞ்சி வச்சிக்கிட்டு இருக்கிறார். மீனாவிடம் நான் செஞ்சிட்டு இருக்கேன் என்கிறார். அப்போ அங்கு வரும் விஜயா நீ ஏன் இத செஞ்சிட்டு இருக்க எனக் கேட்க மனோஜுக்கு தான் என்கிறார்.

அவருக்கு நைட்டில் இருந்து பீவர் அடிப்பதாக கூற நீ ஏன் அதெல்லாம் செஞ்ச என்னை எழுப்பி இருக்கணும் என்கிறார். நீங்க தூங்குனீங்க அதான் என ரோகிணி கூற இருந்தாலும் என்னை தான் எழுப்பி இருக்கணும் என சத்தம் போட்டு மனோஜை பார்க்க செல்கிறார்.

மனோஜை வந்து என்ன ஆச்சு என விஜயா கேட்க முதலில் அமைதியா இருப்பவர். பின்னர் தான் ரோகிணியுடன் பேசாமல் இருந்ததால் தான் ஃபீவர் எனக் கூற விஜயா கடுப்படித்து விட்டு செல்கிறார். ரோகிணியிடம் மீனா நீங்க அத்தையை சமாதானம் செய்ய பார்வதி ஆண்ட்டியிடம் பேசுங்க என ஐடியா கொடுத்து செல்கிறார்.

Next Story