விஜயாவுக்கு மீண்டும் அல்வா கொடுக்கும் ரோகிணி…பல்ப் கொடுக்கும் ஸ்ருதி!

by Akhilan |   ( Updated:2025-04-09 23:49:53  )
விஜயாவுக்கு மீண்டும் அல்வா கொடுக்கும் ரோகிணி…பல்ப் கொடுக்கும் ஸ்ருதி!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

ஸ்ருதி நேராக வந்து ரோகிணி எனக் கூப்பிட மனோஜ் வந்து என்ன எனக் கேட்க நான் ரோகிணியை தான் கூப்பிட்டேன் என்கிறார். முத்து அசிங்கப்பட்டான் எனக் கலாய்க்கிறார். ரோகிணி வர அவரிடம் ஸ்ருதி தன்னுடைய ஃப்ரண்ட் கல்யாணம் எனக் கூறுகிறார்.

விஜயா அதுக்கு இவ ஏன் போகணும் எனக் கேட்க சாத்துக்குடி போட எனக் கலாய்க்கிறார் ஸ்ருதி. உடனே முத்து அடுத்த பல்பா என்ன பல குரலு இன்னைக்கு ஒரு ஃபார்முல இருக்க என்கிறார். அவர் சிரித்துக்கொண்டே ரோகிணியிடம் மேக்கப் ஆர்டர் இருப்பதை சொல்கிறார்.

உடனே ரோகிணி விஜயாவை பார்க்கிறார். ஸ்ருதி நீங்க எதுக்கு ஆண்ட்டியை பார்க்கிறீங்க எனக் கேட்க அவங்க சொன்னா தான் போறேன் என்கிறார். அப்போ அண்ணாமலை இதுவரை வெளியில் போகவில்லையா எனக் கேட்கிறார். போகலை மாமா என்கிறார் மீனா.

உடனே அண்ணாமலை அம்மா எல்லாரையும் ஒன்னா தானே பார்க்க சொன்னாங்க நீ ஏன் மறுபடியும் இப்படி செய்யுற என்கிறார். நான் மனோஜோட கடைக்கு தான் போக வேண்டாம் என சொன்னேன். அவ எங்க வேணாலும் போகட்டும் என்கிறார்.

உடனே அண்ணாமலை அதை எப்படி நீ சொல்லலாம் என கேட்க, என்னுடைய பையன் கடைக்கு அவ போகக்கூடாது என்கிறார். உடனே மனோஜிடம் சென்று அவை இனிமேல் உன் கடைக்கு வரக்கூடாது எனக் கூற ஒரு நொடி தாமதிக்காமல் உடனே ஓகே என கூறிவிடுகிறார் மனோஜ். இதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

முத்து அண்ணாமலையிடம் பாத்தியா இவனை எனக் கேட்க உடனே ரோகிணி எங்க விஷயத்துல தலையிடாதீங்க என்கிறார். ஸ்ருதி வேலைக்கு போறது நம்ம உரிமை எனக் கூற மீனாவும் அதை சொல்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது ஆண்ட்டி சொன்னா நான் போறேன் என்கிறார்.

பின்னர் சீதா அருண் வீட்டிற்கு சென்று அவர் அம்மாவிற்கு மாத்திரை கொடுக்கிறார். அவர் பேசிவிட்டு இவன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டாள் நல்லா இருக்கும் எனக் கூறுகிறார். பின்னர் சீதா மற்றும் அருண் பேசிக் கொண்டிருக்க அவர் அம்மா கிச்சனுக்கு சென்று விடுகிறார்.

அருண் உள்ளே செல்ல அம்மா கல்யாணம் பேசிடலாமாடா என கேட்கிறார். இதுக்கு தான் உன்னிடம் சொல்ல மாட்டேன்னு சொன்னேன். அவளை சொல்றேன் சொல்லி இருக்கா அதுவரை கொஞ்சம் அமைதியா இரும்மா என்கிறார்.

பின்னர் சீதா மற்றும் அருண் இருவரும் கிளம்பி சென்று விடுகின்றனர். அந்த நேரத்தில் மீனாவை தெரு ஓரத்தில் நிறுத்த பக்கத்தில் இருக்கும் கடையில் முத்து மற்றும் செல்வம் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். லவ் ஓகே ஆனதால் முருகன் ட்ரீட் வைத்து இருக்கிறார்.

கல்யாணம் தானே எனக் கேட்க இல்லனா காசு சேர்த்து வீடு வாங்கணும். அதுக்கு பின்னாடி தான் கல்யாணம் என்கிறார். முத்து கைக்கழுவ போக சரியாக அருணும் சீதாவை இறக்கி விட்டு சென்று விடுகிறார். பின்னர் சீதாவை மட்டும் முத்து பார்ப்பதால அவர் பேசி சரி செய்து அனுப்பி விடுகிறார்.

Next Story