Siragadikka Aasai: மனோஜிடம் கெஞ்சும் ரோகிணி... கடத்தப்பட்ட சத்யா... என்ன நடந்தது?

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
மனோஜின் கடையில் தன்னுடைய நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் என்னப்பா கடை டல்லடிக்குது எனக் கேட்க தெரியலை ப்ரோ. ஆளே வரலை. நானும் நிறைய ஆபர் போட்டு பார்த்துட்டேன் என்கிறார். இதற்கு நண்பர் உன் மனைவிதான் உன் லக் என்கிறார்.
ஏன் அவங்களை வழியில் பார்த்தியா எனக் கேட்க அதெல்லாம் இல்லை. நீ அவ வரத்துக்கு முன்னாடி டம்மியாதான் இருந்த என்கிறார். அந்த நேரம் பார்த்து இரண்டு கஸ்டமர் வர இப்போ என்ன ரோகிணியா வந்திருக்கா எனக் கேட்க அந்த நேரம் பார்த்து சரியா ரோகிணி உள்ளே வருகிறார்.
பாரு ப்ரோ உன் வைஃப் வந்தவுடனே கஸ்டமர் வந்துட்டாங்க என்கிறார். ரோகிணி தனியாக பேசணும் எனக் கூற அவர் கிளம்பி விடுகிறார். மனோஜிடம் ரோகிணி வீட்டிலும் பேச மாட்டிங்குற எனக் கேட்க அவர் நீ ஏன் இப்போ இங்க வந்த உன்னால நானும் அம்மாகிட்ட திட்டு வாங்குவேன் என்கிறார்.
நீ சொன்னா தானே ஆண்ட்டிக்கு தெரியும் எனக் கூற அப்போ என்னையும் பொய் சொல்ல சொல்றீயா என்க அதெல்லாம் இல்லை. நீ எதுவும் சொல்லாம இருந்தாலே போதும் என்கிறார். நீ அவங்களை பத்திதான் யோசிப்பியா. என்னை பத்தி யோசிக்க மாட்டியா எனக் கேட்கிறார்.
நான் உன்கூட வாழத்தான் இப்படி செஞ்சேன். எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் மனோஜ் எனப் பேசுகிறார். ஆனால் மனோஜ் பேசாமல் இருக்கிறார். இப்போ நீ பேசாம இருக்க ஆனா நீ பேச ஆசைப்படும் போது நான் இருக்க மாட்டேன் என்கிறார். ரோகிணி சென்றுவிட நண்பர் வந்து உன் வைஃப் பேசுனது சரிதான். நீதான் முடிவு எடுக்கணும் என்கிறார்.
உடனே மனோஜ் சரக்கு அடிக்க போலாமா? எனக் கேட்க உன் கூட ஒரு டைம் போனதுக்கே போலீஸ் ஸ்டேஷன் போக வச்சிட்ட ஆள விடுடா சாமி என்கிறார். மறுபக்கம் வீட்டில் மீனா மற்றும் முத்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். சீதா, சத்யா கல்யாணம் விஷயம் குறித்து பேச மீனா அமைதியாக இருக்கிறார்.

காபி எடுக்க அவர் கிச்சனுக்கு போக அந்த நேரத்தில் சீதா கால் செய்து சத்யா காணும் என்ற தகவலை சொல்கிறார். அத்தைக்கிட்ட சொன்னியா எனக் கேட்க இல்ல மாமா எனக் கூற யாரிடமும் சொல்லாத எனக் கூறி மீனாவிடமும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்.
சிட்டி ஆபிஸுக்கு சென்று பார்க்க அதை மூடி இருக்கிறது. சத்யா கடைசியாக சென்ற ரெஸ்டாரெண்ட்டை கண்டுபிடிக்க அங்கு போனால் சத்யா பைக் மட்டும் இருக்கிறது. உள்ளே சென்று சிசிடிவி இருப்பதை பார்த்து அதை பார்க்க வேண்டும் எனக் கேட்க ஆனால் முதலாளி ஒப்புக்கொள்ளாமல் அனுப்பி விடுகிறார்.
இதனால் முத்து, செல்வம் யோசனையில் இருக்க அந்த நேரம் பார்த்து மீனா வர எதுக்கு நீங்க இங்க இருக்கீங்க எனக் கேட்க சத்யா விஷயத்தை சொல்லி விடுகிறார். உடனே மீனாவுக்கு தெரிந்த முதலாளி என்பதால் அழைத்து சென்று சிசிடிவி வாங்கி தர அதில் சத்யாவை சிட்டி கடத்தி செல்வதை கண்டுபிடித்து விடுகிறார்.