ரோகிணியிடம் வேற என்ன ரகசியமோ இருக்கு… சரியாக பாயிண்ட்டை பிடித்த ஸ்ருதி!

by Akhilan |   ( Updated:2025-04-08 22:15:15  )
ரோகிணியிடம் வேற என்ன ரகசியமோ இருக்கு… சரியாக பாயிண்ட்டை பிடித்த ஸ்ருதி!
X

siragadikka aasai

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

ரோகிணி சமைத்து கொண்டு இருக்க ஸ்ருதி மற்றும் மீனா வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். பேவரைட் மருமகள் இப்போ சமைக்கிற மருமகளா ஆயிட்டீங்க என கலாய்க்கிறார். சூப்பரா கதை திரைக்கதை எழுதி நடிச்சிட்டு இருந்தீங்க முத்து அந்த ட்விஸ்ட்டை உடைத்து விட்டார் என்கிறார்.

ஆனால் நீங்கள் செய்கிற எல்லா தப்புகளையும் கடைசியில முத்து, மீனாவிடம் தான் மாட்டுகிறீர்கள் என்கிறார். இதற்கு ரோகிணி அவங்களா எனக்கு எதிரா என்ன கிடைக்கும்னு தேடி போறாங்க என்கிறார். இதனால் கடுப்பாகும் மீனா நாங்க யாரையும் தேடி போகல. ஜீவா தான் எங்க கார்ல வந்து ஏறுனா. மலேசியா மாமா கதையும் அதேதான் என்கிறார்.

இதற்கு ஸ்ருதி பரவால்ல ரோகிணி உங்க வாழ்க்கையே நீங்க சீரியலா எடுக்கலாம். செமையா போகும். மலேசியா மருமகள்னு பேரு வச்சிக்கோங்க எனக் கலாய்க்க உங்களுக்கு என்ன பார்த்தா சிரிப்பா இருக்கு இல்ல. என் வாழ்க்கை இப்படியே இருந்துடாது என சொல்லிவிட்டு செல்கிறார்.

ரோகிணி சென்றதும் ஸ்ருதி இவங்க கிட்ட இன்னும் ரகசியம் இருக்கும் எனக் கூற எப்படி சொல்றீங்க என்கிறார் மீனா. இப்போ கலாய்ச்சதுக்கு ஒன்னு அழுது இருப்பாங்க. இல்ல சமாளிச்சிருப்பாங்க. ஆனா அவங்க பேசாம போறத பாத்தாலே வேற உளறக்கூடாது என்பது போலவே இருக்கு என்கிறார். அவரும் அதை தான் சொல்வதாக சொல்கிறார் மீனா.

ரூமுக்குள் செல்லும் ரோகிணி மனோஜிடம் தூங்கலையா என கேட்கிறார். கடுப்பாகும் மனோஜ் தலைவாணி எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்ல ஆனால் விஜயா தடுத்து நீ எங்க போற? இத்தனை நாள் அவள் மகாராணி திரிஞ்சா ஒழுங்கா உள்ளே கட்டிலில் போய் படு என்கிறார்.

ரூமிற்குள் வரும் மனோஜ் தலையணையை போட்டு விட்டு கட்டிலில் படுத்து கொள்கிறார். இதனால் ரோகிணி அழுதுக்கொண்டு இருக்கிறார். ஹாலில் முத்து மற்றும் மீனா பேசிக்கொண்டு இருக்கின்றனர். அத்தை செய்றது ரொம்ப தப்புங்க எனக் கூற அந்த அம்மா எவ்வளோ பண்ணி இருக்கு.

உன்ன அம்மாகிட்ட பாவமுனா சொல்லி இருக்கு. போட்டுத்தான் கொடுக்குது என்கிறார். அந்த நேரத்தில் வித்யா மீனாவுக்கு கால் செய்து காதலை ஒப்புக்கொண்ட விஷயத்தை சொல்கிறார். சூப்பர் அப்போ கல்யாணம் தானே எனக் கேட்க இல்ல கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம் இருக்கேன் என்கிறார்.

சரியென மீனா போனை வைத்து விட முத்துவிடம் வித்யா காதலுக்கு உதவி செய்த விஷயங்களை கூறுகிறார். முத்து என்னை மட்டும் இப்படி அட்வைஸ் கொடுக்க கூடாதுன்னு சொல்லுவ எனக் கேட்க நான் உங்கள மாதிரி இல்ல அறிவாளித்தனமாக பதில் சொல்லுவேன் என்கிறார்.

இதனால் முத்து கோச்சிக் கொண்ட திரும்பிக்கொள்ள அவரை சமாதானம் செய்கிறார் மீனா. ஸ்ருதி மற்றும் ரூமில் இருக்க அப்போது ஸ்ருதியிடம் மேக்கப் ஆர்டர் ஒன்று ரோகிணிக்கு வருகிறது. இதற்கு ரவி அம்மா போக கூடாதுனு சொன்னாங்களே எனக் கேட்க ஷோரூம் ஓகே. பார்லர் போக கூடாதுனு சொல்ல உங்க அம்மாக்கு உரிமை இல்லை என ஸ்ருதி பேச ரவி சரண்டர் ஆகிவிடுகிறார்.

Next Story