விசாரணையில் இறங்கிய முத்து-மீனா… அடுத்த ரகசியமும் உடையுமா? கொஞ்சம் சந்தேகம்தான்!

by Akhilan |   ( Updated:2025-03-30 23:12:32  )
விசாரணையில் இறங்கிய முத்து-மீனா… அடுத்த ரகசியமும் உடையுமா? கொஞ்சம் சந்தேகம்தான்!
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது. இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்புகள்.

சீதா அருண் வண்டியில் ஏறி உட்கார அப்போ என் காதலுக்கு ஓகேவா எனக் கேட்கிறார். நக்கலாக அதெல்லாம் இல்ல பஸ் வரல என சீதா கூற அப்போ இறக்கி விட்ரவா எனக் கேட்க உங்க கூட வாழ்க்கை முழுதும் வரணும் நினைப்பதாக கூறுகிறார்.

இருவரும் சிரித்துக்கொண்டே பைக்கில் செல்கின்றனர். வீட்டில் மீனா மற்றும் முத்து சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டு இருக்க இந்த விஷயத்தை வீட்டில் சொல்லி இருக்க கூடாதோ எனத் தோணுவதாக மீனா கூற எது கறிக்கடைக்காரர் மணி கதையா என்கிறார் முத்து.

இத சொல்லலைனா அந்த அம்மா இன்னும் பொய் சொல்லி இருக்கும். காயம் பட்டுச்சுனா வெட்டக்கூடாது. மருந்துதான் போடணும் என்கிறார். இல்ல வீட்டில் கலகலப்பா இருந்துச்சு இப்போ யாருமே இல்லாம இருக்கது ஒருமாதிரியா இருக்கு என்கிறார். பாட்டி வராங்கள சரியாகும் என்கிறார்.

siragadikka aasai

முத்து எனக்கு இந்த பார்லர் அம்மா மேல இன்னும் சந்தேகம் இருந்துக்கிட்டே இருக்கு. நம்ம வேணா அவங்க ரூமில் போய் செக் செய்து பார்க்கலாமா எனக் கேட்க மீனா அதெல்லாம் வேண்டாம். தப்பு எனக் கூற நம்ம என்ன திருடவா போறோம் என்கிறார்.

டாஸ் போட்டு பார்த்து செய்யலாம் என முத்து கேட்கிறார். மீனா பூ கேட்க முத்து தலை வேண்டும் என்கிறார். முத்து சொன்னது போல தலை விழ இருவரும் ரூமில் போய் தேடி பார்க்கிறார். அப்போ ரோகிணி வாட்ரூப்பில் சின்ன குழந்தை துணி இருப்பதை பார்க்கிறார்.

இருவரும் இது எதுக்கு இங்க இருக்கு என சந்தேகம் கொள்ள முத்து மனோஜ் மீது சந்தேகம் இருக்குனு சொல்லுவ தானே நீ. இதை ஏன் மனோஜ் வாங்கி வச்சிருக்க கூடாது எனக் கேட்க மீனாவும் கிருஷ் சைஸ் போலத்தான் இருப்பதாக சொல்கிறார்.

அந்த நேரத்தில் மனோஜ் வந்துவிடுகிறார். இருவரும் சமத்தாக வெளியில் போய் விட எங்க போன என முத்து கேட்க சாப்பிட சென்றதாக சொல்கிறார். ஸ்ருதி கால் செய்து மீனாவிடம் பேச பாட்டி வர இருப்பதாக சொல்ல நாங்களும் வந்துவிடுவதாக சொல்லி விடுகிறார்.

ரோகிணி திடீரென ஸ்ருதிக்கு கால் செய்ய அவர் எடுத்து பேசுகிறார். எல்லாம் கேள்வி பட்டேன் எனக் கூற நான் பொய் சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. ஆனா அதை கேட்காம விட்டது தப்பு தானே எனக் கூற ஸ்ருதி இவங்க செஞ்சது தப்பு இல்லையாம். ஆனா கேள்வி கேட்காம போனது தப்பாமாம் என்கிறார்.

நீங்க இதில் என்ன நினைக்கிறீங்க என ரோகிணி கேட்க நான் பார்வையாளர் தான். என்ன நடந்தாலும் வேடிக்கைதானே பார்க்க போறோம் எனக் கூறி போனை கட் செய்து விட ரோகிணி கடுப்பாகி விடுகிறார்.

Next Story