ஏங்கப்பா… இந்த ரோகினி பிரச்னையை மாட்டிவிட மாட்டிங்களா!... மீனாக்கு தான் மீண்டும் பிரச்னையா?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா அண்ணாமலையிற்கு காப்பி கொடுக்க அப்போ பாட்டி கால் செய்கிறார். முத்து கல்யாண போட்டோ அனுப்பினான். அழகா இருக்கு என்கிறார். பின்னர் அண்ணாமலையை கேட்க மாமா கொஞ்சம் பிரச்னை எனக் கூற பாட்டி பதறுகிறார்.
பின்னர், நல்லா இருக்காரு என சமாளிக்கிறார். சரியாக முத்து வர அவரும் பாட்டியிடம் பேசிவிட்டு அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போனதாக சொன்னார். பாட்டி என்ன ஆச்சு எனக் கேட்க ரெகுலர் செக்கப் எனச் சமாளிக்கிறார். இதை தொடர்ந்து அண்ணாமலை சும்மா இருக்க மாட்டீங்களா என்கிறார்.
இதையும் படிங்க: ஹீரோவா நடித்த முதல் படமே படுதோல்வி… இதற்கு விஜய் சொன்ன பதில்தான் ஹைலைட்!.
பின்னர் கல்யாண போட்டோவை பிரேம் போட்டுக் கொண்டு வர சொல்கிறார் அண்ணாமலை. விஜயா அதெல்லாம் வேண்டாம் என்கிறார். இருந்தும் முத்து பெரிசா போட்டு கொண்டு வருவதாக சொல்லி கிளம்புகிறார். அப்போ போட்டோ கடைக்காரர் போட்டோவில் இருக்கும் விஜயா குறித்து கேட்கிறார்.
பின்னர் அவரிடம் இருந்து ஒரு லட்ச ரூபாயை அடித்து சென்ற வீடியோவை காட்ட அதிர்ச்சி ஆகிறார். பின்னர் அவர் முகம் தெரியலையே என இன்னொரு கேமராவை காட்ட அதில் சத்யா என்பது தெரிந்துவிடுகிறது. உடனே மீனா வீட்டுக்கு போக அங்கே இந்திரா, சீதாவும் சத்யா குறித்து பெருமையாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். என்னை வேலைக்கு போக வேண்டாம் சொல்லுறான். படிச்சிக்கிட்டே வேலைக்கும் போறான் என்கிறார்கள்.
இதனால் சத்யா குறித்து எதுவும் சொல்லாமல் நேராக அவரை பார்க்க காலேஜுக்கு வர அங்கே சத்யா வந்தே 3 நாள் ஆகுவதாக கூறுகின்றனர். சரியென முத்து செட்டுக்கு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறார். அங்கே செல்வத்திடம் காசு வாங்க சிட்டி வந்து திட்டிக்கொண்டு இருக்கிறார். காரை எடுப்பேன் எனக் கூற அப்போ எப்படி காசு கொடுப்பேன் என்கிறார்.
இதையும் படிங்க: இந்தில விருது கொடுக்கலன்னா என்ன?.. இன்டர்நேஷனல் பெஸ்ட் படமே என் படம்தான்!.. கெத்துக்காட்டிய அட்லீ!