மூன்று ஜோடிகளையும் பிரிச்சிவிட்டாச்சு.. சிறகடிக்க ஆசை களேபரம்.. குழப்பத்தில் விஜயா!..

by Akhilan |
மூன்று ஜோடிகளையும் பிரிச்சிவிட்டாச்சு.. சிறகடிக்க ஆசை களேபரம்.. குழப்பத்தில் விஜயா!..
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி, மீனா மற்றும் ரோகினி ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி அழகா பேசுவாங்க. இப்போ ஆளே மாறிட்டாங்க எனக் கூறுகிறார் ஸ்ருதி. அதற்கு மீனா உங்களுக்கு தான் அப்படி காதல் எல்லாம் இருந்துச்சு.

எனக்கு அப்படி எதுவுமே இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி நான் பூக்கட்டுவேன், கோயில் போவேன். எனக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டு இருந்தேன். ஆனா கட்டிக்கிட்டவரு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு மாதிரி இருக்காரு என்கிறார். பின்னர் ஸ்ருதி பாவம் எல்லாரும் மாடியில் உட்கார்ந்து பீல் செஞ்சிட்டு இருப்பாங்க என்கிறார். ஆனால் அந்த நேரத்தில் அங்கு சத்தம் கேட்கிறது.

இதையும் படிங்க: எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா!.. ரீ ரிலீஸ் படங்களை போட்டு ஓட்டுற நிலைமைக்கு வந்த கமலா தியேட்டர்!..

இதனால் ஷாக்கான விஜயா என்னவென்று மனோஜிடம் கேட்க அவர் சரியாக பதில் சொல்லாமல் சென்றுவிடுகிறார். அதையடுத்து ரோகினியிடம் வந்து பேச அவரும் பதில் சொல்லாமல் மழுப்பி விடுகிறார். அதனால் வேறு எதுவும் கேட்க முடியாத விஜயா அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

ரூமுக்குள் வரும் மனோஜும், ரோகினியும் மீண்டும் வேலை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். தான் ஹோட்டலில் வெயிட்டராக வேலை செய்த விஷயத்தினை கூறுகிறார் ரோகினி. அதுக்கு பீல் செய்தாலும் அதில் கூட நீ நிரந்தரமா இல்லை எனத் திட்டுகிறார். பின்னர், மனோஜ் என் சுயமரியாதையை விட்டு செய்ற வேலையை இனிமே நான் செய்ய மாட்டேன் என்கிறார்.

இதையும் படிங்க: கருப்பு சேலையில் கலக்குறியேம்மா!.. கண்ணெல்லாம் கண்டபடி மேயுதே!.. அராத்தி இவ்ளோ அழகா?..

அப்போ போய் ரவி ரூமுக்குள் பார்க்கும் போது ஸ்ருதி டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். என்ன இது எனக் கேட்க ஆமாம் நீ இருந்தால் நீயே மொத்த பெட்டையும் பிடிச்சிக்குவ. ஆனால் நேத்து எட்டு மணி நேரம் நிம்மதியா தூங்குனேன். எந்தவித தொல்லையும் இல்லாமல் ப்ரீயா படுத்து இருந்தேன் என்கிறார்.

முத்து ரூமில் சத்யா வீடியோவை பார்த்து கோபப்பட அதை மீனா பார்த்துவிடுகிறார். அவர் பாத்ரூம் சென்ற கேப்பில் போனை மீனா எடுக்க வந்து பிடிங்கி கொள்கிறார் முத்து. இதனால் மீனாவுக்கு குழப்பமே மிஞ்சுகிறது. ரவியும், ஸ்ருதியும் சண்டை போட்டு கொண்டு இருக்கின்றனர். எல்லாம் உங்க அம்மாவால தான் என ரவி கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: வாய்வலிக்க முத்தம் கொடுத்துட்டு இப்போ CM.. விஜயை மறைமுகமாக தாக்கிய மன்சூர் அலிகான்

Next Story