ஸ்ருதி நீங்க நல்லவங்களா? கெட்டவங்களா? இப்படியும் பேசுறீங்க… அப்படியும் பேசுறீங்களே?
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மனோஜ் கம்பெனி கம்பெனியாக வேலை தேடி அலைகிறார். பின்னர் ரோகினியால் வேலை கிடைத்த கம்பெனிக்கு போய் இண்டவியூக்கு போக அங்கு அதே லேடி எம்டி இருக்கிறார். உனக்கு தான் ஒரு பொண்ணுக்கு கீழ வேலை செய்ய முடியாதே என்கிறார்.
மனோஜ், என்னை மன்னிச்சிடுங்க. இனி நான் அப்படி பேச மாட்டேன். லேடி எம்.டி உன்னை வேலைக்கு வச்சா என் மரியாதை என்ன ஆகுறது? உனக்கு வேலை இல்ல எனச் சொல்லி அனுப்பி விடுகிறார். வீட்டில் ஸ்ருதியுடன் உட்கார்ந்து ரோகினி பேசிக்கொண்டு இருக்கிறார்.
அவர் ஏன் வேலைக்கு போகணும்? உங்க பார்லரில் அவரை சிஓ ஆக்கிட வேண்டித்தானே. இன்னும் நிறைய ப்ராஞ்ச் ஓபன் செய்ய வேண்டி தானே என்கிறார். எனக்கே பார்லர் இல்ல இதுல இன்னுமா என நினைத்துக்கொள்ளும் ரோகினி இப்போ தான் பார்லர் ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கு நாள் ஆகும் என்கிறார்.
இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…
இவர்கள் பேசிக்கொண்டு இருக்க அந்த வழியாக செல்லும் விஜயா அதை ஒட்டுக்கேட்கிறார். அதான் உங்க அப்பா பெரிய ஃபைனான்ஸ் வச்சி இருக்காருல. அவரிடம் கேட்டு பிசினஸ் செட் செய்யலாமே என்கிறார். விஜயாவும் குஷியாகி ஆமா நல்ல ஐடியா என உள்ளே வருகிறார்.
பிசினஸ் வைக்கலாம். ஆனா மனோஜ் ஒரு வேலையில கொஞ்ச நாள் இருந்து அவருக்கு நம்பிக்கை வரணும் எனச் சொல்லி விட்டு தன் ரூமுக்கு வந்து விடுகிறார். இவனுக்கு வேலை இல்லனா நமக்கு தான் பிரச்னையாகும் போலையே எனப் புலம்பி கொண்டு மனோஜுக்கு கால் செய்கிறார்.
வேலை கிடைச்சிதா எனக் கேட்க இல்ல என்கிறார் மனோஜ். அடுத்து ஸ்ருதி வேலைக்கு போயிட்டு வர ரோகினி நிற்பதை பார்த்து அவருடன் பேசுகிறார். மனோஜ் வேலை தேடி போயிருக்கான் என்க இன்னைக்கு உடனே எப்படி வேலை கிடைக்கும்? ஒரு டிகிரியா முடிச்சிட்டு போயிருக்காரு என்கிறார். உடனே ரவி ஏன் இப்படி குறைச்சு பேசுற எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: தனுஷை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்தியேன்!.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அயலான் டீம்!
ஸ்ருதி, இல்லப்பா பிடிச்ச வேலைக்கு போகட்டும். என்ன அவசரம் எனக் கேட்டேன். ரோகினி, முத்து அசிங்கமா பேசுவாரு என்க அவர் பேச்சை கேட்காதீங்க. அப்போ மீனா அவர் இல்லாதப்போ அவரை பத்தி பேசாதீங்க என்கிறார். ரோகினி எனக்கு என்ன பயமா?
அப்போ சத்தம் கேட்டு வரும் விஜயா மீனா என்ன சத்தம் போட்டு பேசிக்கிட்டு இருக்க? மீனா, என் புருஷன் பத்தி பேசுனாங்க என்கிறார். டிரைவரை அப்படி தானே பேச முடியும். மனோஜ் பிசினஸ் செட்டானா பெரிய இடத்துக்கு வருவான் என்கிறார். இதை வரும் போதே அண்ணாமலையும் முத்துவும் கேட்டு விடுகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் வந்தும் விஜயா ஓவராக பேச முத்துவை அடக்கி உள்ளே அனுப்புகிறார் அண்ணாமலை. மாலை வேலை இல்லாமல் மனோஜ் வர ரோகினி, விஜயா நாளைக்கு பாத்துக்கலாம் என சமாதானம் செய்கின்றனர். அப்போ முத்து அல்வா வாங்கிட்டு வந்து மூவரை வெறுப்பேற்றி கொண்டு இருக்கிறார்.
அடுத்த நாள் காலை ஸ்ருதிக்கு பொங்கல் சீரை சண்டாமேளம் கொட்டி எடுத்துவந்து கொடுக்கிறார் அவர் அம்மா. வைர நெக்லஸெல்லாம் இருக்க விஜயா வாயை பிளந்து கொண்டு சிரிக்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் அம்மாவும் வந்து சிம்பிள்ளாக சீர் கொடுக்கிறார்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடும் நெப்போடிசம்!.. ஆர்ஜே பாலாஜிக்கே இந்த நிலைமையா?..
சரி மீனா வீட்டுலையாது ஒன்னு வந்திருக்கு. உனக்கு எதுவும் வந்துச்சா எனக் கேட்க ரோகினி அந்த சூழ்நிலையில் இருந்து தப்பித்து மாடிக்கு சென்று விடுகிறார். பின்னால் வரும் விஜயாவிடம் முத்து எப்படி பேசுறாரு பாருங்க எனக் கேட்க அவனை நம்ம தானே பேசவிட்டு இருக்கோம் என்கிறார்.
உங்க அப்பாவை நீ சொன்னா வந்துடுவாரு என ஷாக் கொடுக்கிறார். எனக்கு அம்மா இல்ல ஆண்ட்டி என சமாளிக்க பரவாயில்லைமா நீ இப்போ சொன்னா உங்க அப்பா ஓடி வந்துடுவாரு. நான் சீருக்காக சொல்லலை. உன் கௌரவத்துக்கு சொல்றேன் என்கிறார் விஜயா. ரோகினி அதிர்ந்து நிற்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.