விஜயா ஓவர்பில்டப்பா இருக்கே!… பெர்மான்ஸை குறைமா ஸ்ருதி!… சிறகடிக்க ஆசையின் அட்டகாசங்கள்

Published on: January 19, 2024
---Advertisement---

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மீனா, முத்து, அண்ணாமலை, விஜயா எல்லாரும் ஒரு காரில் வருகின்றனர். அப்போது மீனா பேசுவதற்கு எல்லாம் ஏடாகூடமாக பதில் சொல்லி வருகிறார் முத்து. மற்றொரு காரில் வரும் போது ரோகினி பதட்டத்துடனே வருகிறார். ஸ்ருதி இங்க என்ன இப்படி இருக்கு எனப் புலம்பி கொண்டே வருகிறார்.

பாட்டி குடும்பத்தினை பார்க்க ஆவலுடன் காத்து இருக்கின்றார். எல்லாரும் வர சந்தோஷமாக அழைக்கிறார். பின்னர் அண்ணாமலையுடன் சேர்த்து மொத்த குடும்பத்துக்கும் ஆரத்தி எடுக்கிறார். பின்னர் அங்கு வருபவர்கள் முத்து, மீனாவிடம் பேசிக்கொண்டு இருக்கின்றனர். எல்லாரும் வீட்டுக்குள் போக மனோஜ் முதல் ஆளாக ஏசி ரூமை பிடித்து கொள்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி இறப்பில் நடிகர் சங்கம் செய்த விஷயம்..! விஜயகாந்த் இறப்பில் ஒரு ஈ, காக்காவை காணுமே..!

பின்னர் அண்ணாமலை வெளியில் போவதாக சொல்ல ரோகினி மாமா வருவார். நீங்க எங்கையும் போக வேண்டாம் எனக் கூறிவிட முத்து அப்போ நான் போறேன் என்கிறார். நீ போ என்றதும் நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன் எனக் கூறி செல்கிறார். பின்னர் மீனாவை விஜயா வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறார்.

இதனால் கடுப்பாகும் பாட்டி உன் வீட்டில உன் மருமகள சமைக்க சொன்ன இங்க நீ தான் சமைக்கணும் என்கிறார். ஸ்ருதி காய் அரிந்து கொடுக்க ரோகினி அம்மி அரைக்கிறார். இதில் ஸ்ருதி சின்னதா கத்தி பட்டதுக்கே ஒரு பெரிய பிரளயத்தையே செய்து விடுகிறார்.

இதையும் படிங்க: டாக்டர் சொல்லியும் கேட்காம நடிச்சி ரத்த வாந்தி எடுத்த சிவாஜி!.. டெடிக்கேஷன்னா நடிகர் திலகம்தான்!..

அப்படி இப்படி போராடி விஜயா தன்னுடைய மருமகள்களுடன் சேர்ந்து சமைத்து முடிக்க எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். எல்லாருக்கும் பரிமாறிக்கொண்டு இருக்க முத்து விஜயாவை வம்பு செய்து கொண்டே சாப்பிடுகிறார். கடைசியில் ஸ்ருதி அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்.

உடனே விஜயா தான் ஊட்டிவிடுவதாக சொல்லி ஊட்டிவிட மீனா ஆசையாக அதை பார்த்து கொண்டு இருக்கிறார். பாட்டி மீனாவை ஸ்ருதி பக்கத்தில் அமர சொல்கிறார். எல்லாரும் ஷாக் ஆவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.