மீனாவை அக்காவா நினைச்சு தானே காசு கொடுத்தாங்க ஸ்ருதி… இதுக்கு ஏன்யா கத்துறீங்க..!

by Akhilan |
மீனாவை அக்காவா நினைச்சு தானே காசு கொடுத்தாங்க ஸ்ருதி… இதுக்கு ஏன்யா கத்துறீங்க..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி ட்ரெஸ் குறித்து மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். மத்தவங்களுக்காக கொஞ்சம் மாத்திக்கணும் என மீனா சொல்வதை கேட்கிறார் ஸ்ருதி. சரி உங்களுக்காக நான் மாத்திக்கிறேன் எனக் கூறி செல்கிறார். இதை கேட்ட விஜயா மற்றும் ரோகினி அதிர்ச்சி ஆகிவிடுகின்றனர்.

பின்னர், மீனாவிடம் அண்ணாமலை ட்ரெஸ்களை கொடுத்து துவைத்து விட சொல்கிறார். அதை மீனா வாங்கிக் கொண்டு செல்ல ரோகினி வந்து என் ட்ரெஸை மெஷினில் போட்டுவிட்டேன். இது மனோஜ் ட்ரெஸ். நாளைக்கு பெரிய ஆளுங்க வராங்களாம். பிராண்ட் வேற கையில் துவைச்சு கொடுங்க என்கிறார். ஆனால் மீனா என்னால் முடியாது என்கிறார். ஒரு ஹெல்ப்பா தானே கேட்டேன் எனச் சொல்ல கார் வாங்க தானே வராங்க. ட்ரெஸ்ஸையா வாங்க வராங்க என்கிறார்.

இதையும் படிங்க: கமலுடன் திருமணம் வரை சென்ற பிரபல நடிகை…! ஒற்றை கேள்வியால் அழிந்த காதல்..!

உடனே ரோகினி அவர் கார் ஓட்ட போகலை. கார் விக்க போறார் என்கிறார். விஜயாவும் அவருக்கு சப்போர்ட் செய்ய மீனா விடாப்பிடியாக என்னால் முடியாது எனக் கூறிவிடுகிறார். இதில் ரோகினி கடுப்பாகிவிட அங்கு ட்ரெஸுடன் வருகிறார் ஸ்ருதி. இதை துவைத்து தர முடியுமா எனக் கேட்க ஓகே சொல்கிறார் மீனா.

ஏற்கனவே இவ்வளோ துணி இருக்கே. ஆண்ட்டி நீங்க கொஞ்சம் ஹெல்ப் செய்யலாம் தானே எனச் சொல்ல விஜயா என்னையே வேலைக்காரியா ஆகிடுவாங்க போலயே. அதெல்லாம் செஞ்சிடுவா அவளே என்கிறார். ரோகினி நீங்களாச்சும் பண்ணலாமே என்கிறார்.

உடனே மீனா இந்த வீட்டுல இருக்கவங்களுக்கு செய்றதுல என்ன இருக்கு எனக் கூற ரோகினி மனோஜும் இந்த வீட்டு ஆளுதான் என்கிறார். அவருக்கு என்னால செய்ய முடியாது என்கிறார். நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க மீனா. நானும் இவங்களை மாதிரி இதை மதிக்காம இருக்க மாட்டேன் எனக் கூறிய ஸ்ருதி, 2000 ரூபாயை கொடுக்கிறார்.

இதை பார்த்த மீனா இவங்களாம் பேச்சுக்கு சொன்னாங்க. நீங்க காசை கொடுத்து அதை புரூவ் பண்ணிட்டீங்களா எனக் கேட்க நான் உங்களை என் அக்காவா தான் பார்த்தேன். ரோகினி ஆண்ட்டிக்கு பாக்கெட் மணி கொடுத்தாங்க. அப்போ அவங்க என்ன ஆண்ட்டியை வேலைக்காரியா நினைக்கிறாங்களா என்கிறார்.

இதையும் படிங்க: அடேய் என்னங்கடா ஒரே எபிசோடுல எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க… எண்ட் கார்டா போட போறீங்க!..

அவங்களை மதிச்சு செஞ்சேன். எனக்கு தான் அவங்க மேல நிஜ பாசம் என்கிறார் ஸ்ருதி. இதில் இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. ரூமுக்கு வரும் முத்துவிடம் பேசிக்கொண்டு இருக்கும் மீனா, ஸ்ருதி கொடுத்த காசை கொடுக்கிறார். விஷயத்தை சொல்ல அவர் கடுப்பாகிறார். நீ தான் அந்த பொண்ணை நல்ல பொண்ணுனு சொன்ன இப்போ உனக்கே அப்பு வச்சிட்டா பத்தியா எனச் சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story