Connect with us

latest news

அதான மாமா கேரக்டரை ஈசியாக எஸ்கேப் செய்ய வச்ச ரோகினி!… அட போங்கப்பா..ஜவ்வா இழுக்குறீங்களே?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் மாட்டிக்கொள்வோம் என்பதால் மாமாவை கிளப்ப ஐடியா செய்து விடுகிறார் ரோகினி. பின்னர் இதை பிரவுன் மணியிடம் சொல்ல அவர் அப்போ என் சினிமா சான்ஸு எனக் கேட்கிறார். அதை வித்யாவிடம் பேசுக்கொள் எனக் கூறிவிடுகிறார்.

அடுத்த நாள் காலை விஜயா டீ எடுத்துக்கிட்டு போக அண்ணாமலை எனக்கு தானே நானே கேட்கணும் நினைச்சேன் என்கிறார். உடனே விஜயா இது உங்களுக்கு இல்ல மலேசியா சம்மந்திக்கு எனக் கூறிவிடுகிறார். அப்போ அவரும் டீயை வாங்கி குடித்துக்கொண்டு இன்னைக்கு என்ன சமையல் என விசாரித்து கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..

கறி சின்ன சின்னதாக இருக்கணும் என்கிறார். இதை கேட்ட முத்து கடுப்பாகி ஏன் நீ வெட்டு தரியா எனக் கலாய்க்கிறார். அப்போ ரோகினி போன் எடுத்து வந்து ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்கிறார். உடனே உங்களை வரச்சொல்வதாக கூற நான் வெஜ் சாப்பிட்டு போறேனே எனவும் இழுக்கிறார்.

உடனே ரோகினி ஜாடை காட்டுகிறார். அதனால் மலேசியா மாமாவும் கிளம்பிவிடுகிறார். அடுத்து முத்து அடடா சரியா மாட்டாம போச்சே. இல்ல சிக்க வேண்டிய ஆளு சிக்கிருக்கும் என்கிறார். இதனால் ரோகினி ஊருக்கு போகலாம் என்கிறார். உடனே விஜயாவும் ஊருக்கு கிளம்பலாம் என்கிறார்.

அடுத்து பாட்டி நீங்க இன்னும் இரண்டு நாளுக்கு இங்கு தான் இருக்கணும். உங்களுக்கு போர் அடிக்காம நான் சில விளையாட்டுக்களை ரெடி செஞ்சு இருக்கேன் என்கிறார். அப்போ ரோகினி அந்த முத்துவை ஜெயிக்கணும் என மனோஜிடம் சொல்கிறார். ஸ்ருதியும் முத்துவை ஜெயிக்கணும் என்கிறார். ஆனால் மீனாவிடம் நாம ஜெயிக்கணும் எனக் கூறும் முத்து, மீனாவோ நம்ம வீடு யாரு ஜெயிச்சா என்ன என்கிறார்.

இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…

இதை கேட்கும் பாட்டி மீனாவை மனசுக்குள்ளே மெய்ச்சிக்கிறார். இதனை தொடர்ந்து குடும்பத்தில் பெண்களை அண்ணாமலை தலைவராக இருக்கும் டீமிலும், ஆண்களை விஜயா தலைவராக இருக்கும் டீமிலும் பாட்டி போட்டு விடுகிறார். இதை தொடர்ந்து மனோஜ் விளையாட தொடங்க அவர் பானையை அடிக்க முடியாமல் திணறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top