Categories: latest newstelevision

சண்டையே போடாமல் ஸ்ருதிக்கு பல்ப் கொடுத்த முத்து!… காண்டான விஜயா.. நல்லா தான் இருக்குப்பா!..

Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் மீனாவுக்காக முத்து புதிய பூக்கடை திறந்ததை பார்த்து அண்ணாமலை மீனாவின் குடும்பத்தார் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ரோகினிக்கு பயம் வருகிறது. மீனா சின்ன கடையா இருந்தாலும் அதக்கு ஓனர். நம்ம பார்லரில் வேலை தானே செய்றோம்.

அது தெரிஞ்சா என்ன நடக்குமோ என நினைத்து கொள்கிறார். மீனா முதல் முறையா ஒரு கடைக்கு ஓனாராக போறேன். உங்க பையனால நடக்க போகுது, எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று விஜயா, அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்கின்றனர்.

இதையும் படிங்க:  டப்பிங் முடிந்தது என நினைச்சு வெளிநாடு புறப்பட்ட கமல்! கடைசி நேரத்தில் அவருக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா?

அதன் பிறகு மீனாவின் அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கடையை யார் திறக்க போறாங்க தெரியுமா என்கிறார் முத்து. அம்மா தானே என ரவி கேட்க இல்ல ஸ்ருதி என்கிறார். எல்லார் தலைமையில் இந்த வீட்டோட கடைசி மருமக தான் திறக்க போறாங்க. பொதுவா ஒரு கடையை திறக்க எல்லாரும் செலிப்ரிட்டி தான் கூப்பிடுவாங்க. ஸ்ருதி சினிமால இருக்கதால எங்க கடையும் பிரபலம் ஆகும் தானே அதான் சொல்றேன் என்கிறார்.

எல்லாரும் அமோதிக்க ஸ்ருதி ரிப்பன் கட் செஞ்சு கடையை திறந்து வைக்கிறார். அண்ணாமலையிடம் 100 ரூபாய் கொடுத்து பூ வாங்கி வியாபாரம் செய்ய சொல்கிறார். அவரும் வாங்கி விஜயாவிடம் கொடுக்கிறார். உடனே முத்து ஸ்ருதியிடம் ஒரு பணக்கவரை நீட்டுகிறார். செலபிரிட்டி வந்தா காசு கொடுப்பாங்கள அதான் இதுல 2500 இருக்கு எனக் கொடுக்கிறார்.

ரவியும் வாங்கிக்கோ எனச் சொல்ல ஸ்ருதி கடுப்புடன் வாங்கி கொண்டு உள்ளே சென்று விடுகிறார். வீட்டுக்குள் வந்த விஜயா கடுப்பாகி இருக்க பார்வதி போன் செய்து வாழ்த்து சொல்கிறார். தொடர்ந்து உறவினர்களிடம் கால் வர இவங்களுக்கு எப்படி தெரியும் எனக் கேட்க முத்து போஸ்ட் போட்ருக்கான்ல எனச் சொல்லிவிடுகிறார் பார்வதி.

இதையும் படிங்க: அப்போ கூல் சுரேஷ்.. இப்போ தனுஷ் ஃபேன்.. பாவம் ஐஸ்வர்யா.. கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை

மீனாவை அடிமையா வச்சிக்க நினைக்கிறாரு. பாரு இனி கார் ஓட்ட போக மாட்டாரு. கடையில் இருந்து வரும் வருமானத்தில் குடிச்சிட்டே இருக்கப்போறாரு என்கிறார். இதில் கடுப்பாகும் ரவி, உனக்கு சினிமா, சீரியலில் டப்பிங் பேசி எல்லாத்துலையுமே கண்ணோட்டம் மாறிட்டு எனத் திட்டுகிறார் ரவி. இதில் ஸ்ருதி கோவமாவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Akhilan

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago