Categories: latest newstelevision

ஸ்ருதியால் பல்ப் வாங்கிய விஜயா.. மனோஜுக்கும், ரோகினிக்கும் இந்த திருட்டு புத்தி போகாதா?

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி சமைக்க தொடங்க முத்து அங்கு வந்து எதுவும் உதவி செய்ய வேண்டுமா என கேட்கிறார். காய்கறிகளை கட் பண்ணித்தா எனக் கூறிவிட்டு நிலக்கடலையை தோலுரிக்கணும் என கூறுகிறார் ரவி. உடனே முத்து பார்க்கில் உட்கார்ந்து கல்லை போட்டவனை கூப்பிட்டு செய்ய சொல்லலாம் என மனோஜை அழைக்கிறார். இதனால் கடுப்பாகும் மனோஜ் எனக்கு சாப்பாடு வேண்டாம்.

நான் என்ன உன்னை போல் சமையல்காரன் என நினைத்தாயா என்கிறார். இதனால் கடுப்பாகும் ரவி நான் செப். ஓவரா பேசாதே என்கிறார். உடனே முத்து அவனுக்காவது ஒரு வேலை இருக்கு உனக்கு அது கூட இல்லை என கிண்டல் செய்கிறார். இருந்தும் எனக்கு சாப்பாடு வேண்டாம் என மனோஜ் கூறி விட அங்கு வரும் ரோகிணி தனக்கும் வேண்டாம் எனக் கூறி விடுகிறார்.

இதையும் படிங்க: அஜித் அந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்!.. ரகசியம் சொன்ன பிரபல காமெடி நடிகர்!..

ரவி நான் நல்லா சமைப்பேன் அண்ணி என சொல்லியும் கூட எங்களுக்கு வேண்டாம் நாங்க ஆர்டர் செய்து கொள்கிறோம் என கூறிவிடுகிறார் ரோகினி. பின்னர் எல்லாருக்கும் சமைத்து ரவி எடுத்துக் கொண்டுவர ரோகினியும் மனோஜ் ஆர்டர் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எல்லா ரெஸ்டாரண்டிலும் பெரிய அளவில் தொகை போட்டு இருக்க ரோகினி சத்தம் இல்லாமல் சமையல் கட்டிற்குள் செல்கிறார். இங்கு ரவியின் சமையலை அனைவரும் ஆஹாஓஹோ என பாராட்டுக்கின்றனர். ஸ்ருதியை கொடுத்து வச்சவ எனவும் சொல்கின்றனர். ரோகினி  பின்னாலே சென்ற மனோஜ் கிச்சடியை போட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கின்றார்.

ரோகினி அங்கு இருப்பதை பார்த்து இருவரும் ஊட்டி விட்டு கொள்கின்றனர். சரியாக முத்து அங்கு வர கலாய்ப்பார் என நினைக்க அவர் சத்தமில்லாமல் தண்ணியை வச்சிட்டு சென்று விடுகிறார். இங்கு ரவிக்கு சீதா சூப்பரா இருந்துச்சு எனக் கைக்கொடுக்க வர விஜயா இப்போ உனக்கு மாலை கட்ட நேரம் ஆகலையா என்கிறார்.

இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் அடம்பிடித்த ரசிகர்… கார்த்திக் செய்த அந்த சம்பவம்..!

ரவி இப்போ எதுக்கு உனக்கு இந்த சந்தேகம் எனக் கேட்கிறார். எனக்கு இல்ல ஆண்ட்டிக்கு தான் என மொத்தமாக போட்டு கொடுத்து விடுகிறார். இதனால் ரவி உங்களை அப்புறம் பேசிக்கிறேன். அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா எனத் திட்டிவிடுகிறார். முத்து சீதா பத்தி நீங்க ஏன் பேசுறீங்க எனவும் திட்டிவிடுகிறார். இங்கு சத்யா சிட்டியை பார்க்க வருகிறார். பின்னர் தனக்கு சரக்கு ஊத்து எனவும் கூறுகிறார்.

வீட்டில் பிரச்னை பண்ண மாட்டாங்களா எனக் கேட்க அம்மா தூங்கிட்டாங்க. சீதா அக்கா வீட்டுக்கு போயிட்டதா கூறுகிறார். என்ன விஷயம் என அவர்கள் கேட்க மாமா 500 மாலைக்கு ஆர்டர் எடுத்து இருப்பதாக உளறி விடுகிறார். இதையடுத்து சிட்டி தன் ஆட்களை அனுப்பி மாலை எடுத்துச் செல்லும் வண்டியை மறிச்சு மாலையை தூக்கிடலாம் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago