Categories: latest newstelevision

மீனா வாங்கி கொடுத்த காரால் பிரச்னையில் சிக்கிய ரோகினி… விஜயா நீங்க வெவரம் தான்!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மீனாவும் முத்துவும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். இருவரும் சந்தோஷமாக பேசி சென்று கொண்டிருக்கும் போது பூக்கடையை பார்க்கிறார் முத்து. அங்கிருந்த எல்லா பூவையும் வாங்கி மீனா தலையில் வைத்து விடுகிறார்.

பின்னர் மீனாவை அழைத்துக் கொண்டு கார் ஷெட்டுக்கு சென்று நண்பர்களிடம் மனைவி வாங்கி கொடுத்த கார் எனப் பெருமையாக பேசி கொள்கிறார். பின்னர் மீனாவின் பெயர் எழுத போறேன் என முத்து கூற, உங்க பெயரையே எழுதுங்க என மீனா கூற  கடைசியில் பொதுவாக எம் என்ற எழுத்தை போடுகின்றனர்.

இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

வீட்டில் அண்ணாமலை மனோஜை ஏதாவது நல்ல வேலைக்கு போடா என்கிறார். அவரோ எனக்கு தான் வேலை கிடைச்சிட்டேப்பா காசு கொடுத்தா உடனே ஓகே வாங்கிடலாம் என்கிறார். நீ இங்கேயே ஒரு வேலையில் முழுசா இருக்க மாட்ற இதுல கனடாவுக்கா போக போற என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் வரும் ரோகிணி ஒரு பட்டுப்புடவை கொடுத்து மலேசியாவில் இருந்து மாமா அனுப்பியதாக பொய் சொல்கிறார். அதை பார்த்து விஜயா வாயெல்லாம் பல்லாக்கு சிரிக்க அப்பாடா சண்டை முடிஞ்சுச்சு என நிம்மதி பெருமூச்சு விடுகிறார் ரோகிணி.

அப்போ தலை நிறைய பூவுடன் மீனா வர கடையில் விற்காத பூவெல்லாம் உன் தலையில வச்சுக்கிட்டியா என நக்கல் அடிக்கிறார் விஜயா. உடனே முத்து குடும்பத்தினரை கீழே அழைத்துச் சென்று காரை காட்டுகிறார். இந்த கார் எவ்வளவு வரும் 10 லட்சம் என்கிறார் முத்து.

இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

இதனால் விஜயா வாய் பிளக்க உடனே மனோஜ் அவ்ளோ எல்லாம் ஆகாது மா ரெண்டு இல்ல மூணு லட்சம் தான் ஆகும் என்கிறார். எவ்வளவு ஆனா என்ன என் பொண்டாட்டி அவ காசில் வாங்கி கொடுத்தது. என் பொண்டாட்டி மலேசியா இருந்தா 10 கோடிக்கு கூட கார் வாங்கி கொடுப்பா என்கிறார் முத்து.

இதைக் கேட்டு விஜயா ரோகிணியை பார்த்து முறைக்கிறார். பின்னர் ரூமுக்கு வரும் விஜயா ரோகினி இடம் பேச்சு கொடுக்கிறார்.  பூ கட்டிய கார் வாங்கிட்டா பாரு என அவர் சொல்ல அந்த மனோஜ்க்கு தான் ஒரு வழி பொறக்க மாட்டேங்குது என்கிறார். இதனால் ரோகினி காசுக்கு தான் பேசுறாங்களோ என அதிர்ச்சியாக நிற்பதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Akhilan

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

8 hours ago