More
Categories: Cinema News latest news television

உங்க அப்பா எங்க? ரோகினியை படுத்தும் விஜயா… முத்துவை நெருங்கும் பிரச்னைகள்!…

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியின் அம்மாவும், விஜயாவும் இரண்டு மாலையை வச்சிக்கிட்டு பிரச்னை செய்ய அதை ரெண்டையும் வாங்கி போட்டுக்கொண்டு பிரச்னையை முடித்துவிடுகிறார் ஸ்ருதி. பெரிய பிரச்னை வெடிக்கும் என முத்து எதிர்பார்க்க ஸ்ருதி இரண்டு மாலையோடு வந்து ஷாக் கொடுக்கிறார்.

விஜயா ஸ்ருதிக்கு நல்ல மனசு. எப்படி பிரச்னையை ஈஸியா சமாளிச்சிட்டா எனக் கூறுகிறார். அதே போல நல்ல மனசு மீனாக்கும்  இருக்கு என்கிறார் அண்ணாமலை. ஸ்ருதி அம்மா ஒருவரை அனுப்பி முத்துவிடம் வம்பு இழுக்க செய்கிறார். அவர் போன் பேசுவது போல முத்து காலை மிதித்து நிற்கிறார்.

இதையும் படிங்க: 80களில் சிறகடித்துப் பறந்த சின்னக்குயில் சித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?..

ஆனால் முத்து சமாளித்துக் கொண்டு கத்த போவதாக எழுந்து சாமியே சரணம் ஐயப்பா எனக் கத்துகிறார். இதை  பார்த்த மீனா கடுப்பாகி அவரிடம் சண்டைக்கு போக முத்து சமாளித்து உட்கார வைக்கிறார். போன் பேசியவரும் கோவமே வரலையா என முத்துவை சீண்டி பார்க்கிறார். ஆனால் விடாப்பிடியாக இருக்கிறார் முத்து.

இதை பார்த்து ஸ்ருதி அம்மா கடுப்பாகி விடுகிறார். ரோகினி ரூமுக்கு வரும் விஜயா உங்க அப்பா எங்க எனக் கேட்க அவர் இன்னும் ப்ளைட்லேந்து இறங்கலை என்கிறார். உங்க அப்பா வருவாருனு தான் பெருமையா ஸ்ருதியோட அப்பா அம்மாகிட்ட சொல்லி வச்சிருக்கேன்.

இதையும் படிங்க: பேரரசுக்கு மேடையிலேயே ஆப்பு வைத்த வெற்றிமாறன்!.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!..

அவங்களும் மலேசியாவில் இருந்து ஆள் வருவதாக சொந்தக்காரங்களிடம் சொல்லி வச்சிருக்காங்க. அவர் வராமல் போய்ட்டா என் மானமே போய்டும் என்கிறார். பேசிக்கொண்டே ரோகினி கழுத்தை பார்க்க அவரிடம் நகையே இல்லாமல் இருப்பதாக பேசுகிறார் விஜயா. ஸ்ருதி கழுத்தில் இடமே இல்லாமல் நகையை போட்டு இருக்கா எனக் கூறி தன் செயினை கழற்றி போட்டுவிடுகிறார்.

உங்க அப்பா வரப்ப 3 கிலோ கொண்டு வருவரா என்கிறார். வித்யா அவ்வளோ எடுத்துட்டு வர முடியாது ஆண்ட்டி. முடிஞ்ச வரை வரட்டும் எனக் கூறி அப்பா வந்ததும் கால் பண்ணு என வெளியில் சென்று விடுகிறார். முத்துவிடம் பிரச்னை பண்ண ஆள் ரெடி செய்து அழைத்து வருகிறார் வித்யா. ரோகினி கடுப்பில் இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Published by
Akhilan

Recent Posts