முத்து-மீனாக்கு கல்யாண நாள் கொண்டாடிட்டாங்கப்பா…அடுத்த விஷயத்துக்கு வாங்க?

by Akhilan |
முத்து-மீனாக்கு கல்யாண நாள் கொண்டாடிட்டாங்கப்பா…அடுத்த விஷயத்துக்கு வாங்க?
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பாட்டி வர முத்து சந்தோஷமாகிறார். உங்க கல்யாண நாளுக்கு தான் வந்திருக்கேன் என்கிறார். பின்னர், முத்து மீனாவுக்கு வாங்கி வந்த மோதிரத்தினை காட்ட பாட்டி சந்தோஷமாகிறார். பொண்டாட்டி பேச்சை கேட்டு நடந்துக்கோ எனக் கூறுகிறார்.

விஜயா என்ன அத்தை சொன்னீங்க எனக் கேட்க நல்லது சொன்னா கேட்கணும். கெட்டது சொன்னா கேட்க கூடாது என பதிலடி கொடுக்கிறார். விஜயா சோகமா ஹாலில் உட்கார்ந்து இருக்க ரோகிணி என்னாச்சு என்கிறார். பாட்டி வந்தா அம்மாக்கு பியூஸ் போயிடும் என மனோஜ் கலாய்கிறார். இதையடுத்து பாட்டி அழைக்க விஜயா பயந்து ஓடுகிறார்.

இதையும் படிங்க: மத்தவங்க பேசட்டும்!.. எனக்கு வேலை இருக்கு!.. இளையராஜா வெளியிட்ட வீடியோ…

மீனா வீட்டுக்கு வர எல்லாரும் இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்கின்றனர். பின்னர் சத்யா வர முத்து கோபப்படுகிறார். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் பொருட்டு இந்திரா சத்யா வாங்கி கொடுத்த சட்டைதான் முத்து போட்டிருப்பதாக சொல்லிவிடுகிறார். இதைக் கேட்ட முத்து கடுப்பாகி இதை உங்க அம்மா வாங்கிட்டு வந்ததாக சொன்ன என மீனாவிடம் சத்தம் போடுகிறார்.

சத்தியா ஏன் நான் வாங்கிட்டு வந்த சட்டை ய உங்களால போட முடியாதா என தெனாவட்டாக பேசுகிறார். உடனே கடுப்பாகும் முத்து சட்டை கழட்டி போட்டுவிட்டு வெளியேறுகிறார். அப்போ அவரிடம் ஓடிவரும் இன்னா இப்படியே வீட்டுக்கு போனால் தப்பா தான நினைப்பாங்க என்கிறார். ஒரு டிரஸ் கடை முன் வண்டியை நிறுத்தும் முத்து சட்டை வாங்க பனியனுடன் உள்ளே செல்கிறார்.

இதையும் படிங்க: கோபியுடன் கிளம்பிய ஈஸ்வரி… கவலைப்படாமல் வழி அனுப்பி வைத்த குடும்பம்.. என்ன அடுத்த உருட்டா?

அப்போ ஒரு முத்துவின் சட்டை மாறிப்பதை விஜயா கண்டுபிடித்து விடுகிறார். உடனே ரோகிணி அவங்க வீட்ல வாங்கி கொடுத்த இன்னொரு சட்டையாக இருக்கும் என்கிறார். அவங்களது ரெண்டு சட்டை வாங்கி கொடுக்கிறதாவது வேறு என்னமோ நடந்திருக்கு என்கிறார் விஜயா. என்ன விஷயம் என கேட்க மீனா வீட்ல வாங்கி கொடுத்தது எனக் கூற, மீனா காபி கொட்டி விட்டதாக மாற்றி சொல்லிவிடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

Next Story