Connect with us

Cinema News

ரூம் விஷயத்தில் புதிய வெடியை கிள்ளி போட்ட பாட்டி… அடுத்த ரவுண்ட் என்ன நடக்குமோ?

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் ரவி மற்றும் ஸ்ருதி வேலைக்கு கிளம்ப அவர்களையும் நிறுத்தி மற்றவர்களையும் அழைத்து ரூம் குறித்த விஷயத்தை பேசுகிறார் அண்ணாமலை. இதுக்கு முன்னாடி நீங்க எல்லாம் கல்யாணம் ஆகாம இருந்ததுனால இருந்த ரூம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டிங்க. ஆனா இப்போ உங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு குடும்பமா இருக்கீங்க. அதனால மாடியில் ஒரு ரூம் கட்டலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்கிறார்.

உடனே முத்து எதுக்கு பா தேவை இல்லாத செலவு எனக் கூற ஸ்ருதி ரூம் கட்ட வேண்டாம் ஒரு ப்ளோரே எடுத்துவிடலாம் என்கிறார். விஜயாவும் ஹால் கிச்சனோட சேர்த்து கட்டிடலாம் எனக்கு கூறுகிறார். இதைக் கேட்கும் முத்து யாரையோ தனிக்குடித்தனம் வைக்கிற பிளான்ல இருக்கீங்க போல என்ன நக்கல் செய்கிறார். ஸ்ருதி செலவுக்கு எங்க அப்பா கிட்ட கேட்கலாம் எனக் கூற அண்ணாமலைய அதை மறுத்துவிடுகிறார்.

இதையும் படிங்க: நான் ஏன் அங்க போய் அவரை பாக்கணும்?!.. கோபப்பட்ட பாக்கியராஜ்.. இளையராஜாவை பிரிந்த பின்னணி!…

இந்த செலவுக்கு என்ன செய்வீங்க என மனோஜ் கேட்க கவலைப்படாத உன்கிட்ட கேட்க மாட்டாரு என்கிறார் முத்து. உடனே அண்ணாமலை யாரும் கொடுக்க வேண்டாம் என்னுடைய பென்ஷன் பணத்திலிருந்து கட்ட இருப்பதாக கூறுகிறார். ஆனால் முத்து அதெல்லாம் வேணாம் என மறுத்து விடுகிறார். உடனே பாட்டி நான் வேற ஒரு ஐடியா சொல்கிறேன் என்கிறார். இருக்க ரெண்டு ரூம்ல 3 ஜோடியும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கோங்க. 

இந்த வாரம் ரோகிணி மற்றும் மனோஜ் வெளியில் படுக்க, அடுத்த வாரம் சுருதி மற்றும் ரவி வெளியில் படுக்கலாம் என்கிறார். இதை கேட்டு ஷாக் ஆகும் மனோஜ் எதுக்கு பாட்டி இதெல்லாம். அவன் தான் வெளிய படுத்துகிறேன் என்று சொல்கிறானே என இழுக்க முத்து ஆனா நான் இப்ப அப்படி சொல்ல மாட்டேன் என பல்ப் கொடுக்கிறார். எனக்கு இந்த ஐடியா தோனலையே. பாட்டி சொல்றது தான் சரி என்று முடிவிற்கு வருகின்றனர்.

அதன்படி இன்று ரோகினி மற்றும் மனோஜ் வெளியில் படுக்க, அவர்கள் ரூமில் முத்து மற்றும் மீனா தூங்குவதாக முடிவெடுக்கப்படுகிறது. கிச்சனில் இருக்கும் மீனாவை சந்திக்கும் பாட்டியிடம் எதுக்கு பாட்டி இந்த ரூம் எல்லாம் என கேட்கிறார். நீ இப்படி தான் பேசுவேன் என்று எனக்கு தெரியும். ஹால்ல படுத்து இருந்தா குடும்பம் எப்படி விருத்தியாகும். தனிமை கிடைச்சா தான் அன்னியோனியம் வரும் என அறிவை சொல்லி வெளியேறுகிறார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கு மட்டும்தனா?.. எனக்கு இல்லையா?.. கலைஞரிடமே சண்டை போட்ட சிவக்குமார்!…

தன்னுடைய பார்க் நண்பரை ஷோரூம் அழைத்து காட்டிக் கொண்டிருக்கிறார் மனோஜ். நீ சொன்ன மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து வேலை செய்ய ஐடியா கண்டுபிடிச்சிட்ட என நண்பர் கலாய்த்து கொண்டிருக்கிறார். ரோகிணியும் வித்யாவை அழைத்து வந்து காட்டிக் கொண்டிருக்கிறார். நல்ல வழி பொறந்து இருக்கு. இதை பிடிச்சுட்டு மனோஜ் மேலே இருந்தா எங்க லைஃப் மாறிடும் என்கிறார்.

உன்ன பத்தி தெரிஞ்சா எப்படி மாறும் தெரியுமா என வித்யா கேட்க, இப்போ நான் அவனுக்கு சப்போர்ட்டா இருந்தா அப்ப வந்து என்ன எதுவும் சொல்ல மாட்டான் என்கிறார் ரோகினி. ஓனர் போனவுடன் சேரில் உட்கார்ந்து கொள்கிறார் மனோஜ். கடையே இன்னும் வாங்கல அதுக்குள்ளயா என பார்க் நண்பர் கலாய்க்க ரோகினியின் முகம் மாறுகிறது. எப்போ திறப்பு விழா என கேட்க சீக்கிரம் டேட் முடிவு பண்ணனும் என்கின்றனர்.

இதையும் படிங்க: ஓவர் வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்!.. அந்த படம் தாமதமானதால் வந்த விளைவா?..

அண்ணாமலை வந்து எதுக்குடா சத்தம் போட்டுட்டு இருக்க எனக் கேட்க விஜயா அது என்ன அவனுக்கு புதுசான விஷயமா என்கிறார். இன்னிக்கு நாங்க தான் உள்ள படுக்கணும் வரல எனக் கூற வெளியில் வரும் மனோஜ் ஹாலில் ஏசி கூட இல்லை என்கிறார். விஜயாவும் அவருக்கு சப்போர்ட்டாக பேச அண்ணாமலை வாயை அடைக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top