ரூமுக்கு போன முத்து, மீனா… கடுப்பில் இருக்கும் ரோகிணி, மனோஜ்… நடத்துங்க நடத்துங்க…
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா இருவரும் மனோஜ் ரூமில் படுக்க செல்கின்றனர். ஹாலில் கடுப்பாக உட்கார்ந்து இருந்த மனோஜ் திடீரென சென்று கதவை தட்டுகிறார். முத்து கதவை திறந்து என்ன வேண்டும் என கேட்க சார்ஜர் வேணும் என்கிறார். அதை கொடுத்துவிட்டு மீண்டும் முத்து கதவை சாத்தி விட கடுப்பாக வந்து உட்கார்கிறார் மனோஜ். பின்னர் திரும்பி என்னுடைய பேவரிட் தலவாணி எங்க என அதையும் போய் கதவைத் தட்டி வாங்குகிறார்.
இன்னும் சிறிது நேரம் கழித்து மீண்டும் சென்ற கதவை தட்ட கடுப்பாகும் முத்து அவருடைய சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் மூட்டையாய் கட்டி மனோஜிடம் கொடுக்கிறார். இனிமே வந்து கதவை தட்டின விரலை ஒடச்சிடுவேன் என மிரட்டி விட்டு செல்கிறார். பாயில் படுக்கும் மனோஜ் கோபமாக இருக்க இன்னும் ஒரு வாரம் தானே என்கிறார். எப்படியும் மாதத்தில் இரண்டு மூன்று தடவை இப்படித்தான் வந்து படுக்கணும் என ரோகிணிடம் கூறுகிறார். அதெல்லாம் அடுத்த வாரமே ஒரு முடிவு வந்துரும்.
இதையும் படிங்க: இதுக்கு கரகாட்டக்காரன் காரே தேவலாம்!.. இந்த தகர டப்பா காருக்குத்தான் கீர்த்தி சுரேஷ் வாய்ஸா?..
ஸ்ருதி பத்தி எனக்கு தெரியும். அவளால தரையில படுக்க முடியாது. கண்டிப்பா எதாச்சும் பிரச்சினை பண்ணுவா. அதனால இந்த ஒரு வாரம் மட்டும் பொறுத்துக்கோ என்கிறார் ரோகிணி. ரூமில் மீனா தரையில் பாயை விரிக்கிறார். பெட்டில் படுக்காமல் ஏன் கீழ படுக்கிற என முத்து கேட்கிறார். அது நம்ம பெட் இல்லை. அடுத்த வாரம் நமக்கு கிடைக்குமா என தெரியாது. இதுதான் நிரந்தரம் என பாயை விரித்து கீழே படுகிறார். முத்துவும் அவருடனே கீழே படுக்க, நீங்க ஏன் கீழே படிக்கிறீங்க என கேட்கிறார்.
மீனா உன்கிட்ட ஒரு பூ வாசனை வரும். அது இல்லாம என்னால தூங்க முடியாது என்கிறார். இதையடுத்து ரோகிணி தூங்கி விட மனோஜ் உருண்டு கொண்டே இருந்து காலை வரை தூங்காமல் இருக்கிறார். காலை எழுந்து வரும் விஜயாவிடம் என்னால நைட் ஃபுல்லா தூங்கவே முடியல. பிசினஸ் தொடங்க போறேன். நாள் ஃபுல்லா கிரியேட்டிவிட்டியோட வேலை செய்யணும். என் ரூமை வாங்கிக் கொடுமா என்கிறார். முதல்ல பிசினஸ் தொடங்கு, இந்த ஒரு வாரம் பொறுத்துக்கிட்டு படுத்துக்கோ என சொல்லிவிட்டு செல்கிறார் விஜயா.
பின்னர் எல்லாரும் சாப்பிட அமர்ந்திருக்க மனோஜ் தூங்கி வழிவதை பார்த்து முத்து கலாய்க்கிறார். பின்னர் கடை திறப்பு விழாவிற்கு ரிப்பன் கட் செய்ய யாரை கூப்பிடலாம் என பேச்சு வருகிறது. மனோஜ் தன் பெயரை கூறுவார் என விஜயா காத்திருக்க அவரோ செலிபிரிட்டி யாரையாவது கூப்பிடலாம் என இருப்பதாக அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் விஜயாவின் முகமே மாறுகிறது. இதை முத்து கவனித்து விடுகிறார். வீட்டில் பெரியவங்க இருக்காங்க அம்மா இருக்காங்க, அவங்கள வச்சு கடையை திறக்கலாம் என கூறும் போது விஜயா அவரை ஆச்சரியமாக பார்க்கிறார்.
இதையும் படிங்க: கரகாட்டக்காரன் எந்த படத்தின் சாயல் தெரியுமா? அடடா… இவ்ளோ விஷயங்கள் ஒத்துப்போகுதா?
இருந்தும் மனோஜ் இது ஒரு பிசினஸ். செலிபிரிட் வச்சி கடையை திறந்தால் தான் அது கடைக்கு விளம்பரமா அமையும் என்கிறார். அப்போ உனக்கு பாப்புலர் ஆகணும். பேசாம பார்லர் அம்மாவை கழட்டிவிட்டு எதாச்சும் செலிபிரிட்டி கல்யாணம் பண்ணிக்கோ என முத்து கலாய்க்கிறார். ஒரு கட்டத்தில் விஜயாவின் முகம் மாற்றத்தை கணிக்கும் ரோகிணி ஆன்ட்டி வச்சே கடை திறந்திடலாம் என்கிறார். மனோஜ் மட்டும் இதற்கு எதிராக இருக்க அதை பார்த்து விஜயா முகமாடுகிறார். அண்ணாமலை கூறியதைக் கேட்டு கடைசியில் விஜயாதே கடையை திறக்கலாம் என ஒப்புக்கொள்கிறார். இதை பார்த்து முத்து சந்தோஷப்படுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.