சிறகடிக்க ஆசையை காலி செய்ய ப்ளான் போட்ட இயக்குனர்… இனி என்ன ஆகுமோ?
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் கார் வாங்கியவுடன் மினிஸ்டர் நண்பருடன் பாருக்கு செல்கிறார். அங்கு முத்துவை குடிக்க அழைக்கின்றனர். ஆனால் தான் வேலை சமயத்தில் குடிக்க மாட்டேன் எனக் கூறிவிடுகிறார் முத்து. அவர்கள் வற்புறுத்தியும் வேண்டாம் என வெளியில் வந்துவிடுகிறார்.
இதனால் முத்து வெளியில் காத்திருக்கிறார். பாட்டு கேட்கலாம் என போக அதுவும் சரக்கு சம்மந்தப்பட்ட பாட்டாகவே வர கடுப்பாகிறார். அடுத்ததாக ரவியை ரெஸ்டாரெண்டுக்கு பார்க்க வருகிறார் ஸ்ருதி. உடனே குழந்தை பெத்துக்கலாம் வா என அழைக்க ரவி ஷாக்காகி விடுகிறார். அது நாளைக்கே நடக்குமா? பத்து மாசம் ஆகும். வேண்டும்னா அதுக்கான பிராசஸை இப்போவே ஆரம்பிக்கலாம் என்கிறார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் ஊத்தி மூடிய அஜித்தின் ரீ ரிலீஸ் படங்கள்!.. ‘தல’ ஆட்டம் ஒரு நாள் கூட தாண்டலையே பாஸ்!..
ஏன் இந்த திடீர் ஆசை எனக் கேட்க ஒரு படத்துக்கு டப்பிங் பேசுனேன். அதில் வந்த குழந்தைகள் அழகாக இருந்ததாக கூறுகிறார். பெத்துக்கிறது பெருசு இல்ல அதை சரியா வளர்க்கணும் என்கிறார். நான் ஒருநாள் பார்த்துக்கிட்டா நீ ஒரு நாள் பார்த்துக்கோ. வேலைக்கு போறப்ப டே கேரில் விடலாம் எனக் கூறுகிறார். அப்போ அங்கு வரும் ஓனர் என்ன ரவி அதுக்குள்ள குழந்தையை பெத்துக்கிட்டியா எனக் கேட்கிறார்.
இல்ல இனிமே தான் பெத்துக்கணும் என ஸ்ருதி சொல்ல அவரை சமாளித்து அனுப்பி வைக்கிறார் ரவி. இப்போதான் நீ கேரியரில் வளர்ந்துக்கிட்டு இருக்க ரவி இப்போ குழந்தையை பெத்தணுமா என ஓனர் அட்வைஸ் செய்துவிட்டு செல்கிறார். இங்கு முத்துவுக்கு ஒரு சவாரி வருகிறது. சொல்லிவிட்டு செல்லலாம் என்பதற்காக உள்ளே செல்கிறார். அங்கே முத்து நண்பர் மட்டுமே இருக்க மினிஸ்டர் எங்கே எனக் கேட்கிறார் முத்து.
இதையும் படிங்க: ‘பில்லா’ படத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்! 16 வருஷம் கழிச்சு வெளிச்சத்திற்கு வந்த உண்மை
அவர் பாத்ரூம் சென்று இருப்பதாக சொல்கிறார். பின்னர் முத்து நண்பர் சரக்கு வாங்கிட்டு வர அதை முத்து திறந்து கொடுக்கிறார். அதை பார்க்கும் சிட்டி வீடியோவாக எடுத்து விடுகிறார். பின்னர் முத்து மினிஸ்டர் சொல்படி பக்கத்து டேபிளில் அமர்ந்து சிக்கன் சாப்பிடுகிறார். எழுந்து வெளியில் செல்ல ஒருவர் முன் இடித்துவிட தள்ளாடுவது போல அந்த வீடியோவில் பதிவாகிறது.
வீடியோவை முத்து கார் ஏறும் வரை எடுக்கும் சிட்டி இப்படி ஒரு டிரைவர் காரில் பயணம் செய்யாதீங்க என பரப்பிவிடுகிறார். வீடியோ தீயாக பரவுகிறது. மீனா வீட்டில் அம்மாவை பார்க்க வர அப்போ சத்யா வருகிறார். என்ன போன் எல்லாம் எப்படி வாங்குன எனக் கேட்கிறார். நீ அந்த சிட்டியோட சேராதே எனக் கூற அப்போ குடிக்காரனோட சேரவா என்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: அரண்மனை 4 எப்படி இருக்கு?.. தமன்னா, ராஷி கன்னாவ பார்க்குறதுக்கே துட்டை அள்ளி வீசலாம் போல!..