அண்ணாமலை போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விஜயா… நடக்காத விஷயத்துக்கு இத்தனை கூத்தா?

by Akhilan |
அண்ணாமலை போட்ட கண்டிஷனால் ஆடிப்போன விஜயா… நடக்காத விஷயத்துக்கு இத்தனை கூத்தா?
X

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா சாப்பிடாமல் முரண்டு பிடித்து கொண்டு இருக்க குடும்பத்தினர் என்னவென்று கேட்கிறார்கள். ரவி வந்தால் தான் சாப்பிடுவேன் எனக் கூறுகிறார். இதனால் முத்து அதெல்லாம் ஒத்துக்காதீங்கப்பா என்கிறார்.

ரோகினி ரவி மட்டும் தப்பு செய்யலையே மாமா. ஆண்ட்டியும் பாவம் தானே என்கிறார். மனோஜோ ரவி வீட்டுக்கு வந்தால் நம்ம நிலைமை என்ன ஆகும்? இருந்தும் அம்மாவால் தான் நம்ம சமாளிக்க முடியும். அதனால் அப்பா, அம்மா என்ன முடிவு எடுத்தாலும் ஓகே என்கிறார்.

இதையும் படிங்க: விஜய் செஞ்ச வேலையில் அஜர்பைசானில் இருந்து கிளம்பிய அஜித்?!.. இது என்னடா அக்கப்போரு!..

இதையடுத்து அவங்களை போன் போட்டு வரச் சொல்கிறார் அண்ணாமலை. உடனே விஜயா இப்பையே கால் செய்யவா எனக் கேட்க, ஆனா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு எனக் கூறுகிறார் அண்ணாமலை. விஜயா என்னவென்று கேட்க, ஸ்ருதி பெற்றோர் அவங்களை அழைச்சிட்டு வந்து இது உங்க வீட்டு பொண்ணுனு விட்டுட்டு போணும் என்கிறார்.

அது எப்படி நடக்கும் என விஜயா கேட்க நான் இவ்வளோ இறங்கி வந்துட்டேன். இனிமே என்னால் ஒன்னும் முடியாது என்கிறார். இதையடுத்து ரூமுக்குள் வரும் முத்துவுக்கு உடம்பு வலி எடுக்கிறது. இதனால் மீனாவை அமுக்கி விட சொல்கிறார். அவர் முதுகில் ஏறி மிதித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: 3 மணி நேரம் உட்கார்ந்து பார்த்து போரடிச்ச திரைப்படங்கள்! ‘அஞ்சான்’ படத்தால் மார்கெட் இழந்த லிங்குசாமி

இதையடுத்து விஜயா அண்ணாமலையிடம் இதுகுறித்து போய் சொல்ல வலிக்காக மிதிச்சி விட்ருக்கும் எனச் சொல்லி சென்று விடுகிறார். ரவி விஷயத்தில மீனா மீது முத்து கோபமா இருப்பானு பாத்தா. கொஞ்சிட்டு இருக்கான் எனப் புலம்புவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story