ரோகினிக்கு வாசலில் வந்த ஆப்பு..! வீட்டுக்கு வர இருக்கும் ஸ்ருதி-ரவி.. களைக்கட்டும் போலயே..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் குடித்து விட்டு வர மீனா முத்துவை சமாதானம் செய்ய பார்க்கிறார். என் மேல எந்த தப்பும் இல்லை எனக் கூறுகிறார். இருந்தும் முத்து அதை ஏற்றுக் கொள்ளாமல் ரூமுக்கு போய் விடுகிறார். இதையடுத்து மீனாவுக்கு அம்மா கால் செய்து பேசுகிறார்.

காலை எடுத்து பேசிய மீனாவிடம் உன் புருஷன் உன் கிட்ட நல்லா பேசுறாரா எனக் கேட்கிறார். எல்லாரும் நல்லா தான் இருக்காங்கம்மா எனப் பொய் சொல்லிவிட்டு வைக்கிறார். அவர் ரூமுக்கு உள்ளே போக மீனாவை வழி மறிக்கிறார் விஜயா.

இதையும் வாசிங்க: ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

இதுக்கு கடுப்பான மீனா நான் ஏன் அதெல்லாம் பண்ண போறேன் என சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார். அடுத்த நாள் காலையில் ரோகினியும், விஜயாவும் கிச்சனில் இருக்கின்றனர். மில்க் ஷேக் செய்து கொண்டு இருக்க மனோஜ் வேலைக்கு கிளம்புகிறேன் என்கிறார்.

இதையடுத்து சாப்பாடு வாங்கி கொண்டு கிளம்ப பிஏ கொரியர் வேஷத்தில் உள்ளே நுழைகிறார். சமையலறையில் இருக்கும் ரோகினியை மீனா வந்து அழைக்கிறார். உடனே விஜயாவும் உங்க அப்பா தான் தீபாவளி சீர் கொடுத்து விட்டு இருப்பார் என சந்தோஷத்தில் வருகிறார்.

பிறகு கொரியர் மேன் வேஷத்தில் அந்த வசிகரனை பார்க்க ரோகினி அதிர்கிறார். ஏடிஎம் கார்டு தான் வந்து இருக்கு எனச் சொல்ல விஜயா சோகம் ஆகிவிடுகிறார். நீங்க போங்க அத்தை. சமையலை பாருங்க என உள்ளே அனுப்பி விடுகிறார்.

இதையும் வாசிங்க:20 வருஷம் கழிச்சி அதே ரிஸ்க்கை எடுக்கும் சியான் விக்ரம்!.. அடுத்த பாலாவாக மாறிய ரஞ்சித்…

நீ என் நம்பரை ப்ளாக் பண்ணி இருக்க, அதனாலதான் வீடு தேடி வந்தேன். எனக்கு 50 ஆயிரம் வேணும் என்கிறார். இதையடுத்து நாளைக்குள் தந்து விடுகிறேன் என்று ரோகினி சொல்கிறார். நாளை 7 மணி வரை தான் டைம். அதுக்கு மேல ஆச்சுனா வீட்டுக்கு வந்திடுவேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.

இதையடுத்து மீனா நின்று கொண்டு இருக்க விஷயம் தெரிந்துவிட்டதோ என ரோகினி மிரள சமையல் என்ன செய்யணும் என்கிறார். இதனால் அவருக்கு எதுவும் தெரியவில்லை என நிம்மதி அடைகிறார் ரோகினி. பிறகு மனோஜ் போனை எடுக்க வீட்டுக்கு திரும்பி வருகிறார்.

அவரிடம் ரோகினி ஆபிஸில் தீபாவளி போனஸ் கிடைக்குமா எனக் கேட்டு பார். எனக்கு பார்லரில் போனஸ் கொடுக்க காசு வேணும் எனக் கேட்கிறார். இதை ஓட்டு கேட்ட விஜயா என்ன இப்படி ஆச்சே என யோசித்து நிற்க மனோஜ் வந்து ரோகினியை குறை சொல்கிறார். சரி நீ போ நான் எதுவும் ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்.

இதையும் வாசிங்க:இந்த படத்துல ஜெமினி நடிக்கக்கூடாது!.. சாவித்ரி போட்ட கண்டிஷனில் தலைதெறிக்க ஓடிய இயக்குனர்…

பார்வதியை பார்க்க வரும் விஜயா கடனாக காசு கேட்க 25 ஆயிரம் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து ஸ்ருதி ரொம்பவே பணக்காரி. அவளுக்கு நிறைய சொத்து கேரளாவில் இருப்பதாக பார்வதி கூற விஜயா வாயடைத்து போய் நிற்கிறார். அவங்களை வீட்டுக்கு கூப்பிடு எனக் கூற அண்ணாமலை மற்றும் முத்து என்ன செய்வாங்களோ என நினைத்து பதறுகிறார். நீ தான் சமாதானம் செய்யணும் எனக் கூற விஜயா யோசிப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it