Siragadikka Aasai: ரோகிணி பிரச்சனைக்கு முத்து செய்த ஐடியா.... திமிர் காட்டிய விஜயா!

by Akhilan |
Siragadikka Aasai: ரோகிணி பிரச்சனைக்கு முத்து செய்த ஐடியா.... திமிர் காட்டிய விஜயா!
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

மனோஜ் தன்னை அம்மாவிடம் சண்டை போட வைக்கிறீங்களா எனக் கூறி நக்கலாக பேசுகிறார். இதனால் முத்து கோபப்பட்டு திட்ட அவர் கண்டுக்காமல் அம்மா எது செய்தாலும் சரியாக தான் இருக்கும் என்கிறார்.

ரவி என்னடா இப்படி பேசுற அண்ணிக்காகவும் பேசு எனக் கூற மனோஜ் மறுத்து விடுகிறார். இதில் முத்து கடுப்பாகி அவரை அடிக்க பாயா மீனா அமைதியாக்கி விடுகிறார். பின்னர் ஸ்ருதி இவரை தத்தெடுத்த்து வந்தீங்களா என்கிறார்.

இதில் ஷாக்காகும் ரவி அவன் அம்மா பிள்ளை அப்படிதான் இருப்பான் என்கிறார். இருந்தும் முத்து அடுத்த நாள் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட அண்ணாமலைக்கு முன் மீனா கார்டை எடுத்து வந்து தரச் சொல்ல அவர் எதுக்கு எனக் கேட்க ரோகிணி விஷயத்தை உடைக்கிறார்.

விஜயா முழிக்க அண்ணாமலை இப்படிலாம் நீ எதுக்கு செஞ்சிட்டு இருக்க எனக் கேட்கிறார். நான் செஞ்சதுல எந்த தப்பும் இல்லை என்கிறார் விஜயா. முத்து ரவியிடம் கேட்க மருமகளா கொடுத்தா தப்பு இல்ல. வலுகட்டாயமா பிடிங்கி வச்சிக்கிட்டா தப்புதான் என்கிறார்.

ஸ்ருதியும் அடாவடியா வாங்கி வச்சிக்கிறது தப்பு என்கிறார். இருந்தும் ரோகிணி ஆண்ட்டி செஞ்சதுல தப்பு இல்ல அங்கிள் என பேச விஜயா ஆச்சரியமாக பார்க்கிறார். தொடர்ந்து முத்துவை திமிர் பார்வை பார்க்க அண்ணாமலை ஒன்றும் சொல்ல முடியாமல் போகிறது.

முத்து கடுப்பாகி விடுகிறார். அண்ணாமலையும் நம்ம இதுல ஒன்னும் பண்றதுக்கு இல்லடா என்கிறார். தொடர்ந்து அருண் சாலையில் தன்னுடைய ட்யூட்டியில் இருக்கிறார். அப்போ முருகன் வர இவரை பார்த்து சந்தோஷத்தில் பேச வருகிறார்.

ஆனால் ஹெல்மெட் போடாததால் அவருக்கு அபராதம் போட்டு ஸ்லிப்பை கொடுக்கிறார். அவர் நம்ம பிரண்ட்டு சார் எனக் கேட்க அதெல்லாம் வெளியில் எனக் கறாராக சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் மீனாவும் இருவரை ஏற்றிக்கொண்டு பைக்கில் வருகிறார்.

இதை பார்க்கும் அருண் அவரை வழி மறித்து அபராதம் போட்டு விடுகிறார். மீனாவும் வழியில்லாமல் கட்டி விட்டு கிளம்புகிறார். பின்னர், சீதா வர மீனா கேட்ட விஷயத்தை அருணிடம் சொல்லுகிறார். அவரும் நல்லதா போச்சு சீக்கிரம் கல்யாணம் தானே எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Next Story