Siragadikka Aasai: விஜயாவிடம் இருந்து தப்பிக்க ரூட் பிடித்த ரோகிணி… சீதா காதல் கணிப்பாரா முத்து?

Published On: April 16, 2025
| Posted By : Akhilan

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

முத்து சத்யாவை காப்பாத்தி அழைத்து வருகிறார். வீட்டில் எல்லாரும் பதற்றத்தில் இருக்கின்றனர். சீதாவுக்கு அருண் கால் செய்து போலீஸ் அந்த இடத்துக்கு போறதுக்கு முன்னாடியே உங்க மாமா அந்த இடத்துக்கு போய் விட்டதாக கூறுகிறார்.

ஆமா எங்க மேல ரொம்ப பாசமா இருப்பாரு. நல்ல மனுஷனா இருப்பார் போல என அருண் கூற ஆமாம். ஆனா கொஞ்சம் முன்கோபி மத்தப்படி ரொம்ப தங்கமானவரு என்கிறார். முத்துவும் மீனாவுக்கு கால் செய்து விஷயத்தை கூறுகிறார்.

அந்த நேரத்தில் சீதா வீட்டிற்குள் வர சத்யாவை காப்பாற்றி விட்டதாக மீனா கூறுகிறார். சீதா ஆமா தெரியும் எனக் கூற எனக்கே இப்போதான். உனக்கு எப்படி என மீனா கேட்க உன் மூஞ்சுல இருந்த சந்தோஷமே சொல்லிடுச்சு அக்கா என சமாளிக்கிறார்.

வீட்டில் எல்லாரும் உட்கார்ந்து இருக்க வரும் ரோகிணி விஜயாவிடம் 20 ஆயிரத்தை கொடுக்கிறார். என்ன இது எனக் கேட்க நான் மேக்கப் போன ஆர்டர் காசு என்கிறார். விஜயா நக்கலாக ரோகிணியை பார்க்க மனோஜ் ஆசையா தானே தரா வாங்கிக்கோங்க என்கிறார்.

விஜயா வாங்கி பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார். பணத்தாசை இல்லை என சொன்னிங்க இது என்ன என ஸ்ருதி கேட்கிறார். அவரை அமைதியாக இருக்கும் படி கூறுகிறார் ரவி. அண்ணாமலை அந்த பொண்ணு ஏதோ ஒரு மரியாதைக்கு கொடுத்துச்சுன்னா நம்ம திருப்பி கொடுக்கணும் என்கிறார்.

கோர்ட்ல ஏதும் தப்பு செஞ்சா அபராதம் கொடுக்குற மாதிரி தான் என விஜயா கூறி விட அந்நேரம் வரும் மீனா சத்யா காலேஜ் முடிச்சதற்கு சாக்லேட் கொடுக்கிறார். எல்லாரும் வாழ்த்து கூற விஜயா ஆமா அப்படியே ஐஏஎஸ் முடிச்சிட்டாங்க என நக்கல் அடிக்கிறார்.

முத்து அவங்க கையில் 20 ஆயிரம் இருக்கு. நீ இப்போ போய் 2 ரூபா சாக்லேட் தந்தா எப்படி வாங்கிப்பாங்க என விஜயா மூக்கை உடைக்கிறார். மீனா எங்க மாதிரி ஆளுங்களுக்கு இது எவ்வளோ பெரிய விஷயம் தெரியுமா என்கிறார். பின்னர் முத்து மற்றும் மீனா தனியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். 

முத்து சீதாவுக்கு அந்த லொகேஷன் எப்படி கிடைச்சிதுனு கேளு மீனா. நாங்க போய் கேட்டப்போ முடியாதுனு சொல்லிட்டாங்க. அவங்க யாருனு தெரிஞ்சா நன்றி சொல்லலாம் என்கிறார். நான் இன்னும் அது பத்தி கேட்கலை என்கிறார் மீனா.

என்ன நான் வரதுக்கு முன்னாடி நடந்துச்சு என மீனா கேட்க நடந்த விஷயத்தை கூறுகிறார். பார்லர் அம்மாவை பெரிய பணக்கார வீட்டு பொண்ணுன்னு எங்க அம்மா நினைச்சுகிட்டு இருந்தாங்க. அது இல்லன்னு தெரிஞ்சதும் தூக்கி எறிஞ்சிட்டாங்க. இப்ப அதை சமாளிக்க பணத்தாசை காட்டிகிட்டு இருக்கு என கூறுகிறார்.

அடுத்த நாள் காலை சீதா இந்திராவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டிற்கு செல்கிறார். சத்யாவை காப்பாற்ற உதவி செய்ததற்காக நன்றி கூறுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.