ரோகிணியின் அடுத்த ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சுப்பா… ஸ்கெட்ச்சு மீனாவுக்கு தான் போலயே!

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்ப்கள்.
மனோஜுக்கு அய்யர் வந்து பிரசாதம் கொடுத்துவிட்டு செல்கிறார். கடையில் வேலை செய்பவர்கள் லேட்டாக வர நோட்டீஸ் கொடுத்துவிட்டு வந்தோம். நிறைய பேர் ஏசி வாங்குவதாக கூறி இருக்கிறார்கள் என்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் மேடம் தான் என ரோகிணிக்கு புகழ் பாடுகின்றனர்.
வீட்டில் ரோகிணி இருக்க அவருக்கு வித்யா கால் செய்கிறார். என்ன ஆச்சு உன் பிரச்சனை எனக் கேட்க என் மாமியார் மனோஜை என்னிடம் பேச கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஷோரூமிற்கும் என்னை போகக்கூடாது என்று சொல்லிட்டாங்க. வித்யா பார்லர் ஆச்சும் போக வேண்டியது தானே என கேட்கிறார்.
அங்கேயும் என்னை இனிமேல் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க என்கிறார் ரோகிணி. நீ எதற்கெடுத்தாலும் ஒரு பிளான் போடுவ. இதுக்கும் ஒரு பிளானை போடு எனக் கூற சீக்கிரம் அதற்க்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்கிறார் ரோகிணி. அந்த நேரத்தில் வித்யா வீட்டின் காலிங் பெல் அடிக்கிறது.
வித்யா ரோகிணி இடம் யாரோ வந்திருப்பதாக கூறி போனை வைத்துவிட்டு கதவைத் திறக்கிறார். அந்த நேரத்தில் முருகன் வந்திருக்க அவர் தனக்கு பிறந்தநாள் என்றும் கேக் வாங்கி வந்திருப்பதாகவும் கூட அவரை வீட்டிற்குள் அழைக்கிறார் வித்யா.

கேக்கை திறந்து பார்க்க அதில் ஐ லவ் யூ வித்யா என எழுதி இருக்க அவர் அதிர்ந்து பார்க்கிறார். என் காதலை உன்னிடம் சொல்லி விட்டேன் உன் முடிவு என்ன எனக் கேட்க கேக்கில் இருந்த லவ்வை எடுத்து ஊட்டி விட்டு இருவரும் சிரித்து கொள்கின்றனர்.
முத்து சவாரிக்காக காத்திருக்க அதில் இருவர் ஏறிக்கொள்கின்றனர். அவர்கள் திடீரென குடிக்க தொடங்க தன்னுடைய காரில் குடிக்க கூடாது என முத்து கூறிவிடுகிறார். அவர்களிடம் வாக்குவாதம் பண்ணி இருக்க வேண்டிய இடத்தில் இறக்கிவிட அது சிட்டியின் அலுவலகம் என தெரிகிறது.
அந்த நேரத்தில் சிட்டி சத்யாவை ஆள் வைத்து அழைத்து வந்திருக்கிறார். கணக்கு பார்க்க ஆள் இல்லை. நீயே பாரு பெரிய சம்பளம் தரேன் எனக் கூற அதெல்லாம் முடியாது என்கிறார் சத்யா. அந்த நேரத்தில் முத்துவர நீ எதுக்கு இங்க வந்திருக்க என சத்தியாவிடம் கேட்கிறார்.
அந்த நேரத்தில் முத்துவின் காரில் வந்தவர்கள் சிட்டியிடம் முத்து பற்றி ஓவராக பேச அவர்களை அடித்துவிடுகிறார். பின்னர் சத்தியா நடந்த விஷயங்களை கூறி தன்னை எக்ஸாம் எழுத விட மாட்டேன் எனக் கூறியதையும் கூறுகிறார். நீ என்ன பிரின்சிபாலா எனத் திட்டிவிட்டு சத்யாவை அழைத்து செல்கிறார்.
வீட்டில் ரோகிணி சமைத்துக் கொண்டிருக்க அப்போது வரும் மீனா நீங்க ஏன் இதை செய்து கொண்டு இருக்கீங்க எனக் கேட்க ஆண்ட்டி எனக்கு சமைச்சிக்க சொல்லிட்டாங்க என்கிறார். அப்போ வரும் ஸ்ருதி, ரோகிணியை சரமாரியாக கலாய்க்க ரோகிணி மீனாவை முறைக்கிறார்.