ரோகிணிக்கு மட்டும் அப்பப்ப நல்ல நேரம் வந்துருதுப்பா… விஜயா மீண்டும் மொக்கை வாங்க போறாங்கப்பா!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டை விட்டு கிளம்ப மீனாவை ட்ரெஸ் எடுத்து வைக்க சொல்கிறார். நீங்களும் கிளம்புங்க போகலாம் என்கிறார். இதில் ஷாக்கும் விஜயா அவரை எதுக்கு கூப்பிடுற என கத்த அப்பாவை விட்டுட்டு போ முடியாது என்கிறார். ஆயுள் தண்டனை 14 வருஷம் தான். இங்க 30 வருஷமா கஷ்டப்படுறீங்கப்பா.
வாப்பா போகலாம் என்கிறார். அண்ணாமலையும் கிளம்ப விஜயா என்னங்க எனக் கேட்க நீ என்னைக்குமே என் பிள்ளை தானே சொல்லுவ. அதான் நான் அவன் கூடவே போறேன் என்கிறார். அவனை நம்பி நான் கடல குதிச்சாலும் என்னை கரை சேர்த்துருவான். இப்போ நான் முத்து கூட தான் போறேன்.
இதையும் படிங்க: விஜய்க்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த குரு யார் தெரியுமா ? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்
அவன் இருந்தா நானும் இருக்கேன். இப்போ நான் போணுமா? இருக்கணுமா என்கிறார். இதனால் கடுப்பாகும் விஜயா என்னமோ பண்ணுங்க எனச் சொல்லி சென்று விடுகிறார். ரோகிணி அப்போ இவர் வெளியில் போகலையா எனக் கடுப்பாகிறார். இங்கு ரவி ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். நண்பரிடம் கல்யாணம் மட்டும் பண்ணாதே என அட்வைஸ் செய்கிறார்.
இதையடுத்து வீட்டில் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். ரோகிணிக்கு வித்யா கால் செய்கிறார். நல்ல வேளை எஸ்கேப் ஆகிட்டேன் என சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஸ்ருதியை வர வைக்கும் முடிவில் தான் இருக்காங்க. என்னை பத்தி பேசமாட்டாங்க என்கிறார். இதையடுத்து மீனா சாப்பிட அழைக்கிறார்.
இதையும் படிங்க: வடிவேலுவை கோவை சரளா புரட்டி எடுத்ததுக்கு காரணம் இதுதான்!.. ரகசியம் சொன்ன இயக்குனர்…
எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். விஜயா கோபமாக உட்கார்ந்து இருக்கிறார். டைனிங் டேபிளில் உட்கார்ந்து முத்துவை திட்டுகிறார். இதையடுத்து ரோகிணி அப்பா குறித்து பேச்சு வருகிறது. உடனே நியாபகம் வந்தவராக உங்க அப்பா எங்க? அவர் ஏன் இன்னும் வரலை எனக் கேட்கிறார். மனோஜும் அவர் கிளம்பிட்டதா தானே சொன்ன எனக் கூறுகிறார். ரோகிணி முழித்து கொண்டு இருக்கிறார்.
திடீரென அவருக்கு வாந்தி வர அவர் கர்ப்பமாக இருப்பதாக விஜயா நினைத்து ரொம்பவே சந்தோஷப்படுகிறார். ஆனால் ரோகிணி இல்லை எனச் சொல்ல வர அதற்குள் சீனியை போட்டு ஓவரா சந்தோஷப்பட்டு மனோஜ் நீ ஜெயிச்சிட்டப்பா எனப் பேசிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.