என்னடா ஹீரோ, ஹீரோயினை விட்டு நீங்களாம் ஜோடி ஜோடியா இருக்கீங்க.. சிறகடிக்க ஆசை அலப்பறை..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, தன்னை மனோஜும், ரவியும் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்ததுக்கு காரணம் என சொல்கின்றனர். நானா செஞ்சேன் என மீனாவிடம் வருத்தப்படுகிறார். ஒரு கட்டத்தில் மீனாவும் அது உண்மை தான் என கூற முத்துவுக்கு அதிர்ச்சி ஆகிவிடுகிறது.
இதையடுத்து, நீங்க செஞ்சீங்கனு சொல்லலை. ஆனா நீங்க குடிக்காம இருந்து இருந்தா இதெல்லாம் நடந்து இருக்காது என்கிறார். அதையடுத்து மீனா கீழே படுக்க சென்று விடுகிறார். அதையடுத்து விஜயா அண்ணாமலைக்கு பால் எடுத்துவந்து கொடுக்கிறார்.
இதையும் படிங்க: இனிமேதான் எங்க ஆட்டத்த பாக்கப் போறீங்க! அர்ச்சனா எடுத்த முடிவு – தோள்கொடுக்கும் விசித்ரா
அவங்களுக்கு வச்சிருந்த பாலை முத்து குடிச்சிட்டான். கடைசியில் தேனை கலந்து கொடுத்தேன். மிச்சம் இருந்ததை உங்களுக்கு கொண்டு வந்தேன் என்கிறார். இனிமே தான் நீ சரியா இருக்கணும். மூன்று மருமகளை ஒன்னா பாரு என்கிறார்.
ஆனால் விஜயா நான் விஜயாவா தான் இருப்பேன். யாரை எங்கு வைக்கணும் என எனக்கு தெரியும் என்கிறார். ஆனால் தூங்கும் போது அண்ணாமலை சொன்ன விஷயங்கள் அவரை பயம் கொள்ள வைக்கிறது. அடுத்து ரோகினி மனோஜுக்கு பால் கொண்டு வந்து கொடுக்கிறார்.
ஸ்ருதியின் நட்பு நமக்கு தெரியும். நிறைய இடத்தில யூஸ் ஆகும். நீயும் ரவியிடம் நல்லா பழகு என்கிறார். விஜயா ஸ்ருதி பாசம் அதிகம் இருப்பதாக சொல்லி பொறாமைப்படுகிறார் ரோகினி. முத்து ரூமில் இருக்கும் ஸ்ருதி, ரவி பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: என்னிடம் கேட்ட மோசமான கேள்வி! 25 வருட கெரியரில் முதன் முறையாக அந்த அனுபவத்தை கூறிய ஜோதிகா
முத்து மாடியில் படுத்து தூக்கம் வராமல் எழுந்து நடந்து கொண்டு இருக்கிறார். கீழே மீனா நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.