ஏங்க அவங்க சைட் ஜோடி தானே..! பில்டப்பு ஓவரா இருக்கு..! காண்டான சிறகடிக்க ஆசை ரசிகர்கள்..!

by Akhilan |
ஏங்க அவங்க சைட் ஜோடி தானே..! பில்டப்பு ஓவரா இருக்கு..! காண்டான சிறகடிக்க ஆசை ரசிகர்கள்..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ரவி ஸ்ருதியிடம் நீ இங்க ஹாப்பியா இருக்கீயா எனக் கேட்கிறார். அதற்கு ஸ்ருதி நான் உன் கூட இருக்கேன். அது போதும். இதை நினைச்சு எனக்கு கவலை இல்லை எனக் கூறிவிடுகிறார். இதையடுத்து ரூமில் மீனாவும், முத்துவும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அண்ணாமலைக்காக முத்து வருத்தப்படுகிறார். மீனா எல்லாம் உன்னால தான். இரண்டு நாள் தானே சொன்னாங்க எனக் கேட்க நீ இன்னும் எங்க அம்மாவை நம்பு. அவங்க அப்படியே ரெண்டு வருஷமா மாத்திடுவாங்க என்கிறார். எல்லாம் அந்த ரவியால தான் என்கிறார். மீனா நீங்க கோபத்தையும், குடியையும் விட்டா மகான் ஆகிடுவீங்க என்கிறார்.

இதையும் படிங்க: கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!

நான் மனுஷனாவே இருந்துகிறேன். இப்போ தூங்கலாம். காலையில் சவாரிக்கு போகணும் என்கிறார். பின்னர் இருவரும் படுத்துவிடுகின்றனர். இதையடுத்து தூங்கிக்கொண்டு இருக்கும் ரவியை எழுப்பி மாடிக்கு அழைத்து செல்கிறார் ஸ்ருதி. இந்த குளிர்லயா தூங்கணும். அதான் நமக்கு ரூம் இருக்குல எனக் கேட்கிறார்.

இங்கையும் ஒரு ரூம் இருக்கு எனக் கூறி டெண்ட்டை காட்டுகிறார். உங்க அண்ணன் ரூமை லாக் செய்ததும் தூங்குவதற்காக இதை வாங்கி வைத்தேன் என்கிறார். இதனால் ரவி சந்தோஷமாகி நீ கோபப்படுவே நினைச்சேன். ஆனால் நீ இப்படி யோசிச்சு இருக்க என ஆச்சரியப்படுகிறார்.

இதையும் படிங்க: கோபத்தில் சினிமாவுக்கு வந்த ஆதிக் ரவிச்சந்திரன்!.. இப்படி ஒரு செண்டிமெண்ட் ஃபிளாஷ்பேக்கா!..

காலையில் விஜயா மீனாவை காபி போட சொல்கிறார். மனோஜ் மாடிக்கு எக்ஸர்சைஸ் செய்ய செல்ல அங்கு டெண்ட் இருப்பதை பார்த்து பயந்து வந்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். உடனே மீனா, ரோகினி, அண்ணாமலை, விஜயா மனோஜுடன் மாடிக்கு செல்கின்றனர். உடனே இருப்பதை கையில் எடுத்துக்கொள்ள சொல்கிறார். டெண்ட் அருகில் சென்று யாருடா அது எனக் கேட்டு அடிக்க பாய்கின்றனர்.

இதனால் ரவி, ஸ்ருதி நாங்க தான் என வெளியில் தலைக்காட்டி விடுகின்றனர். ஹாலில் அண்ணாமலை ஏன் இப்படி செஞ்சீங்க எனக் கேட்கிறார். ரூம் இருக்காதுனு இதை வாங்கினேன். அதுல படுக்கணும் முடிவு செஞ்சிட்டேன். இல்லனா எனக்கு தூக்கமே வராது என்கிறார். சரி இனி செய்யாதீங்க எனக் கூறிவிட ஸ்ருதி மாடிக்கு சென்று டெண்ட்டை பிரித்து கொண்டு இருக்கிறார்.

அப்போ அவர் அம்மா கால் செய்து பேச டெண்ட்டில் படுத்த விஷயத்தை சொல்கிறார். ரூம் கூட இல்லையா என அரைகுறையாக பேசிவிட்டு போனை வைத்து விடுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…

Next Story