ஒருவழியாக ஸ்ருதி-ரவி வீட்டுக்குள் வந்தாச்சு… ரொம்ப மொக்க போடுறீங்கப்பா..! கடுப்பில் ரசிகர்கள்!

by Akhilan |
ஒருவழியாக ஸ்ருதி-ரவி வீட்டுக்குள் வந்தாச்சு… ரொம்ப மொக்க போடுறீங்கப்பா..! கடுப்பில் ரசிகர்கள்!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவும், மீனாவும் பாட்டுப்பாடி சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்த நாள் காலையில் ரவியும், ஸ்ருதியும் வருவதால் விஜயா பரபரப்பாகி விடுகிறார். கடவுளிடம் சென்று எனக்கு அடுத்த பணக்கார மருமகள கொடுத்து இருக்க என சந்தோஷமாக சொல்லி கொள்கிறார்.

இதை தொடர்ந்து சமையலறைக்கு சென்று மீனாவிடம் கேசரி, வடை என செய்ய சொல்கிறார். யாரும் வராங்களா என மீனா கேட்க அதெல்லாம் உனக்கு எதுக்கு. செய்ய சொன்னதை மட்டும் செய் என்கிறார். தொடர்ந்து வீட்டில் முத்து இருப்பதை பார்த்து இவனை எப்படி வெளியேத்துறது என யோசித்து கொண்டு இருக்கிறார்.

இதையும் வாசிங்க:சிவாஜியுடன் காதலா?!.. சந்தேகப்பட்ட தாய்… தேவிகா என்ன செஞ்சாங்க தெரியுமா?…

அவன் சவாரிக்கு போகலையா என மீனாவிடம் கேட்க பத்து மணிக்கு தான் என்கிறார். இதனால் விஜயாவே முத்துவுக்கு பரிமாறி சாப்பிட சொல்ல முத்து அதிர்கிறார். முத்து மதியம் சாப்பிட வருவேன் எனக்கூற எதுக்கு அழைஞ்சிட்டு சாப்பாடு கட்டிக் கொடுத்துடு என்கிறார்.

இதை தொடர்ந்து சாப்பாட்டை வாங்கிக்கொண்டு முத்து வேண்டும் என்றே எல்லாரிடமும் போய் வருவதாக கூற விஜயா வெறுப்பாகிறார். இதையடுத்து முத்து கிளம்பியதுடன் மனோஜை அழைத்து ஹாலை சரி செய்ய சொல்ல அண்ணாமலை யார் வரா என்கிறார்.

இதையும் வாசிங்க:ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..

ஸ்ருதியும், ரவியும் வருவதாக கூற அவங்க வீட்லேந்து வந்து விடணும் தானே சொன்னேன் என்கிறார். ஆமா அவங்களும் தான் வராங்க என்கிறார். இதை தொடர்ந்து முத்து வீட்டுக்குள் வர விஜயா என்னவென விசாரிக்க வயிறு கலக்குது என்கிறார்.

போற வழியில பாத்துக்கோ என்க, இதெல்லாம் போற வழியிலையா போ முடியும் என பாத்ரூம் போய் விடுகிறார். சரியாக ஸ்ருதி, ரவியை கூட்டிக்கொண்டு வாசுதேவன் மனைவி வந்து விடுகிறார். விஜயா அவர்களை பார்த்து சிரித்துக்கொண்டு நிற்க, அண்ணாமலைக்கு பழைய நியாபகங்கள் வந்து விடுகிறது.

பின்னர், மீனா மற்றும் ரோகினியை ஆராத்தி எடுக்க சொல்கிறார். இந்த கேப்பில் சென்று பாத்ரூம் கதவை மூடிவிட்டு வருகிறார். வீட்டுக்குள் வரும் ரவி எல்லாரையும் நலம் விசாரிக்கிறார். விஜயா, ஸ்ருதியை விளக்கு ஏத்த சொல்வதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் வாசிங்க: கமல் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்த நடிகர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை!.. அட சோகமே!..

Next Story