பாட்டி எண்ட்ரி.. விஜயாவுக்கு இனி லாக் இருக்குமா? கொஞ்சமாது கதையை மாத்துங்கய்யா..!
Siragadikka Aasai: இன்றைய எபிசோடில் முத்து ரோகினிடம் உங்க அப்பா மலேசியாவில் சத்தமே இல்லாம இருக்காரு என்கிறார். இதற்கு விஜயா நீ ஏன் அதெல்லாம் பேசுற எனக் கேட்க உடனே அண்ணாமலை ஆமாம் நானுமே அதை பத்தி கேட்கணும்னு நினைச்சேன். உங்க அப்பா போனும் பண்ணல. இங்க வரவும் இல்ல. என்ன ஆச்சு எனக் கேட்க ரோகினிக்கு அதிர்ச்சி ஆகிறது.
இருந்தும் அவர் பாரீன் ட்ரிப்பில் இருப்பதாக கூறி அப்போதைக்கு சமாளிக்கிறார். உடனே விஜயா வரத்தானே போறாரு எனக் கூறுகிறார். ஆனால் இத்தனை நடந்துக்கிட்டு இருக்க மனோஜுக்கு நல்ல வாசனை வருதும்மா என்கிறார். உடனே முத்து ஆமா, நான் தான் தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வந்தேன் என்கிறார். நேத்து எல்லாத்துக்கு பிடிச்சத சமைச்சா மீனா. ஆனா அவளுக்கு என்ன பிடிக்கும்னு யாரும் கேட்கலை எனச் சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார்.
இதையும் படிங்க: அண்ணே என்னை மன்னிச்சிடுங்கண்ணே!.. கதறி அழுது வீடியோ போட்ட விஷால்….
உடனே விஜயா இது என்ன புது பழக்கம் எனக் கூற அவன் பொண்டாட்டிக்கு வாங்கிட்டு வரான். நீ சும்மா இரு என மனைவியை அடக்கி விடுகிறார். பிறகு ரூமுக்கு போய் முத்து தட்டில் சிக்கனை வைத்து மீனாவை சாப்பிட வைக்கிறார். எதுக்கு இப்படிலாம் வாங்கிட்டு வரீங்க என்கிறார் மீனா. நீ ஃபீல் பண்ணக்கூடாதுல எனக் கூற நான் எப்போ பண்ணேன். நேத்து திரும்பி படுத்து அழுதியே, நாள் முழுக்க வேலை செய்ற இதெல்லாம் சாப்பிடணும் என்று முத்து சாப்பிட வைக்கிறார்.
அடுத்த நாள் காலையில் மீனா வாசல் தெளித்து கோலம் போட்டு வருகிறார். முத்து நீ மட்டும் தான் இதெல்லாம் செய்யணுமா என்கிறார். பின்னர் இருவரும் எப்போதும் போல பேசிக்கொண்டு இருக்க, குடுகுடுப்பை போட்டு வருகிறார் ஒருவர். உங்க வாழ்க்கை இனிமே நல்லா இருக்க போகுது என்று முத்து மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மீனாவுக்கு வாயால தான் பிரச்னை. அதனை அடக்க வேண்டும் என்கிறார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் விஜயகாந்த் செய்த அந்த விஷயம்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்.. இப்படி ஒரு மனுஷனா!..
பிறகு ஊரிலிருந்து பாட்டி மீனாவுக்கு போன் செய்கிறார். மற்ற நலம் விசாரிப்பு முடிந்ததும். ரவிக்கு பொண்ணு பார்த்து இருப்பதாக கூற மீனா இப்போ வேண்டாமே என்கிறார். நீ எதையும் தடுக்க மாட்டியே எனக் கூற அவருக்கு கல்யாணம் ஆச்சு பாட்டி என்கிறார். அப்போ என்கிட்ட சொல்லாம கல்யாணம் செஞ்சி வச்சிருக்கானா என்கிறார்.
இல்ல பாட்டி ரவியும், அந்த பொண்ணும் மனம் ஒத்தி கல்யாணம் செஞ்சிக்கிட்டாங்க. அப்புறம் நிறைய பிரச்னை ஆச்சு. மாமாக்கு உடம்பு சரியில்லை என மொத்த உண்மையையும் போட்டு உடைக்கிறார். உடனே பாட்டி பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். வந்தவர் எப்போதும் போல விஜயாவை வசைப்பாடுவதுடன் இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..