ரோகிணியின் திடீர் திட்டம்… மூக்கை உடைத்த ஸ்ருதி… மாட்டிக்கொண்ட மனோஜ்! திருந்தவே மாட்டிங்கள!

by Akhilan |   ( Updated:2025-03-31 22:22:56  )
ரோகிணியின் திடீர் திட்டம்… மூக்கை உடைத்த ஸ்ருதி… மாட்டிக்கொண்ட மனோஜ்! திருந்தவே மாட்டிங்கள!
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள் குறித்த அப்டேட்டுகள்.

ஸ்ருதியை கூட்டணி சேர்க்க ரோகிணி திட்டமிட்டு கால் செய்கிறார். ஆனால் ஸ்ருதி நான் இதில் பார்வையாளர்தான். எனக்கு எந்த எண்ணமும் இல்லை எனக் கூறி கட் செய்கிறார். ரவியிடம் ஸ்ருதி அவங்க ஆள் சேர்க்க கால் செய்ய பார்க்கிறாங்க. நம்ம யாருக்கும் சப்போர்ட் செய்யாம இருக்கலாம் என்கிறார்.

ரோகிணி எப்படியாவது இந்த பிரச்னையை சமாளிக்கணும் என்கிறார். பாட்டியை அழைத்துக்கொண்டு அண்ணாமலை வருகிறார். பாட்டியை பாசமும் முத்து மற்றும் மீனா உபசரிக்கின்றனர். மனோஜை அழைக்கிறார். குடித்ததுக்கு திட்டிக்கொண்டு இருக்கிறார்.

நீங்களும் சும்மா இல்லாம என் பிள்ளையையும் கஷ்டப்படுத்துறீங்களே எனக் கேட்க நான் எதுவும் செய்யலை என்கிறார் மனோஜ். ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வர அவருடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். நீங்க பொறுப்பா இருக்கீங்க என பாராட்டுகிறார்.

Siragadikka Aasai

பாட்டி, மனோஜிடம் பாத்துக்கோ எனக் கூற ரவியும் திட்டுகிறார். ரோகிணிக்கு கால் செய்து வரச்சொல்ல மனோஜ் கால் செய்கிறார். ரோகிணி மனோஜ் கண்டிப்பாக கால் செய்வான் எனக் கூறுகிறார். அந்த நேரத்தில் மனோஜ் கால் செய்கிறார். இதை பார்க்கும் ரோகிணி அதை எடுக்காமல் இருக்கிறார்.

ஆனால் ரோகிணி உடனே எடுக்க கூடாது எனக் கூற வித்யா நீ எடு எனக் கூறுகிறார். மீண்டும் கால் செய்ய அதையும் எடுக்காமல் போக வித்யா திட்டிவிட்டு செல்கிறார். மனோஜ் கால் எடுக்க மாட்டிங்கிறா எனக் கூற பாட்டி திட்ட ஸ்ருதி நீங்க அப்டேட்டா இருக்கீங்க என சிரித்துக்கொண்டு இருக்கிறார்.

மனோஜை மறுபடியும் கால் செய்ய சொல்ல ரோகிணி காலை அட்டர்ன் செய்யாமல் போகிறார். ஸ்ருதி வீட்டுக்கு போக சொல்ல அப்போ இறங்கி போவது போல இருக்கும் என்கிறார். முத்து இவனுக்கு இகோ எனக் கூற நேரில் போக வேண்டாம். கால் செய்து பார்க்கிறேன் என்கிறார்.

திரும்ப கால் செய்ய மனோஜ் போனை ரோகிணி எடுத்து விடுகிறார். அழுக போக மனோஜ் பாட்டி வந்து இருக்காங்க. வீட்டுக்கு வா எனக் கூற எனக்கு இப்போ ஒரு கண்டிஷன் இல்லை ரெக்குவஸ்ட்டாவும் எடுத்துக்கோ எனக் கேட்க சொல்லு என்கிறார் மனோஜ்.

ரோகிணி, என்னை ஆண்ட்டி அடிக்க கூடாது. திட்டக்கூடாது எனக் கூற மனோஜ் பாட்டியிடம் கேட்டு வா பார்த்துக்கலாம் எனக் கூறுகிறார். மனோஜை கேள்வி கேட்காம போனா என்னை ஆண்ட்டி சும்மா விட மாட்டாங்க என்கிறார். அவனுக்கு மட்டும்தான் என்னை கேள்வி கேட்க உரிமை எனக் கூறுகிறார்.

ரோகிணி, மீனா வேண்டுமென்றால் அமைதியா போகலாம். என்னால் போக முடியாது எனக் கூறுகிறார். பார்வதியுடன் விஜயா பேசிக்கொண்டு இருக்க மீனா முன்னால் தன் மானமே போய்விட்டதாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

Next Story