விஜயாவுக்கு ஓவர் ஆட்டம் தாங்காது… ரோகிணியை காலி செய்ய திட்டம்… மனோஜ் திருந்துங்க!

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.
சீதா வீட்டில் அம்மாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டு கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் மீனா வர இன்னைக்கும் சாப்பிடாமல் போறாங்களா என்கிறார். சீதா ஆமாக்கா எனக் கூற இருவரும் சேர்ந்து இந்திராவிற்கு அட்வைஸ் செய்கின்றனர்.
அவர் நான்தான் உங்க அம்மா நீங்க இல்ல என அவர்களை செல்லமாக கடிந்துவிட்டு வேலைக்கு செல்கிறார். பின்னர், சீதாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் மீனா. ஒரு கட்டத்தில் சீதா தான் காதலிக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார்.
இதை ஏன் எங்களிடம் நீ சொல்லவே இல்லை என மீனா கேட்க நான் இன்னும் அவர் கிட்டயே உறுதியாக சொல்லல. உங்க எல்லாரிடமும் பேசிவிட்டு சொல்லலாம் என இருந்ததாக கூறுகிறார். பின்னர் மீனா சிரித்துக் கொண்டு நீ கல்யாணம் செய்து கொள்கிறேன் சொன்னதே போதும் என்கிறார்.
இப்ப யாரிடமும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என சீதா கூற ஆமா உங்க மாமாக்கு தெரிஞ்சா உடனே கல்யாணம் பேசலாம் என கூறுவார். மறுபக்கம் மீனா வீட்டில் இருக்க அப்போ ஒரு முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணி வீட்டிற்குள் வர விஜயா அவரை அழைத்து இன்னைக்கு போன ஆர்டரில் எவ்வளவு கொடுத்ததாக கேட்கிறார். 25 ஆயிரம் தந்தார்கள் எனக் கூற அதை எடு எனக் கூறுகிறார். ஆன்லைனில் தான் காசு போட்டிருப்பதாக கூற ஏடிஎம் வாங்கி விடுகிறார்.
இதோட பின் நம்பர் என்னவென்று கேட்க உங்க மகனின் பிறந்த வருடம் தான் இருக்கிறார். எனக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள் எனக் கூற, உங்க மூத்த மகனின் பிறந்த வருடம் என்ன என ரோகிணி கேட்கிறார். உடனே விஜயா 1994 எனக் கூற அதுதான் பின் நம்பர் என்கிறார் ரோகிணி.
ரூமிற்குள் செல்லும் ரோகிணி இது இப்படியே போனா நல்லதில்லை என நினைத்து கோபமாக இருக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருக்கும் மீனா இது என்ன கொடுமையா இருக்கு என கேட்க முத்து இதுதான் மாமியார் கொடுமை என்கிறார்.

பின்னர் மனோஜ் வீட்டிற்கு வர ரோகிணி கடைக்கு வந்தாலா எனக் கேட்கிறார் விஜயா. ஒழுங்கு மரியாதையா அவகிட்ட இருந்து தள்ளியே இரு என மிரட்டி அனுப்புகிறார் விஜயா. மனோஜ் ரூமிற்குள் வர வீட்டில் நடந்த விஷயங்களை கூற இது தப்பு தானே மனோஜ் என்கிறார்.
இங்கு நிறைய பேரு நிறைய தப்பு பண்ணிக்கிட்டு இருக்காங்க அதைவிட இது பெரிய தப்பு இல்லை என்கிறார். மாடியில் முத்து மற்றும் மீனா ரவி மற்றும் ஸ்ருதி இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். மனோஜை அழைத்து அவரை ரோகிணிக்காக பேச சொல்கின்றனர்.
ஆனால் அவர் எல்லாத்தையும் கேட்டுவிட்டு புரிஞ்சிப்போச்சு எனக் கூற முத்து என்னவெனக் கேட்க எனக்கும் அம்மாக்கும் சண்டை வர பிளான் பண்ணி நீங்க சந்தோஷமா இருக்கலாம் பாக்குறீங்களா என்கிறார்.