மீண்டும் பொய் தானா ரோகிணி?… அப்போ அடுத்த தர்ம அடி காத்திருக்கு! அப்பப்பா!

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மை உடைந்து இருக்கும் நிலையில் எதற்காக இந்த பொய் எனக் கேட்கிறார் அண்ணாமலை. அதுகுறித்து ரோகிணி இந்த எபிசோட்டில் பேசி இருக்கிறார்.
மனோஜ் தன்னிடம் எல்லா விஷயத்தையும் ரோகிணி சொல்லி விட்டதாக சொல்லுகிறார். இதில் கடுப்பாகும் விஜயா, மனோஜ் அடி வெளுக்கிறார். பின்னர் ரோகிணியிடம் எதற்காக இப்படி பொய் சொன்ன அப்போ உங்க அப்பா எங்க தான் இருந்தாரு என்கின்றனர்.
ரோகிணி தான் உண்மையிலேயே மலேசியாவில் இருந்ததாகவும் அப்பா என்னையும், அம்மாவையும் விட்டு வேறு ஒரு பெண்ணுடன் போய்விட்டதாகவும் கூறுகிறார். விஜயா, உன்னை மாதிரி பொண்ணை பெத்தா போக வேண்டிதான் எனக் கடுப்படிக்கிறார்.
அப்போ உங்க அம்மா உயிரோட இருக்காங்களா எனக் கேட்க அப்பா செஞ்சததை நினைச்சு அவங்க செத்து போயிட்டாங்க என்கிறார். சென்னை வந்தேன். என்னோட ஒரே தோழி வித்யாவை மட்டும்தான் எனக்கு தெரியும் எனவும் கூறுகிறார்.
இங்க வந்து பியூட்டிஷியன் படிச்சேன். அப்போதான் மனோஜை பார்த்து விரும்பினேன். ஆனால் ஆண்ட்டி பணக்கார பெண்ணை பார்த்து கட்டி வைக்கணும் நினைச்சாங்க. என் நிலைமை தெரிந்தால் ஒப்புக்கொள்ள மாட்டாங்க என்பதால் இப்படி சொன்னேன் என்கிறார்.

தொடர்ந்து என் சொத்து குறித்தே கேட்டுக் கொண்டு இருந்ததால் கறிக்கடைக்காரர் மணியை அழைத்து வந்து நடிக்க வைத்தேன் என்றும் கூறுகிறார். உடனே ரவி, அப்போ அப்பாவிடம் காசு வருதுனு சொல்லுவீங்களே. அப்பா இல்லாதப்ப காசு எப்படி எனக் கேட்கிறார்.
என் பார்லரை வித்துவிட்டேன் எனக் கூற விஜயா அதிர்ச்சி அடைகிறார். ஒரு வருஷம் ஆச்சு அங்க நான் வேலை செய்வதாக சொல்கிறார். அண்ணாமலை இது தனக்கு தெரியும் எனக் கூற முத்து முன்னாடியே வந்து சொன்னான். நான் தான் சொல்ல வேண்டாம் என்றதாக சொல்லுகிறார்.
விஜயா எல்லா போச்சு என புலம்ப நான் வந்துதான் மனோஜ் வாழ்க்கையை மாத்தினேன் என்கிறார். படிக்க வச்சது நான் என விஜயா கூற இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி அவர் வேலைக்கே போகலை. நான் தான் பிசினஸ் ஆரம்பிச்சு கொடுத்தேன் என்க முத்து எங்க அப்பா காசில் என்கிறார்.
இருக்கலாம். ஆனாலும் நான் வந்ததால் தான் அப்படி செஞ்சதாக கூறுகிறார். அண்ணாமலை இன்னும் எதுவும் நாங்க தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கா எனக் கேட்க இல்லை என மறுத்துவிடுகிறார். பாட்டி சூடம் காட்டி சத்தியம் பண்ணச் சொல்ல நான் சொன்னதெல்லாம் உண்மை என அடித்து சத்யம் பண்ணுகிறார்.
அண்ணாமலை நீ செஞ்சத சத்தியவாக்கா எடுத்துக்கிறேன் எனக் கூற ரோகிணி அதிர்ந்து பார்க்கிறார். உயிரில்லாத பணக்கார பொய் உடைந்ததுக்கே இந்த அக்கப்போரு. இதில் வளர்ந்த பிள்ளை வரப்ப ரோகிணி நிலைமை என்ன ஆகுமோ?