மீண்டும் ரோகிணியை வீட்டுக்குள் விட்ட பாட்டி… மனோஜின் கோப முகம்! என்ன நடக்குமோ?

by Akhilan |   ( Updated:2025-04-03 21:54:29  )
மீண்டும் ரோகிணியை வீட்டுக்குள் விட்ட பாட்டி… மனோஜின் கோப முகம்! என்ன நடக்குமோ?
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

அண்ணாமலை மற்றும் பாட்டி இருவரும் ரோகிணியிடம் இனிமேல் பொய் சொல்லாமல் இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா நடந்துக்கோ என்கின்றனர். பின்னர் தட்டில் சூடம் ஏற்றி காட்ட இதில் இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்ய கேட்கின்றனர்.

சிறிது நேரம் யோசிக்கும் ரோகிணி இனிமேல் பொய் சொல்லவில்லை என அடித்து சொல்லுகிறார். அவரை ரூமிற்குள் அனுப்ப அவர் முத்து மற்றும் மீனாவை முறைத்துக் கொண்டே செல்கிறார். பின்னர் பாட்டி விஜயா விற்கு அறிவுரை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

மனோஜ் ரூமிற்குள் வர அவரிடம் நன்றி சொல்கிறார் ரோகிணி. எதற்கு என அவர் கேட்க ஆண்ட்டிகிட்ட பொய் சொன்னதற்கு என கூறுகிறார். நான் உனக்காக எதையும் செய்யவில்லை. அம்மா அடிக்க கூடாதுனு நீ சொன்னதற்காகவே இதை செய்தேன். இல்லனா இன்னும் அடி வாங்கி இருப்ப என்கிறார்.

ஆனா அவங்க யாருக்கும் தெரியாது. என்னையே நீ ஏமாளி ஆகிட்ட என்பது. மனோஜ் நான் உன்னை ரொம்ப லவ் பண்ணேன். உன் கூட வாழறதுக்காக தான் இந்த பொய் சொன்னேன் என்கிறார். இருந்தும் மனோஜ் அப்போ என்கிட்டயாவது நீ உண்மை சொல்லி இருக்கணும் ரோகிணி என்கிறார்.

siragadikka aasai

பலமுறை உன்னிடம் சொல்ல முயன்றேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை எனக் கூற இனிமே எதுவும் பொய் சொல்லாத என மனோஜ் கூற உன் மேல் சத்தியம் எனக் கூற வர இதை கூட என்னால் நம்ப முடியலை என வெளியில் செல்கிறார்.

மாடியில் முத்து மற்றும் ரவியுடன் ஸ்ருதி மற்றும் மீனா அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னுமே அந்த பார்லர் அம்மா எதையோ மறைப்பதாக தோன்றுவதாக முத்து கூறுகிறார். மீனா, அவங்க தான் உங்க அண்ணன் கூட வாழனும்னு இந்த பொய்யை சொன்னாங்கன்னு சொல்றாங்களே என்கிறார்.

ஸ்ருதி, அதுக்குனு இவ்வளவு கதையா என்கிறார். மனோஜ் சொன்னதும் சுத்த பொய் என முத்து கூற அவன் விஷயம் தெரிந்த உடனே அதிர்ச்சியில் குடிச்சான். தெரிஞ்சவன் ஏன் அப்படி நடந்துக்கணும் என்கிறார். என்னமோ இனிமே ஆண்ட்டி ரோகிணியை எப்படி நடத்துவாங்கனு ஆர்வமா இருக்கேன் என ஸ்ருதி சொல்கிறார்.

இதை படியில் நின்று கேட்கும் மனோஜ் கீழே ரூமிற்கு வருகிறார். ரோகிணி பேச வர அவருடன் பேசாமல் அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.

Next Story