ரோகிணி vs விஜயா… இப்போ யாரு வில்லி? யாரு பாவமுன்னு தெரியலையே சாமி… ஆனா நமக்கு ஜாலி தான்!

siragadikka aasai
Siragadikka aasai: சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்டில் நடக்க இருக்கும் சுவாரஸ்ய விஷயம் குறித்த தொகுப்புகள்.
எல்லாரும் சாப்பிட அமர்கின்றனர். விஜயாவை பார்க்கும் முத்து ஆடிய ஆட்டம் என்ன பாடிய பாட்டு என்ன எனப் பாடுகிறார். அப்போ வரும் அண்ணாமலை எல்லாரையும் ஒன்னா பார்க்காம இப்போ என்ன ஆச்சு பாத்தியா என்கிறார். ஸ்ருதி உங்களோட பேவரிட் மருமக இடம் யாருக்கு என்கிறார்.
அப்போ பாட்டி வர மூணு பேரையும் ஒன்னா பார்க்க வேண்டியது தானே எனக் கேட்க ரவி ஆமா அண்ணியை என்ன பேசி அவமானம் படுத்துனீங்க எனக் கேட்கிறார். ஆமா நான் கைப்பட்டா குத்தம் கால்பட்டா குத்தம்னு சொன்னீங்க. நானாவது உழைச்சு சம்பாரிச்சேன்.
மத்தவங்க மாதிரி ஏமாத்தி பொய் சொல்லலை என மீனா கூறி விஜயா போதும் எனக் கத்துகிறார். அப்போதுதான் மற்றவர்கள் பேசியது இவரின் கற்பனை எனத் தெரிகிறது. பகல் கனவா என கலாய்க்கின்றனர். பாட்டி குழந்தை பிறந்தா எல்லா பிரச்னையும் முடிஞ்சிரும்.
மொத குழந்தை பெத்துக்கோங்க. ரோகிணி இனிமேல் மனோஜிடம் பொய் சொல்லாமல் நடந்துக்கோ என்கிறார். ஸ்ருதியை அழைத்து சண்டை போட்டாலும் சந்தோஷமா இருங்க என்கிறார். மீனாக்கு எனக்கு சொல்ல எதுவுமே இல்ல. அவளே பார்த்துக்குவா. சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும் என்றும் கூறி செல்கிறார்.

அடுத்த நாள் மனோஜ் வேலைக்கு கிளம்ப அவரை அழைக்கும் விஜயா இனி நீ ரோகிணியுடன் பேசக்கூடாது. அவ ஷோரூம் வரக்கூடாது என கண்டிஷன் போடுகிறார். அதை அழைத்து சொல்லிவிட்டு செல் எனக் கூற ரோகிணியை அழைக்கும் மனோஜ் இனி ஷோரூம் வராதே என்கிறார்.
ஏன் எனக் கேட்க தெரியாத பாப்பா மாதிரி பேசாத என்கிறார். எனக்கு தான் எல்லா கணக்கு வழக்கும் தெரியும். மனோஜுக்கு தெரியாது என ரோகிணி கூற இப்படி சொல்லி சொல்லிதான் அவன மொத்தமா ஏமாத்திட்ட இனி போகாத எனச் சொல்லிவிடுகிறார்.
ரூமில் செல்லும் ரோகிணிக்கு அவங்க அம்மா கால் செய்ய என்ன அம்மா எனக் கோபமாக பேசுகிறார். அவர் எனக்கு இன்று பிறந்தநாள். நீ நியாபகம் வச்சிக்கிற அளவுக்கு நான் நல்லவளா நடக்கலை என்கிறார். இதனால் ரோகிணி மனம் வருந்து சாரி கேட்கிறார்.
பின்னர் போனை வைத்துவிட்டு உன் பையனுக்கு நான் செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு என்னையே அழ வச்சு எங்க அம்மா பிறந்தநாளை மறக்க வச்சிட்டியே. உன்னை ஒருநாள் என் நிலைமையில நிக்க வைப்பேன் என சபதம் போடுகிறார்.