நரி வேஷம் கலஞ்சு போச்சு… ரோகிணியின் முதல் ரகசியம் உடைந்தது… முத்து-மீனாவின் அதிரடி!

by Akhilan |
நரி வேஷம் கலஞ்சு போச்சு… ரோகிணியின் முதல் ரகசியம் உடைந்தது… முத்து-மீனாவின் அதிரடி!
X

siragadikka aasai

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் பரபரப்பான எபிசோடு குறித்த தொகுப்புகள்.

பரசு கறிக்கடைக்காரர் மணியிடம் வந்து எல்லா வேலையும் முடிந்ததா என கேட்கிறார். அவரும் எல்லாம் முடிஞ்சுருச்சு எனக் கூறுகிறார். பரசு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிது. இருந்தும் எனக்கு ஒரு கவலைதான். என் நண்பர் வீட்டு குடும்பத்துக்கிட்ட உங்களை அறிமுகம் செய்ய முடியலை என்கிறார்.

மணி இன்னொரு நாள் பார்த்துக்கலாம் எனக் கூற, என் நண்பனுடைய மகனும் மருமகளும் இங்குதான் இருக்கிறார்கள். இப்ப கூட மண்டபத்தில் ஒரு ஜோடி நகைகளை திருடி கொண்டு ஓட பார்த்தார்கள். அவர்களை இருவரும் தான் சேர்ந்து பிடித்து வந்ததாக கூறுகிறார்.

இதைக் கேட்ட மணி அவர்களுக்கு நான் மாலை மரியாதை செய்ய வேண்டும் எனக் கூறி மேளத்தாளத்துடன் மண்டபத்திற்குள் செல்கிறார். மீனா மற்றும் முத்துவிடம் சென்று நிற்க எழுந்திருக்கும் முத்து, மணியை பார்த்து ஷாக்காகி நிற்கிறார்.

பரசு தொடர்ந்து மணி குறித்து பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். முத்து எதுவும் பேசாமல் இருக்க கடைசியில் எவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்காரு இவருக்கு தான் மாலை மரியாதை செய்ய வேண்டும் என இரண்டு மாலையையும் மணியின் கழுத்திலே போடுகிறார்.

இங்கே பேச வேண்டாம் பேச வேண்டிய இடம் வேற என சொல்லி அவரை அழைத்து செல்கிறார். வீட்டில் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளை ரொம்ப சுமார் தான் போல எனக் கூற காசை வச்சு யோசிக்காத நல்ல இடமானு பார்க்கணும் என்கிறார்.

என்னுடைய மருமகளை பாருங்க என ரோகிணி மற்றும் ஸ்ருதி குறித்து விஜயா பெருமையாக பேசுகிறார். அப்போ வரும் முத்து மற்றும் மீனாவிடம் அண்ணாமலை நல்லபடியா முடிஞ்சதா எனக் கேட்க எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது இங்க ஒரு வேலை இருக்கு அதான் இப்போ வந்தோம் என்கிறார்.

siragadikka aasai

என்னாச்சு என அண்ணாமலை கேட்க மனோஜ் மற்றும் ரோகிணியை அழைக்கிறார் முத்து. பாட்டி ஒரு நரி கதை சொல்லுவாங்க அந்த நரி பல வேஷம் போடும். ஆனால் ஒரு நாள் அதெல்லாம் உடைந்து விடும் எனக் கூற ரோகிணி இப்ப எதற்கு தேவையில்லாம பேசுறீங்க. என்ன விஷயம் எனக் கேட்கிறார். ஒருத்தர் வந்திருக்காங்க எனக்கூறி மணியை உள்ளே அழைக்கின்றனர்.

ரோகிணி கடுமையாக அதிர்ச்சி அடைய விஜயா மற்றும் மனோஜ் சந்தோஷத்தில் ஓடுகின்றனர். அவரை அழைத்து வந்து உட்கார வைத்து பேச மணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ரோகிணி என்ன விஷயமாக வந்தீங்க அங்கிள் என்கிறார்.

முத்து அங்கிள்னா மாமா தானே. இவர் யாருக்கு மாமா தெரியுமா பரசு மாமா பொண்ணு புருஷனுக்கு மாமா என்கிறார். குடும்பத்தினர் புரியாமல் முடிக்க அப்ப இவங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா என விஜயா கேட்கிறார். இவர் லண்டனுக்கே சென்றதில்லை பாஸ்போர்ட்டே இல்லை என்கிறார் முத்து.

ரோகிணி மணியை அந்த இடத்தை விட்டு நகர்த்த முக்கிய வேலையா வந்தீங்களா அங்கிள். ரூம் இருந்தா அங்க போய் பேசுவோம் என அவரை கிளப்ப பார்க்க முத்து அதெல்லாம் இங்கையே பேசலாம் எனக் கூறி முத்து அக்மார்க் சென்னை ஆள். இவர் மாமா ரோகிணிக்கு இல்லை என உண்மையை உடைக்கிறார்.

இருந்தும் ரோகிணியே இதுபோல நிறைய கனவு கண்டு இருப்பதால் அவரே கனவு காண்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்னும் ஒரு சில எபிசோட் போனால் மட்டுமே இதுதெரியலாம். பார்ப்போம்!

Next Story