சிறகடிக்க ஆசை சிட்டி ரோபோக்கே கோபம் வந்துடுச்சு… ரோகிணி சிக்கிட்டாங்கப்பா!

siragadikka aasai
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜ் முத்துவிடம் என்ன லூசு மாதிரி பேசுற எனக் கேட்க நான் லூசு மாதிரி பேசலை. நீ தான் லூசாகிட்ட அதை செஞ்சது உன் மனைவி என்கிறார். உடனே மணியை பார்த்து அய்யா இப்பவாது உண்மையை சொல்லுங்க என்கிறார். மீனா ஒரு குடும்பத்தையே ஏமாத்தி இருக்கீங்க எனக் கூறி திட்டுகிறார்.
இதில் எழுந்திருக்கும் பிரவுன் மணி மன்னிப்பு கேட்டு நான் ரோகிணி மாமா இல்லை. கறிக்கடை தான் வச்சிருக்கேன். எனக்கு நாடகத்தில் நடிக்கும் ஆர்வம் உண்டு. அப்போ ரோகிணி தோழி வித்யா என்னிடம் வந்து இப்படி நடிக்க வேண்டும் எனக் கூறியதாக ஆரம்பத்தில் இருந்து நடந்த எல்லா விஷயத்தை சொல்கிறார்.
அண்ணாமலை அப்போ அவர் அப்பா இறந்தது எனக் கேட்க அதெல்லாம் ரோகிணி சொன்னத்தை தான் சொல்கிறேன் என்கிறார். அப்போ ரோகிணி மலேசியாவில் இருந்து வரலையா எனக் கேட்க எனக்கு தெரியாது என்கிறார்.
இதனால் கடுப்பான மனோஜ் இவரை போலீஸில் பிடிச்சு கொடுக்கணும் என்க முத்து அப்போ உன் பொண்டாட்டி பார்லர் அம்மாவும் தான் உள்ளே போகும் எனக் நக்கலடிக்கிறார். அண்ணாமலை கடுப்பாகி ரோகிணியிடம் உன்னை நாங்க பிரிச்சா பார்த்தோம். விஜயா உனக்கு சப்போர்ட் செஞ்சா நீ ஏன் இப்படி செஞ்ச எனக் கேட்கிறார்.

siragadikka aasai
ஏற்கனவே காசு விஷயத்தில் ஒன்னு பண்ணீங்க. அதான் பெரிய பிரச்னைனு நினைச்சா இப்போ அதை விட பெரிய விஷயத்தை பண்ணி இருக்கீங்க. இப்படியே போனா நல்லதே இல்ல என்கிறார். மனோஜிடம் இதுக்கு நீயும் உடந்தையா எனக் கேட்க எனக்கும் புரியலைப்பா. நானே யார் கூட வாழ்றேன் எனத் தெரியலை என்கிறார்.
முத்து மட்டும் கண்டுபிடிக்கலை என்றால் எங்களை இன்னும் ஏமாத்தி இருப்ப. உனக்கு என்ன பிரச்னை எனக் கேட்க ரோகிணி பேச வரும் போது விஜயா நிறுத்துடி. வாய தொறந்தாலே முழுசா பொய் சொல்லுற எனக் கத்த அண்ணாமலை விஜயாவிடம் பொறுமையாக பேசு என்கிறார்.
இன்னும் என்ன பொறுமையா பேச சொல்றீங்க. நான் இவ்வள எவ்வளோ நம்புனேன். நான் கட்டி வந்த மருமகள்னு பெருமையை பேசுனேன். ஆனா இவ பித்தலாட்டம் செய்ற. கறிக்கடைக்காரனை அழைச்சு வந்து மாமானு சொல்லி அவருக்கு என்ன பணிவிடை செய்ய வச்சிட்டா என ரோகிணியை அடிக்கிறார்.
முத்து, தலையில தூக்கி வச்சிட்டு கொண்டாடுனீங்க. இப்போ செஞ்சிட்டாங்க என்கிறார். அவன் என்ன கேக்கிறான் பாரு. அவன் சொல்றதும் சரிதானே நான் அப்படிதானே இருந்தேன் என்கிறார். ரோகிணியின் ரூமில் இருந்த பொருட்களை தூக்கி அடித்து அவரை வெளியில் போ எனக் கத்துகிறார்.