பார்வதி மீது பழி போட்ட விஜயா… ரோகிணி பொய் மூட்டையால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்காரே!

siragadikka aasai
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடின் தொகுப்புகள்.
மனோஜிடம் அண்ணாமலை ரோகிணியை சென்று அழைத்து வர கூறுகிறார். ஆனால் மனோஜ் நான் அம்மா பேச்சை மீறமாட்டேன். நீங்க என் விஷயத்தில் தலையிடாதீங்க என கூறுகிறார். இதைக் கேட்கும் முத்து அப்பாவிடம் ஏன் இப்படி பேசுற. அவர் இல்லன்னா நம்ம இல்ல என்று கோபப்படுகிறார்.
ரோகிணி செஞ்சது தப்பு. அதுக்கு அம்மா கொடுத்திருக்க தண்டனை தான் சரி. அம்மா சொல்ற வரையும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் இந்த வீட்ல இருக்காது உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லுங்க நான் வெளியில் போய் விடுகிறேன் என்கிறார்.
மறுபக்கம் பார்வதி வீட்டிற்கு வரும் விஜயா வீட்டில் நடந்த விஷயங்களை கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் பார்வதி. மூன்று மருமகளில் உனக்கு ரோகிணிய தானே ரொம்ப பிடிக்கும். அவளே இப்படி பண்ணிட்டாலா எனக் கேட்க கடுப்பாகிறார் விஜயா.

எல்லாம் உன்னால தான் என பார்வதியிடம் விஜயா கூட உனக்கு நான் எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி வச்சிருக்கேன் எல்லாரும் ஏமாத்துறவங்களா இருக்காங்க. அதுவும் இல்லாம ரோகிணி பத்தி எனக்கு தெரிஞ்சது தான் நான் உன்கிட்ட சொன்னேன். மனோஜ்க்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லவில்லை என்கிறார்.
உடனே விஜயா எனக்கு கொஞ்ச நேரம் தனியா விடு என கடுப்படித்து விட்டு செல்கிறார். வீட்டில் முத்து மற்றும் மீனா சோகமாக உட்கார்ந்து இருக்க அப்பொழுது ரவி முத்துவிற்கும், ஸ்ருதி மீனாவிற்கும் கால் செய்கின்றனர். இவங்களுக்குள்ள எதுவும் சண்டையோ என பயந்து இருவரும் போனை எடுக்கின்றனர்.
Also Read: விக்ரமுக்கு நேரம் சரியில்லப்பா… வீர தீர சூரனுக்கு எதிராக கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
வீட்டில் நடந்த விஷயங்களை கூற இருவரும் அதிர்ச்சி அடைந்து உடனே கிளம்பி வருவதாக கூறிவிடுகின்றனர். மனோஜ் வெளியில் கிளம்பி செல்வதை பார்த்த முத்து மற்றும் மீனா இவர் எங்க போறாரு என பேசிக்கொள்ள என் கணக்குப்படி பாருக்கு தான் செல்வான் என முத்து கூறுகிறார்.
அதுபோல மனோஜ் தன்னுடைய நண்பருடன் உட்கார்ந்து சரக்கடித்துக் கொண்டிருக்கிறார். மீனா பார்வதிக்கு கால் செய்து விஜயா குறித்து விசாரிக்க அவர் வீட்டில் நடந்த விஷயங்களை கேள்விப்பட்டதாகவும் தற்போது விஜயா கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறிக் கொண்டிருக்கிறார்.