மனோஜால் கண்ணீர் விடும் அண்ணாமலை… சீதா காதல் விஷயத்தில் எடுத்த முடிவு!

by Akhilan |   ( Updated:2025-03-29 00:27:58  )
மனோஜால் கண்ணீர் விடும் அண்ணாமலை… சீதா காதல் விஷயத்தில் எடுத்த முடிவு!
X

siragadikka aasai

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டுக்கான தொகுப்புகள்.

குடித்துவிட்டு போலீஸ் நிலையத்தில் இருக்கும் மனோஜ் என் தம்பி யாரு தெரியுமா என அலம்பல் செய்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வரும் முத்து, அண்ணாமலை இதை பார்த்து அதிர்ந்து நிற்கின்றனர். அருணும் அந்த நேரத்தில் வருகிறார்.

என் மேல உள்ள கடுப்பில தான் இப்படி பண்றீங்களா? என் அண்ணனை பிடிச்சி வச்சிருக்கீங்களா எனக் கேட்க உன் அண்ணனே எனக்கு இப்பத்தான் தெரியும் என்கிறார். மனோஜை முத்துவை போலீஸை அடிடா என்கிறார். அருணும் அதான் அண்ணன் சொல்றாருல எனக் கலாய்க்கிறார்.

ஒருத்தன் ரவுடி, இன்னொருத்தன் குடிக்காரன். பசங்களை ஒழுங்கா வளர்க்க தெரியாதா எனக் கேட்கிறார். இதில் கடுப்பாகி முத்து சண்டைக்கு போக அண்ணாமலை அவரை வெளியே அனுப்புகிறார். இதையடுத்து அண்ணாமலை கெஞ்சி கேட்கிறார்.

அருண் இன்ஸ்பெக்டர் வந்ததும் கேட்டு கூட்டிட்டு போங்க எனக் கூறிவிடுகிறார். இன்ஸ்பெக்டரிடம் கேட்க அவரும் அண்ணாமலைக்காக அனுப்பி விடுகிறார். வீட்டிற்கு வரும் வரை மனோஜ் புலம்பி கொண்டே வருகிறார். வீட்டிற்குள் வந்து அம்மா அம்மா எனக் கூப்பிடுகிறார்.

அவங்க இல்லை என முத்து சொல்ல அதான் எனக்கும் தெரியுமே எனக் கூற என் பொண்டாட்டி பொய் சொன்னா அம்மா கோச்சிக்கிட்டு போயிட்டாங்க என்கிறார். இதை தொடர்ந்து மனோஜை சமாதானம் செய்து உள்ளே படுக்க வைக்கிறார்.

அண்ணாமலை என் பசங்களை நல்லபடியா படிக்க வைக்கணும் நினைச்சேன். இப்போ நிம்மதியே இல்லாம இருக்கேன் என புலம்ப முத்து சமாதானம் செய்கிறார். தான் விஜயாவை சமாதானம் செய்து அழைத்து வருகிறேன் என அவர் கிளம்ப முத்துவை மனோஜை பார்த்துக்கொள்ள சொல்லி கிளம்புகிறார்.

சீதா மற்றும் அருண் இருவரும் பஸ் ஸ்டாண்டில் போனில் காதல் விஷயம் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். எப்போ சம்மதம் சொல்லுவ என அருண் கேட்க சீதா யோசிக்கணும் என்கிறார். பின்னர் பஸ் ஸ்டாண்ட் அருகில் பைக்கை நிறுத்துவேன். நீ ஏறி உட்கார்ந்தா சம்மதம் என எடுத்துக்கொள்வதாக சொல்கிறார்.

அதுபோல அவர் பைக்குடன் வந்து நிறுத்த பின்னாடி ஒருத்தர் போனில் பிடிச்சிட்டா வெயிட் செய்ய கூடாது. உடனே அதை செஞ்சிடணும் எனக் கூறி சீதாவும் பைக்கில் ஏறி அமர்ந்து தன்னுடைய காதலை ஒப்புக்கொள்கிறார். இனிதான் சகலை சண்டை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story