வாழ்க்கையே விரக்தியில் முத்து செய்த விஷயம்..! திக்கு தெரியாமல் இருக்கும் மீனா..!

by Akhilan |
வாழ்க்கையே விரக்தியில் முத்து செய்த விஷயம்..! திக்கு தெரியாமல் இருக்கும் மீனா..!
X

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்துவின் காரை வழியில் பைனான்சியர் ஆட்கள் பிடிங்கி சென்று விட மீனாவுடன் ஆட்டோவில் வந்து மாமியார் வீட்டில் இறங்குகிறார். அங்கு இருக்கும் வீட்டு ஓனர் என்னப்பா ஆட்டோவில் வர கார் எங்க எனக் கேட்க முத்து உண்மையை சொல்ல ட்ரை செய்கிறார். உடனே மீனா கார் கார் மெக்கானிக் செட்ல இருக்கு என்று பொய் சொல்கிறார்.

ஓனர் அம்மா அடுத்த தீபாவளிக்கு கையில் குழந்தையோட வாங்க என்க, முத்து நாங்க எதோ குழந்தையை தூக்கிட்டு வந்தா போலீஸ் தான் பிடிக்க வரும் என்கிறார். அதையடுத்து மீனா அம்மா ஆரத்தி எடுக்க வர எனக்கு ஏன் எடுக்கிறீங்க உங்க பொண்ணுக்கு எடுங்க அவதான் நிறைய பண்ணிருக்கா என்கிறார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் படத்தை டிராப் செய்கிறாரா ரஜினிகாந்த்!.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானா?..

வீட்டுக்குள் வரும் முத்து கெத்தாக சேரில் உட்கார்ந்து கொண்டு மீனா தப்பை பட்டியல் வைக்கிறார். இதையடுத்து பைனான்சியர் செய்ததையும் சொல்கிறார். உடனே தன் குடும்பத்தினருக்கு வேலை சொல்லி அனுப்பிய மீனா முத்துவை அழைத்து வந்து விஷேச நாள் அமைதியா இருங்க என்கிறார்.

முத்து நீ நடந்துக்கிறதுல இருக்கு என்கிறார். நான் சரியா தான் நடந்துப்பேன் என மீனா கூற வெளியில் போவதாக சொல்லி முத்து பைனான்சியரை பார்க்க கிளம்பி விடுகிறார். அவரை பார்த்த முத்து ஒரு வாரம் தான பணம் கட்ட லேட் ஆச்சு. காரை கொடுங்க என்கிறார். என் ஆளுங்க முன்னாலையே என் சட்டையை பிடிச்சீயே. இப்போ மன்னிப்பு கேட்டு காரை எடுத்திட்டு போ என்கிறார்.

நீங்க இல்லனா வேற ஆளே இல்லையா. என்கிட்ட திறமை இருக்கு. கார் கொடுக்க ஆயிரம் பேரு எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். வீட்டில் ரோகினிக்கு அவங்க அம்மா கால் செய்ய இப்போ எதுக்கு நீ கால் செஞ்ச எனத் திட்டுகிறார். தீபாவளி வாழ்த்து சொல்லத்தான் கால் செய்ததாக கூற அமைதியாகும் ரோகினி சரி நீ பத்திரமா இரு என அவரிடம் பேசிவிட்டு க்ரிஷிடமும் பேசுகிறார்.

இதையும் படிங்க: என்னை உள்ளே அனுப்பணுமா… இப்போ இந்த விஷயம் நடக்கணும்… ப்ரதீப் ஆண்டனியின் ஓபன் கண்டிஷன்..!

மாப்பிள்ளையை அழைச்சிக்கிட்டு வரியா கோயிலுக்கு குடும்பமா போகணும்னு ஆசை என்கிறார். ஆனால் ரோகினி நேரம் வரும் போது பார்க்கலாம் என்கிறார். இதையடுத்து மீனா வீட்டுக்கு முட்ட முட்ட குடித்துவிட்டு வருகிறார் முத்து. அந்த ஓனரிடம் கார் பற்றிய உண்மையை சொல்லணும் என கதவைத் தட்ட அங்கு வரும் மீனா ஸ்வீட் கொடுக்க வந்ததாக சமாளித்து விடுகிறார்.

இதையடுத்து முத்துவை சாப்பிட உட்கார வைத்து வகை வகையாக பரிமாறி வைத்து இருக்கிறார் மீனா அம்மா. அதையடுத்து மீனா கடுப்பில் உட்கார்ந்து இருக்க சாப்பிடுங்க எனக் கூறவும் எல்லாம் போச்சு. வாடகை காரும் போச்சு. சொந்த காரும் போச்சு. எல்லாம் உங்க பொண்ணால தான் என உளருவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Next Story