---Advertisement---

Siragadikka Aasai: மீனாவால் தர்ம அடி வாங்கிய விஜயா? பரபரப்பாகும் தேர்தல் களம்!

Published on: April 9, 2026
---Advertisement---

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சீன் நம்பர் ஒன் தொடராக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் தற்போது தேர்தல் களம் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அடுத்தடுத்த சுவாரஸ்ய காட்சிகள் தொடங்கி இருக்கிறது. 

அதிக எபிசோட்களாக மொக்கை கதையாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில் தற்போது பூ கடை சங்க தேர்தல் என்ற கதைக்களத்தினை கொண்டு வந்துள்ளனர். மீனாவும் சிந்தாமணியும் இந்த தேர்தலில் மோதிக்கொள்கின்றனர்.

சிந்தாமணிக்கு தோல்வி பயம் வந்த நிலையில் ஆள் வைத்து குத்த பார்க்க முத்துவை நோக்கி வந்தவரை முன்னால் வந்து மீனா தடுக்க அவருக்கு கத்தி குத்து நடந்து இருக்கிறது. இதை தொடர்ந்து அவருக்கு ஆதரவு பெருகும் என பார்த்தால் ஸ்ருதி செய்த கருத்து கணிப்பில் 35 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார்.

இதனால் மீனாவை வெற்றி பெற வைக்க என்ன செய்யலாம் என ப்ளான் செய்து அதற்காக டிஜிட்டல் முறையில் பிரச்சாரம் ஒரு பக்கம் சூடு பறக்க செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க விஜயா வெறுப்பில் மீனாவின் போஸ்டர்களை கிழிக்க செல்கிறார்.

அங்கு வந்த மீனாவின் தோழிகள் விஜயாவை அடி வெளுக்க அய்யோ அம்மா என கதறிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து செல்கிறார். அடி ஓவராக விழுந்து இருக்க வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு இருக்கிறார். முத்து அப்போ வந்து விஜயா பெயரை சொல்லாமல் அண்ணாமலையிடம் நடந்த விஷயத்தை மாட்டிவிட்டு செல்கிறார். 

இதனால் மீனாவிடம் இனிமேல் இது போல பண்ணாதே என அவரை திட்டிவிட்டு செல்கிறார். மீனா இந்த தேர்தலில் ஜெயிக்க போறாரா என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்கும் அளவுக்கு வெறுத்தனமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.