Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் கோயிலுக்கு வரும் மீனா சாமியிடம் தன் பிரச்னை குறித்து வேண்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் பெண்மணி எப்படி மா இருக்க. சீதா சொன்னா எல்லா விஷயத்தினையும். இப்போ இருக்க பிள்ளைகளே இப்படிதான் யாரையும் யோசிக்கிறது இல்ல.
பாவம் ஒரு பக்கம். பழி ஒரு பக்கமுனு ஆச்சு. உன் புருஷன் தங்கமானவன். அவன்கிட்ட உன் பக்க நியாத்தை சொல்லு எல்லா சரியாகிடும் எனக் கூற மீனாவும் அந்த முடிவுடன் முத்துவை காண கிளம்புகிறார். அடுத்து ஸ்ருதிக்காக ரவி சமைத்து கொண்டு இருக்கிறார். அப்போ பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ருதி பெத்தவங்களால தான் இவ்வளவோ பிரச்னை.
இதையும் வாசிங்க:ராக் ஸ்டாரை மாத்தி ராபரி ஸ்டார்னு வச்சிக்கோ!. அனிருத்தை விளாசிய புளூசட்ட மாறன்…
இல்லைனா நம்ம இப்படி ஓடிப்போய் கல்யாணம் பண்ணி இருக்க வேண்டாம் எனப் பேச ஸ்ருதி கோபம் ஆகிவிடுகிறார். அப்போ உனக்கு நான் தான் பிரச்னையா என சண்டை போட்டு விட்டு டப்பிங் ஸ்டுடியோவுக்கு கிளம்பிவிடுகிறார். ரோட்டில் நடந்து போய் கொண்டு இருக்கும் ஸ்ருதியை காரில் ஃபாலோ செய்கிறார் பிஜூ.
அப்போது ரவி வந்து ஸ்ருதியிடம் பேசி பைக்கில் ஏற சொல்கிறார். கடுப்பில் இருக்கும் ஸ்ருதி ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார். இதை பார்த்த பிஜூ நீ தான் அவ புருஷனா? என்னையே ஏமாத்திட்டீங்கள எனக் கடுப்பாகிறார். டப்பிங் ஸ்டுடியோ வரும் ஸ்ருதி இப்போலாம் ஆசை அறுவது நாள் இல்ல. இரண்டே நாள் தான் போயிடும் எனக் கடுப்பாக பேசுகிறார். அடுத்து முத்து தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
இதையும் வாசிங்க:பகல் கொள்ளையா இருக்கே!.. லியோ படத்தால் தியேட்டர்களுக்கு நஷ்டம்!.. திருப்பூர் சுப்பிரமணியம் பகீர்!..
கல்யாணம் செய்தால் வாழ்க்கையே போயிடும் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அவரை காண மீனா வர கடுப்பாகி காரில் கிளம்ப பார்க்கிறார். ஆனால் மீனா நகராமல் அங்கையே நிற்கிறார். கடுப்பாகி வந்து மீனாவை திட்டுகிறார் முத்து. அம்மாவும் என்ன புருஷன் வீட்டுக்கு போக சொல்றாங்க.
நீங்களும் வரக்கூடாதுனு சொன்னா நான் என்ன பண்றது எனக் கேட்க பின்ன உனக்கு சிலையா வைப்பாங்க என்கிறார். என்பக்கம் நியாத்தையே கேட்காம கோபப்படுறீங்கள. ஒருநாள் நீங்க என்ன தேடி வருவீங்க. அப்போ நான் இருக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…