நாலா பக்கமும் ரோகினியை சுற்றி வளைத்த பிரச்னை… இப்பையாது மாட்டி விடுங்களேன்பா!
Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் முத்து, மீனாவை அழைத்து தாலி வாங்கிட்டு வந்த விஷயத்தினை கூறி அதை கொடுக்கிறார். நான் சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு என மீனா பெருமிதம் கொள்ள என்ன பெரிய செயினா வாங்கிட்டு வந்தான் என்கிறார். அதையும் செய்வாரு என்கிறார் மீனா.
அவன் பொண்டாட்டி சொன்னதை அவன் செஞ்சிருக்கான். மத்ததையும் அவன் செய்வான் என்கிறார் அண்ணாமலை. பின்னர் மீனாவை தாலி கட்டிக்கொள்ள சொல்ல இப்போ வேண்டாம் என்கிறார் மீனா. ஏன் அதுக்கு எதுவும் நல்ல நாள் பாத்து வச்சிருக்கியா எனக் கேட்க அதுக்கு ஒரு பிளான் இருப்பதாக மீனா சொல்லி விடுகிறார். முத்துவும், மீனாவும் ரூமுக்கு சென்று அங்கு பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: லேட்டாகும் தலைவர் 171?.. கப்புனு பொண்ணு கையைப் புடிச்சு லோகேஷ் கனகராஜிடம் கொடுத்த கமல்ஹாசன்!..
இதற்கிடையில் விஜயா ரோகினியை அழைத்துக்கொண்டு ரூமுக்குள் செல்கிறார். இந்த முத்துக்கு நகை எடுக்க எப்படி பணம் கிடைத்தது என்று கேட்கிறார். உடனே ரோகினி எனக்கும் அதான் ஆன்ட்டி டவுட்டா இருக்கு டிரைவர் அவ்வளவு சம்பாதிக்க முடியுமா என்கிறார் ரோகினி. உடனே விஜயா மீனா கடைய போட்டதும் நல்லா சம்பாதிக்கிறாள்.
அவ தான் பணத்தை கொடுத்து வாங்கி வரச் சொல்லிட்டு நடிப்பதாக கூறுகிறார். இருக்கும் ஆன்ட்டி என்று ரோகினியும் கூறுகிறார். உடனே விஜயா நீயும் இப்படி நகை வாங்கி போட்டுக்கோ எனக் கூற ரோகினிக்கு அதிர்ச்சி ஆகிவிடுகிறது. அதான் தாலி பிரிச்சி கோர்க்கும் போது வாங்கலாமே எனக் கேட்க அப்போ அதை பாத்துக்கலாம் இப்போ இந்த மீனாக்கு நீ குறைஞ்சவ இல்லனு காட்டணும்.
உங்க அப்பாக்கிட்ட சொன்னா கிலோ கணக்கில் போடுவாரு என்கிறார் விஜயா. அப்போ ரோகினிக்கு பிரவுன் மணி நியாபகம் வருகிறது. பின்னர் நான் பேசட்டுமா என ரோகினி கேட்க இல்ல நீங்க பேசுனா நல்லா இருக்காது. நானே பேசுறேன் எனக் கூறிவிடுகிறார். பிறகு விஜயா சரி மறக்காம பேசிடு என்று சொல்லி வெளியே செல்கிறார். பார்லரில் இருக்கும் ரோகினி வீட்டில் நடந்ததை கேட்டு வித்யா சிரிக்கிறார்.
இதையும் படிங்க: இன்னைக்கு இருக்குற இடத்தை விட இன்னும் பெருசா ஆசைப்படுவேன்!.. லவ்வர் மணிகண்டன் ஓபன் டாக்!
இப்ப நான் என்ன பண்றது எனக் கேட்க எப்பையும் மாட்டத்தானே போறோம் என்கிறார் வித்யா. எப்படியாவது இதை முடிச்சிவிடு எனவும் கூறிக்கொண்டு இருக்க அப்போ பார்லரில் வேலை செய்யும் பெண் மாமா வந்ததாக வந்து சொல்கிறார். வெளியே வந்து பார்க்க வசீகரன் நிற்கிறார். இதில் ரோகினி அதிர்ச்சியாக காசு வேண்டும் எனக் கேட்கிறார். ரோகினி இரண்டு நாட்கள் டைம் கேட்கிறார்.
இங்கு கோயிலுக்கு வரும் முத்துவிடம் டிரெஸ் ஒன்றை கொடுக்கிறார் மீனா. அவரும் மாத்திக்கொண்டு வரப்போகிறார். இங்கு அய்யரிடம் கடை வச்ச விஷயத்தினை கூறி சந்தோஷப்பட்டு கொள்கிறார் மீனா. அவரும் மீனாவுக்கு நல்ல கணவர் கிடைச்சிருக்காரு. மீனா நல்ல பொண்ணு தொட்டதெல்லாம் துலங்கும் எனவும் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: கும்பலா உட்கார்ந்து கள்ளக்காதல் பத்தி பேசும் பிக் பாஸ் டீம்!.. அன்பு கேங் அம்மாவை காணோமே?