சத்யாவை போட்டு வெளுத்துவிட்ட முத்து… கண்ணீரில் மீனா… ஹாப்பி மூடில் ரவி-மனோஜ்
Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் மாப்பிள்ளை இப்படி ரவுடித்தனம் செஞ்சிட்டு இருக்காரு என மீனா அம்மா கூறிக்கொண்டு இருக்கும் போது முத்து அங்கு வருகிறார். உடனே முத்து ஏன் அத்தை நிறுத்திட்டீங்க? பேசுங்க என்கிறார். வெளியில் ஆள் வச்செல்லாம் பேச வச்சிருக்கீங்க போல என்கிறார்.
உங்களால் என் வாழ்க்கையே போச்சு. இங்க எந்த மூஞ்சை வச்சிட்டுக்கிட்டு வந்தீங்க என்கிறார். இதனால் கடுப்பாகும் முத்து சத்யாவை போட்டு மீண்டும் அடித்து துவைக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் அவர்களை பிரித்து விடுகின்றனர். இங்க வந்ததுக்கு என் புத்தியை செருப்பால அடிக்கணும் என்று கோபப்பட்டு முத்து கிளம்பிவிடுகிறார்.
இதையும் படிங்க: பாடி சேஃப் பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!.. பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மாறிய ரம்யா பாண்டியன்!…
வீட்டுக்கு வரும் மீனா அண்ணாமலையிடம் நடந்த விஷயங்களை கூறிவிடுகிறார். இதனால் விஜயா குரங்குக்கு ட்ரெஸ் போட்டுவிட்டாலும் அது செய்ற வேலையை தான் செய்யும் என்கிறார். உடனே முத்து குரங்குக்கு எதுக்கு ட்ரெஸ்ஸு? சும்மா பேசணும்னு பேசக்கூடாது என்கிறார்.
பின்னர் மீனாவிடம் சென்று ஏன் அப்பாகிட்ட இதையெல்லாம் சொல்லுற? என் கஷ்டத்தினை மாமாக்கிட்ட சொன்னேன் என்கிறார். என் கஷ்டத்தை யாருகிட்ட சொல்ல எனக் கேட்கும் போது என்கிட்ட சொல்லுங்க என்கிறார் மீனா. அடுத்து மாடியில் முத்து நடந்து கொண்டு இருக்க அங்கே மனோஜ் பாயுடன் வருகிறார்.
இதையும் படிங்க: காதலியா நினைக்கனுமா? த்ரிஷா பத்தி மிஷ்கின் சொன்னதை கேளுங்க.. இதுதான் அல்டிமேட்
ஸ்ருதி அம்மா கொடுத்த ஆலப்புழா டிக்கெட்டை கொடுத்து ஹனிமூன் செல்லலாம் என்கிறார். நான் வரலை. வேலை இருக்கு என ரவி கூற ஓசியில் தான் கூப்பிட்டேன் எனக் கூற எனக்கு ஒன்னும் ஓசி டிக்கெட் வேண்டாம் என அவரும் மாடிக்கு பாயுடன் கிளம்பிவிடுகிறார். மூன்று பேரும் பழைய விஷயங்களை பேசிக்கொண்டு இருக்கின்றனர். பின்னர் கல்யாணம் குறித்தும் கலாய்த்து கொண்டுள்ளனர்.
அப்போ சமையலறையில் மீனா டீ போட்டுக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் ஸ்ருதி எனக்கும் டீ வேண்டும் எனக் கேட்கிறார். ரவி தூங்கிட்டாரா எனக் கேட்க மாடிக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார். அப்போ அங்கு வரும் ரோகினி தனக்கு டீ கேட்க உங்களுக்கும் புருஷன் கூட பிரச்னையா எனக் கேட்க ஆமாம் என்கிறார். புருஷன் சொன்னாலே பிரச்னை தான் போல என அவர் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.